ரத்தினசபாபதியும் கலைச்செல்வனும் பதவியை காப்பாத்த போய்ட்டாங்க.. பிரபு குறித்து தினகரன் கலகல பதில்
Recommended Video
சென்னை: எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதியும் கலைச்செல்வனும் பதவியை காப்பாற்றிக் கொள்ளவே அதிமுகவுக்கு போய் இருப்பதாகவும் அவர்கள் யார் சொல்லி இப்படி எல்லாம் பேசுகிறார்கள் என்பது தனக்கு தெரியும் என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சட்டசபை வளாகத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் ரத்தினசபாதி, கலைச்செல்வன் ஆகியோர் முதல்வர் பழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தது பற்றி கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த டிடிவி தினகரன், கடந்த லோக்சபா தேர்தல் முடிந்த மறுநாளே அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தை பதிவு செய்வதற்காக கூட்டம் போட்டோம். அப்போது ரத்தினசபாதி, கலைச்செல்வன் ஆகிய இரண்டு பேருமே வந்தாங்க. அவர்களிடம் நான். நீங்கள் எம்எல்ஏவாக இருப்பதால் கையெழுத்திட வேண்டாம் என்று கூறினேன். இந்தக் கட்சியில் இணைந்தால் உங்கள் பதவி போய்விடும். நீங்கள் தனித்து நின்று செயல்படுங்கள் என்றேன்.
ஆனால் சகோதரர்கள் ரத்தினசபாதியும் கலைச்செல்வனும் டிவியில் அண்மையில் பேசியதை பார்த்தேன். யார் சொல்லி பேசுகிறார்கள் என்று எனக்கு தெரியும்.. போனவாரம் என்ன பேசினார்கள் என்பது உங்களுக்கே தெரியும். விருத்தாசலம் தொகுதிக்கு மக்களை சந்திக்க நான்சென்ற போது கலைச்செல்வன் எப்படி பேசினார் என்பது எனக்கு தெரியும். . புதுக்கோட்டையில் நான் பங்கேற்ற கூட்டத்திலேயே ரத்தினசபாபதி எப்படி பேசியிருக்கிறார் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். உங்களுக்கும் தெரியும். பதவியைக் காப்பாற்றிக்கொள்ள அதிமுகவில் சேர்ந்திருக்கிறார்கள்.. அதனால் தவறு இல்லை.
பிரபு என்னுடன் இருப்பாரா என்பது குறித்து நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். கலைச்செல்வனும் ரத்னசாபாபதியும் பதவியை காப்பாற்ற சென்றுள்ளார்கள். அதனால் நான் அதிமுக அரசை கலைக்க முயல்வதாக அவர்கள் பேசியதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
பொதுமக்கள் மத்தியில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் வீழ்ச்சியடைந்தால் அதில் உள்ள நிர்வாகிகள் எல்லாம் போகிறார்கள் என்ற ஒரு பிம்பத்தை உருவாக்கத்தான் ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் முயற்சி செய்கின்றன. தோல்வி ஒரு இயக்கத்தைச் சரித்துவிடும் என்று யாராவது நினைத்தால் இது உண்மை இல்லை என்பதை காலம் நிரூபிக்கும் '' இவ்வாறு தனது பேட்டியின் போது குறிப்பிட்டார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications