சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சசிகலா திடீர்னு இப்படி ஒரு பிட்டைப் போட்டது ஏன்?.. ஓபிஎஸ்ஸை இழுக்கும் தந்திரமா?

Google Oneindia Tamil News

சென்னை: ஓபிஎஸ் மட்டும் 2017ஆம் ஆண்டு ராஜினாமா செய்யாமல் இருந்திருந்தால் அவரைத்தான் முதல்வராக்கியிருப்பேன் என சசிகலா கூறியது அவரை தன்பக்கம் இழுக்கும் தந்திரமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Recommended Video

    OPS மட்டும் அவ்வாறு செய்யாதிருந்திருந்தால்.. Sasikala வேதனை | Oneindia Tamil

    சசிகலா தற்போது கட்சி நிர்வாகிகளிடம் பேசி வரும் ஆடியோ வைரலாகி வருகிறது. அந்த வகையில் இன்று வெளியான ஆடியோவில் ஒரு பக்கம் எடப்பாடி மீது அதிருப்தியாக, மறைமுகமாக பேசிய சசிகலா மறுபக்கம் ஓபிஎஸ் குறித்து வேதனை தெரிவித்துள்ளார்.

    ஆம்!, 2017ஆம் ஆண்டு முதல்வராக இருந்த ஓபிஎஸ் மட்டும் ராஜினாமா செய்யாமல் இருந்திருந்தால் அவரையே முதல்வராக்கியிருப்பேன் என நெல்லை ஆதரவாளரிடம் தெரிவித்துள்ளார்.

    ஓபிஎஸ்

    ஓபிஎஸ்

    இந்த ஆடியோவை கேட்கும் போது அதிருப்தியில் உள்ள ஓபிஎஸ்ஸை தன் பக்கம் இழுப்பதற்காகவே அவரது பெயரை வலிய வந்து சசிகலா பயன்படுத்தியிருக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. சட்டசபை அதிமுக தொடர்பான இரு பதவிகள் கொங்கு மண்டலத்தினருக்கு சென்றதில் ஓபிஎஸ்ஸும் தென் மாவட்ட எம்எல்ஏக்களும் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

    சசிகலா

    சசிகலா

    ஏற்கெனவே எதிர்க்கட்சித் தலைவர் பதவி பிரச்சினையின்போதே ஓபிஎஸ், சசிகலாவுடன் இணைந்து செயல்படுவார் என கூறப்பட்டது. அது போல் அதிமுகவினருடன் சசிகலா பேசும் ஆடியோக்கள் ரிலீஸானாலும் அதுகுறித்து ஓபிஎஸ் எந்த எதிர்ப்பையும் காட்டாமல் அமைதியாகவே இருக்கிறார்.

    எடப்பாடி பழனிச்சாமி

    எடப்பாடி பழனிச்சாமி

    இணை ஒருங்கிணைப்பாளராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி கூட சசிகலா அதிமுக உறுப்பினரே இல்லை. அவர் தொண்டர்களை குழப்பவே இவ்வாறு செய்கிறார். ஆனால் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓபிஎஸ் எந்த கண்டனத்தையும் சசிகலா மீது கூறவில்லை. எடப்பாடி மற்றும் அவர் ஆதரவு நிர்வாகிகள் மீது பன்னீர் செல்வம் அதிருப்தியில் இருப்பது சசிகலாவுக்கு நன்றாகவே தெரியும்.

    கைப்பற்ற

    கைப்பற்ற

    மேலும் அதிமுகவை கைப்பற்ற அக்கட்சியில் உள்ள முக்கியஸ்தர்களை தன் பக்கம் இழுத்தால் மட்டுமே அது சாத்தியமாகும் என்பது சசிகலாவுக்கு தெரியும். இதனால்தான் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக ஆடியோவில் பேசியுள்ளதாகவே தெரிகிறது. சசிகலா பக்கம் ஓபிஎஸ் சாய்ந்துவிட்டால், அவருடன் கணிசமான உறுப்பினர்கள் 2017ஐ போல் செல்ல வாய்ப்பிருக்கிறது. இதனால் சசிகலா தனது காரியத்தை சாதித்துக் கொள்ள வாய்ப்புகள் இருக்கிறது. அதை மனதில் வைத்துதான் சசிகலாவும் "உருகுகிறார்" என்கிறார்கள்.

    English summary
    Why Sasikala speaks about OPS in her 44th Audio? Here are the reasons.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X