மன்னித்து விடுங்கள் ஷமி.. 2 ஆண்டுக்கு முன் ராகுல் போட்ட பதிவு.. இன்று வைரலாவது ஏன்? கவனிச்சீங்களா?
சென்னை: இன்று நடந்த உலககோப்பை அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி முகமது ஷமி இந்தியாவை இறுதி போட்டிக்கு அழைத்து சென்றுள்ள நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராகுல் காந்தி போட்ட எக்ஸ் பதிவு தற்போது வேகமாக இணையதளங்களில் பரவி வருகிறது.
50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இன்று மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் இந்த போட்டி நடந்தது.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோகித் ஷர்மா 47, சுப்மன் கில் 80 ரன்கள் எடுத்தனர்.
மேலும் விராட் கோலி தனது 50 வது ஒருநாள் போட்டிக்கான சதத்தை விளாசி சச்சின் தெண்டுல்கர் சாதனையை முறியடித்தார். அவர் 117 ரன்கள் குவித்தார். அதேபோல் ஸ்ரேயாஸ் அய்யரும் சதமடித்து 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் 50 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 397 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி 48.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்தியா 70 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முதல் அணியாக நுழைந்தது. நியூசிலாந்து அணியை பொறுத்தமட்டி்ல அதிகபட்சமாக டாரில் மிட்செல் சதமடித்து இருந்தார். அவர் 134 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கேப்டன் கனே வில்லியம்சன் 69 ரன்களும், கிளைன் பிலிப்ஸ் 41 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஷமி 9.5 ஓவர்கள் வீசிய முகமது ஷமி 57 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை கபளீகரம் செய்தார். மேலும் ஒரு கட்டத்தில் நியூசிலாந்தில் வில்லியம்சன், டாரில் மிட்செல் ஜோடி வலுவாக ஆடிவந்த நிலையில் வில்லியம்சன் விக்கெட்டை ஷமி வீழ்த்தினார். அதன்பிறகு மிட்செல் விக்கெட்டையும் அவரே கைப்பற்றினார். இதனால் இந்திய அணியின் வெற்றிக்கு முகமது ஷமியின் பங்கு தான் பெரியளவில் உதவியுள்ளது. இதன்மூலம் அவர் மேன் ஆப் தி மேட்ச் விருதையும் வென்றார். அதோடு தற்போதைய உலககோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர் பட்டியலில் 22 விக்கெட்டுகளுடன் ஷமி முதலிடத்தில் உள்ளார்.
இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தியின் பழைய எக்ஸ் (முன்பு ட்விட்டர்) ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த பதிவை ராகுல் காந்தி 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் தேதி இரவு 7.22 மணிக்கு பதிவிட்டு இருந்தார். அதில் ராகுல் காந்தி, ‛‛
முகமது ஷமி, நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம். இந்த மக்கள் வெறுப்பால் நிரப்பப்படுகிறார்கள். ஏனென்றால் யாரும் அவர்களுக்கு எந்த அன்பையும் கொடுக்கவில்லை. அவர்களை மன்னியுங்கள்'' என தெரிவித்து இருந்தார்.
இந்த பதிவு தற்போது அனைவராலும் வேகமாக பகிரப்பட்டு வருவதற்கு பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. அதாவது கடந்த 2021ம் ஆண்டு துபாயில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உலககோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்த போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தும். இந்த போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த பவுலர்களான புவனேஷ்வர் குமார், பும்ரா, வருண் சக்கரவர்த்தி, ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது ஷமி ஆகியோரால் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியவில்லை.

மேலும் அதிகபட்சாமாக முகமது ஷமியின் ஓவரில் தான் அதிக ரன்கள் சென்றது. ஷமி 3.5 ஓவர்கள் வீசி 43 ரன்களை விட்டு கொடுத்து இருந்தார். இதனால் அவரை மதரீதியாக சிலர் விமர்சனம் செய்ய தொடங்கினர். முகமது ஷமி இஸ்லாமியர் என்பதால் அவர் பாகிஸ்தான் வெற்றி பெற உதவியதாக சிலர் வலைதளங்களில் பதிவிட தொடங்கினர். இது அப்போது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு கிரிக்கெட் வீரர்கள், அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பினர் முகமது ஷமிக்கு ஆதரவாக வலைதளங்களில் குரல் கொடுக்க தொடங்கினர். WeStandWithShami எனும் ஹேஷ்டேக் டிரெண்டானது. இந்த சமயத்தில் தான் ராகுல் காந்தி இப்படி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இன்றைய போட்டி உள்பட இந்த உலககோப்பை போட்டியில் இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு முகமது ஷமி தான் முக்கிய காரணமாக உள்ளார். இன்றைய போட்டியில் 7 விக்கெட்டுகளை எடுத்ததன் மூலம் தற்போது வரை 22 விக்கெட்டுகளை கைப்பற்றி லீடிங் விக்கெட் டேக்கராக இருக்கிறார். இந்நிலையில் தான் அன்றைய தினம் ராகுல் காந்தி முகமது ஷமிக்கு ஆதரவாக போட்ட பதிவு தற்போது வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 மணி நேரம்தான் தூக்கம்.. போனை போட்டு விளாசிய ஸ்டாலின்.. விக்கித்த தலைகள்.. என்ன நடந்தது? -
டெல்லி பூதமும்.. அறிவாலயம் யுக்தியும்.. திமுகவின் ஸ்மார்ட் தேர்தல் அஸ்திரம்! பாஜக எதிர்பார்க்கலயே -
காங்கிரஸுக்கு வில்லன் காங்கிரஸ் தான்.. திடீரென டெல்லிக்கு ஓடிய கர்நாடக MLAக்கள்! பதறும் சித்தராமையா -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ்












Click it and Unblock the Notifications