சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரெம்டிசிவிர் மருந்து வாங்க போய்.. கொரோனாவை பிடித்து வந்தால்.. யோசித்த ஸ்டாலின்.. அதிரடி அறிவிப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: ரெம்டிசிவிர் மருந்து தனியார் மருத்துவமனைகளில் வாங்க செல்லும் நபர்கள் சமூக இடைவெளி இல்லாமல் மணிக்கணக்கில் காத்திருப்பதால் அவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்வது என யோசித்து மக்கள் நலனுக்காக ஸ்டாலின் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Recommended Video

    Remdesivir விற்பனைக்காக தனி போர்ட்டல்.. தமிழக அரசு செம மூவ்!

    திமுக ஆட்சிக்கு பொறுப்பேற்ற போதிலிருந்தே நாம் அனைவரும் ரெம்டிசிவிர் என்ற மருந்து குறித்து கேள்விப்பட்டு வருகிறோம். முதல்முறையாக இந்த மருந்து தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் பயன்பெறுவதற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள ஒரு கவுன்ட்டரில் விற்பனைக்கு வைக்கப்பட்டது.

    ஒரு கவுன்ட்டர் என்பதால் தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் கூட்டநெரிசலில் சிக்கி தவித்தார்கள். இதையடுத்து இரு கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டு டோக்கன்கள் வழங்கப்பட்டன. அப்படியும் மருந்து வாங்கவும் அடுத்த நாளுக்கான டோக்கன் வாங்கவும் கியூ இருந்தது.

    இதிலும் வெளிப்படை.. ரெம்டெசிவிர் விற்பனைக்காக உருவாக்கப்படும் தனி இணையதளம்.. தமிழக அரசு செம மூவ்!இதிலும் வெளிப்படை.. ரெம்டெசிவிர் விற்பனைக்காக உருவாக்கப்படும் தனி இணையதளம்.. தமிழக அரசு செம மூவ்!

    ரெம்டிசிவிர் மருந்து

    ரெம்டிசிவிர் மருந்து

    இதையடுத்து நேரு ஸ்டேடியத்திற்கு ரெம்டிசிவிர் மருந்து விற்பனை இடமாற்றப்பட்டது. ஆனால் அங்கும் மக்கள் கூட்டம் அலைபாய்ந்தது. என்ன செய்வார்கள், இவர்கள் எல்லாம் தங்கள் அப்பா, அம்மா, கணவன், மனைவி, மகன், மகள், மருமகன், மருமகள், குழந்தை, மாமனார், மாமியார், நண்பர் உள்ளிட்ட உறவுகளுக்காக சோறு தண்ணீர் இல்லாமல் காத்து கிடந்தார்கள்.

    சமூக இடைவெளி

    சமூக இடைவெளி

    என்னதான் மாஸ்க் அணிந்து கொண்டு நின்றிருந்தாலும் சமூக இடைவெளி என்பது இல்லாமல் இருந்தது. அதற்கு வாய்ப்பும் இல்லை. ஏனெனில் மருந்து தேவை அந்த அளவுக்கு அதிகமாக இருந்தது. இதை தினந்தோறும் பார்த்த ஸ்டாலின் தனது அதிகாரிகளிடம் ஒரு விஷயத்தை பகிர்ந்து கொண்டார்.

    மருந்து

    மருந்து

    அதாவது குடும்பத்தினருக்கு மருந்து வாங்க போய் இவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவிட்டால் என்ன செய்வது? ரெம்டிசிவிர் மருந்து விற்பனை செய்யும் இடமே மிகப் பெரிய கிளஸ்டர் ஆகிவிட்டால் என்ன செய்வது? இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்படுவார்களே என கவலையை தெரிவித்துள்ளார்.

    ரெம்டிசிவிர்

    ரெம்டிசிவிர்

    இதையடுத்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, மக்களின் நலனுக்காக ஒரு முடிவை எடுத்துள்ளார். தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளுக்கு ரெம்டிசிவிர் மருந்து விற்பனை செய்யப்படும் என தெரிவித்துள்ளார். இதன் மூலம் இனி நேரு ஸ்டேடியத்தில் மக்கள் அலைமோத மாட்டார்கள். ஸ்டாலினின் இந்த அறிவிப்பை ரெம்டிசிவிர் மருந்து வாங்க அலைமோதும் மக்கள் வரவேற்றுள்ளார்கள்.

    கள்ளச்சந்தை

    கள்ளச்சந்தை

    ரெம்டிசிவிர் மருந்தை தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்வதாக தெரிவித்தாலும் அதை சாதாரண நபர்கள் வந்து வாங்கிக் கொள்ள முடியாது. மருத்துவமனை பிரதிநிதிதான் வாங்குவார். ஆக்ஸிஜன் தேவையுடன் சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப ரெம்டிசிவிர் மருந்து ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நலன் கருதி ரெம்டிசிவிர் மருந்துகள் தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்வதாக அறிவித்தாலும் கள்ளச்சந்தை விற்பனையை ஒழிக்கவும் ஸ்டாலின் இந்த அதிரடி முடிவு எடுத்துள்ளார்.

    English summary
    Why Remdesivir medicine to be available to Private hospitals? Here are the reasons.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X