சென்னையில் மின்சார பஸ்களை இயக்க போகும் தனியார் நிறுவனம்.. அரசு ஊழியர்கள் இயக்க மாட்டார்கள்.. ஏன்?
சென்னை: சென்னையில் மிக விரைவில் மின்சார பேருந்துகள் வரவுள்ள நிலையில், முதல்முறையாகத் தலைநகரில் இந்த பேருந்துகளைத் தனியார் ஊழியர்கள் ஆப்ரேட் செய்யவுள்ளனர்.
மின்சார பேருந்துகளைக் கொண்ட பெருநகரங்களின் பட்டியலில் மிக விரைவில் சென்னையும் இணையப் போகிறது. எம்டிசி எனப்படும் சென்னை பெருநகரப் போக்குவரத்துக் கழகம் மிக விரைவில் 100 இ-பஸ்களை பெற உள்ளது.

தனியார் நிறுவனம் ஒன்றிடம் இருந்து இந்த இ பஸ்களை பெறத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான டெண்டர் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
தாழ்தள ஏசி பேருந்துகள்: இந்த தாழ்தள ஏசி பேருந்துகள் 2+1 என்ற முறையில் மொத்தம் 35 இருக்கைகளைக் கொண்டிருக்கும். இதில் நின்று கொண்டு பயணிப்போரையும் சேர்த்தால் ஒரே நேரத்தில் மொத்தம் 70 பேர் பயணிக்கலாம். இந்த தாழ்தள ஏசி பேருந்துகள் அடையாறு மற்றும் சென்ட்ரல் (பல்லவன் சாலை) டிப்போக்களில் இருந்து இயக்கப்படும் எனத் தெரிகிறது. முதற்கட்டமாக 27 வெவ்வேறு வழித்தடங்களில் இந்த பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளனர்..
தாம்பரம், பிராட்வே, திருப்போரூர் மற்றும் சென்னை சென்ட்ரல் என முக்கியமான மையங்களை இணைக்கத் திட்டமிட்டுள்ளனர். மொத்தம் 100 பேருந்துகளைக் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ள நிலையில், ஒவ்வொரு பேருந்திற்கும் சுமார் 1.2 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பேருந்துகளிலும் 8 மணி நேரத் திறன் கொண்ட பேட்டரிகள் இருக்கும். பகல் நேரங்களில் இவற்றை 30 நிமிடங்களில் ஃபாஸ்ட் சார்ஜ் செய்யும் வசதி இருக்கும். இரவில் பொறுமையாக 4 மணி நேரத்தில் சார்ஜ் ஆகும்.
எங்கே இயக்கப்படும்: இதற்கான டெண்டர் தான் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. டெண்டரை பெறும் நிறுவனம் மின்சார பேருந்துகளைத் தருவது மட்டுமின்றி அடையாறு மற்றும் சென்ட்ரல் ஆகிய இரண்டு டிப்போக்களிலும் சார்ஜிங் நிலையங்களையும் உருவாக்கும். ஜெர்மன் வங்கியில் இருந்து பெறப்படும் கடனை கொண்டு தமிழக அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த பேருந்துகளைத் தருவது மட்டுமில்லை.. ஆப்ரேட் செய்வதும் அதே தனியார் நிறுவனம் தான்.
இந்த ஒப்பந்தத்தின்படி, டெண்டரை பெறும் தனியார் நிறுவனத்திற்கு அரசு குறிப்பிட்ட தொகையை முன்கூட்டியே செலுத்திவிடும்.. அதேநேரம் முழு டிக்கெட் வருவாயும் தமிழக அரசுக்கே வரும். வேலை நேரத்தின் அடிப்படையில் ஒப்பந்ததாரருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டுமே தமிழக அரசு செலுத்தும்.
100 இ-பஸ்கள்: சென்னை பெருநகரில் அரசு பேருந்துகள் மட்டுமே இதுவரை ஓடும் நிலையில், முதன்முறையாக, 100 இ-பஸ்களை தனியார் ஊழியர்கள் இயக்க உள்ளனர். அரசு ஊழியர்கள் இந்த பேருந்துகளில் நியமிக்கப்பட மாட்டார்கள். அதற்குப் பதிலாக, அந்த தனியார் நிறுவனம் பயிற்சி பெற்ற ஓட்டுநர்களை நியமிக்கும். அந்த நிறுவனமே அவர்களுக்கான ஊதியத்தையும் தந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் சில சமயம் போக்குவரத்துக் கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை எடுக்க அரசு முயன்றது. இருப்பினும், அதற்குப் போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தன. தனியாக ஒப்பந்த ஊழியர்களை நியமிக்காமல் இளம் ஓட்டுநர்களுக்கு பஸ் இயக்க அரசு பயிற்சி அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தன. கடந்த காலங்களில் எதிர்ப்பை காட்டி இருந்தாலும் இந்த முறை தனியார் ஊழியர்களுக்கு ஊழியர்கள் சங்கமம் ஒப்புக் கொண்டதாகவே தெரிகிறது.
காரணம்: இது மின்சார பேருந்துகள். எம்டிசி ஊழியர்கள் இத்தனை காலம் டீசலில் இயங்கும் பேருந்துகளை இயக்கியே அனுபவம் பெற்றவர்கள். அப்படியிருக்கும் போது திடீரென மின்சார பேருந்துகள் என்பது அவர்களுக்குச் சிரமமாக இருக்கும். இதன் காரணமாகவே தனியார் ஊழியர்களுக்குப் போக்குவரத்துக் கழகம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
இந்த விவகாரம் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், "எம்.டி.சி.யின் அனைத்து மெக்கானிக்கள் மற்றும் பேருந்து பணியாளர்கள் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட பேருந்துகளை மட்டுமே கையாண்ட அனுபவம் கொண்டவர்கள்.. மின்சார பேருந்துகளை இயக்குவதில் எங்களுக்கு நிபுணத்துவம் இல்லை, பயிற்சி வசதிகளும் இப்போது இல்லை.
எனவே, தற்போதைய சூழலில் இதை சப்ளையர்களிடமே விட்டுவிடுவது நல்லது. என்ன நிலைமை என்பதைத் தொழிற்சங்கங்களுக்கு விளக்கியுள்ளோம், அவர்களும் இதை ஒப்புக்கொண்டனர். முதலில் இதைச் சோதனை முறையில் சென்னையில் ஆரம்பிக்கிறோம். சென்னையைத் தொடர்ந்து இந்த முன்னோடித் திட்டம் மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட மற்ற நகரங்களுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்படும்" என்றார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications