Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வியூகமெல்லாம் வேஸ்ட்.. இப்பவும் கெட்டுப் போகலை! பீகார் பிகேவை பார்த்து பாடம் படிக்கனும் விஜய் சார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பீகாரில் பிரசாந்த் கிஷோரின் தோல்வி இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறி இருக்கிறது. பிரதமர் மோடி தொடங்கி ஜெகன்மோகன் ரெட்டி வரை அவர்களை நான் தான் பதவியில் அமர வைத்தேன் என தம்பட்டம் அடித்துக் கொண்டவரால் ஒரு எம்எல்ஏ பதவியை கூட பெற முடியாதது அவரது அரசியல் படுதோல்வியை காட்டி இருக்கிறது. அடிப்படை கள அரசியலுக்கும் வியூக அரசியலுக்கும் இடையில் புரிதலின்றி இருந்தது தான் இந்த தோல்விக்கு காரணம் எனக் கூறும் அரசியல் பார்வையாளர்கள், விஜய் இதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என சொல்கின்றனர்.

பீகாரில் இந்திய கூட்டணி வெற்றி எப்படி அரசியல் உலகில் பேசப்படுகிறதோ? அதே போல் தான் பிரபல வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் தோல்வியும் பேசப்படுகிறது. காரணம் பீகார் தேர்தலில் அவர் வாங்கிய அடி அப்படி.

பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமிர்தர் சிங், ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரோடு தேர்தல் காலங்களில் பணியாற்றியவர் தான் இந்த பிரசாந்த் கிஷோர்.

Prashant Kishor Vijay tvk

பீகார் தேர்தல்

இந்தியா முழுவதும் பல முதல்வர்களை உருவாக்கினேன் என ஊடகங்களில் பேட்டி கொடுத்து பெருமைப்பட்டுக் கொண்ட அவர், பீகாரில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துகிறேன் என ஜான் சுராஜ் என்ற கட்சியை ஆரம்பித்தார். வழக்கம்போல் அவருக்கும் ஊடக வெளிச்சம் கிடைத்தது. தொடர்ந்து கிராமப்புற இளைஞர்களை சந்திக்கிறேன் என வீதி வீதியாக பிரச்சாரம் செய்தார். அவரது வியூகத்துக்கும் அரசியலுக்கும் இடையே நிறைய வித்தியாசம் இருந்தது. அதற்கு பரிச்சை போல வந்தது தான் பீகார் சட்டமன்றத் தேர்தல். 243 தொகுதிகளில் தனித்து வேட்பாளர்களை களம் இறக்கினார் பிரசாந்த் கிஷோர். சூறாவளி பிரச்சாரம் செய்தார். அவரது நிறுவனமும் இறங்கி வேலை பார்த்தது. ஆனால் தேர்தல் முடிவுகள் அவருக்கு பலத்த இடியாக அமைந்தது.

பிரசாந்த் கிஷோர் தோல்வி

தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்ததோடு இரண்டு மூன்று தொகுதிகளில் மட்டுமே டெபாசிட்டை பெற முடிந்தது. பிற தொகுதிகளில் டெபாசிட் கூட கிடைக்கவில்லை என்பது பரிதாபம். பிரசாந்த் கிஷோரின் இந்த படுதோல்வி இந்தியா முழுமைக்கும் பேசு பொருளாகி இருக்க காரணம் உண்டு. வியூகங்களால் முதல்வர்களை உருவாக்க தெரிந்த பிரசாந்த் கிஷோரால் ஒரு எம்எல்ஏ வை கூட ஏன் உருவாக்க முடியவில்லை என்பதற்கும் பதிலும் உள்ளது.

ஜான் சுராஜ் தோல்வி

பாஜக, திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடிப்படையில் மாநில தலைமை தொடங்கி வார்டு அளவில் கட்சி கட்டமைப்பை மிக வலுவாக வைத்திருப்பவர்கள். ஏற்கனவே பலமாக இருக்கும் ஒரு நபரிடம் சில ஐடியாக்களை மட்டும் கொடுத்து வெற்றி பெற வைப்பது வியூக அரசியலாக இருக்கலாம். ஆனால் 50 ஆண்டுகளுக்கு மேலாக கட்சியை உருவாக்கி, வளர்த்து, அஸ்திவாரம் தொடங்கி மிக வலுவாக கட்டமைத்து வைத்திருக்கும் இயக்கங்களை வெறும் வியூகத்தை வைத்தே சமாளித்து விடுவேன் என்ற மமதை தான் பிரசாந்த் கிஷோரின் தோல்விக்கு காரணம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

வியூக அரசியல்

மேலும் மக்களவைத் தேர்தல் சட்டமன்றத் தேர்தல்களை ஆளுங்கட்சிக்கு எதிரான எதிர்ப்பலை, ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளிட்டவற்றுக்கு எதிராக போராடிய கட்சிகளை தேர்ந்தெடுத்து அதிலும் வலுவாக இருக்கும் கட்சிகளை தேர்ந்தெடுத்து தான் பிரசாந்த் கிஷோர் பணியாற்றினார். அதனால்தான் வெற்றிக் குதிரைகளின் மீது ஏறி சவாரி மட்டும் செய்பவர் என்ற விமர்சனம் பிரசாந்த் கிஷோர் மீது வைக்கப்பட்டது. தேர்தல் முடிவுகள் மூலம் இதனை நன்கு உணர்ந்து இருப்பார் அவர்.

கள அரசியல்

அதே நேரத்தில் தமிழகத்தின் புதிய அரசியல் வரமான விஜயும் பிரசாந்த் கிஷோரிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். வெறும் பிம்பமும் வியூக அரசியலும் மட்டுமே வெற்றியை தந்து விடாது. தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வீட்டிலும் விஜய்க்கு ரசிகர்கள் இருக்கலாம். ஆனால் அவர்கள் தொண்டர்களாகவும், நிர்வாகிகளாகவும், பூத் ஏஜென்ட்களாகவும் மாற்றப்பட வேண்டியது அவசியம். விஜயை தவிர ஒரு சில முகங்களை மட்டுமே தமிழகம் முழுவதும் தெரியும். அவர்களை வைத்து 234 தொகுதிகளிலும் போட்டியிட முடியாது.

விஜய் கட்சிக்கு சவால்

அரசியல் அனுபவம், கள நிலவரங்களை அறிந்த தலைவர்கள், பூத் கமிட்டி வரை இறங்கி வேலை பார்க்கும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் இருந்தால் மட்டுமே தேர்தலில் குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதத்தையாவது பெற முடியும். வெறும் திரை பிம்பத்தை மட்டுமே வைத்து வெற்றி பெற்று விடலாம் என நினைத்தால் சிரஞ்சீவிக்கும் பிரசாந்த் கிஷோருக்கும் ஏற்பட்டு நிலைதான் விஜய்க்கும் ஏற்படும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+