22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்தியில் ஆளும் பாஜகவிற்கு எதிராக ஒரு வலுவான மாற்று ஆட்சி முறையை உருவாக்க இந்தியா கூட்டணியால் முடியவில்லை. ஆனால், ஊடகங்கள் சொல்வது போல பாஜக ஒன்றும் வீழ்த்த முடியாத பலமான சக்தி கிடையாது. இந்த நாட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலமாகத் தேர்தல் நடப்பதால்தான் பாஜக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் அய்யநாதன் பேட்டி ஒன்றில் பேசும்போது, "இந்தியா கூட்டணியில் இருந்து விலகக்கூடிய ஒரு முடிவை திமுக எடுத்ததை முழுமையாக வரவேற்கிறேன். கடந்த 6 வருடங்களாக இந்த கூட்டணியில் நீடித்ததால் திமுகவிற்கு எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை.

DMK BJP MK Stalin Rahul Gandhi Congress Tamil Nadu Political News

திருமாவளவன், திமுக

நீட் ஒழிப்பு, சமூக நீதி, மாநில சுயாட்சி மற்றும் வாக்குப்பதிவு இயந்திர ஒழிப்பு போன்ற சட்டரீதியான போராட்டங்களைத் தமிழ்நாட்டில் திமுகவும் திருமாவளவனும்தான் முன்னெடுத்தார்களே தவிர, காங்கிரஸ் எதையும் செய்யவில்லை

தமிழ்நாட்டில் திமுகதான் மிகப்பெரிய கட்சி, இங்கு மாநிலத் தலைமைதான் முதன்மையானது. திமுகவின் அலையில்தான் காங்கிரஸ் கட்சி இங்குள்ள தொகுதிகளில் வெற்றி பெறுகிறதே தவிர, காங்கிரஸின் வாக்கு வங்கியால் திமுகவிற்கு எந்தப் பயனும் இல்லை. நாடாளுமன்றத்தில் 22 இடங்களைக் கைவசம் வைத்துள்ள திமுக ஒருபோதும் பலவீனமான கட்சி அல்ல.

உதயநிதி விட்ட சவால்

மாணிக்கம் தாகூர் போன்றவர்கள் எங்களால்தான் திமுக ஜெயிச்சது, இது ஒரு மியூச்சுவல் வெற்றி என்று சொல்வதெல்லாம் சும்மா கொழுக்காதீங்க, அதெல்லாம் கிடையாது. இந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும். உங்களால் திமுக ஜெயிச்சது என்று உங்களால் சொல்ல முடியுமா?

இப்போது கூட ஒன்னும் பெரிய எண்ணமெல்லாம் வேண்டாம், அந்த இடத்திற்கெல்லாம் போக வேண்டாம். திமுகவும் தனியாகத்தான் நிற்க வேண்டும், நீங்களும் தனியாகத்தான் நிற்க வேண்டும். இப்போது கூட நீங்கள் உங்களுடைய விருதுநகர் எம்பி பதவியை ராஜினாமா செய்யுங்கள், உதயநிதியையும் நேற்றைய சவாலின்படி ராஜினாமா செய்யச் சொல்லுங்கள். இரண்டு பேரும் தேர்தல் களத்தில் நேருக்கு நேர் சந்திப்போம் வாருங்கள் என்று கேட்கிறேன்.

உங்களுடைய சொந்த ஓட்டு எவ்வளவு இருக்கிறது? நீங்கள் 2011 மற்றும் 2014 தேர்தல்களில் அதை நிரூபித்தீர்கள். 2011-ல் திமுகவும் நின்றது, நீங்களும் நின்றீர்கள். அப்போது உங்களுக்குக் கிடைத்தது வெறும் 4% ஓட்டுதான். இந்த 4% ஓட்டை வைத்துக்கொண்டு நாக்கைத் தான் வழிக்க வேண்டும், உங்களால் தனியாக ஒன்றும் ஜெயிக்க முடியாது.

காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்து

இந்தியா கூட்டணி என்ற பெயரில் கொஞ்சம் கூட கொள்கை இல்லாத ஒரு அணியைக் காங்கிரஸ் உருவாக்கியுள்ளது. பாஜாகாவை வீழ்த்துவது மட்டுமே ஒரு கூட்டணியின் கொள்கையாக இருக்க முடியாது. மாற்றுப் பொருளாதாரக் கொள்கையோ அல்லது சமூக நீதி திட்டங்களோ காங்கிரஸிடம் இல்லை. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் காங்கிரஸ் தனது தனிப்பட்ட பலத்தை 54 இடங்களிலிருந்து 99 இடங்களாக மாற்றிக்கொண்டு எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டதே தவிர, இதனால் மாநிலக் கட்சிகளுக்கு எந்த அதிகாரமும் வரவில்லை.

ராகுல் காந்தி இப்போது பேசும் ஓபிசி அரசியலும் சமூக நீதியும் காங்கிரஸ் கட்சி உயிர் பிழைப்பதற்கான சுயநல உத்தியே தவிர, அவர்களின் உண்மையான கொள்கை அல்ல. அன்று மண்டல் கமிஷன் அறிக்கைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் 10 மணி நேரம் பேசியவர் ராஜீவ் காந்தி என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

முதுகில் குத்தும் காங்கிரஸ்

டெல்லியில் இருந்துகொண்டு தமிழ்நாட்டிற்கு யாரென்றே தெரியாத நபர்களுக்கு எம்பி பதவி வழங்குவதையும், தேர்தல் முடிந்தவுடன் பிராந்தியக் கட்சிகளின் முதுகில் குத்துவதையும் காங்கிரஸ் வழக்கமாகக் கொண்டுள்ளது. மகாத்மா காந்தி அன்றே கூறியபடி, சுதந்திரத்திற்குப் பின் காங்கிரஸைக் கலைக்காமல் விட்டதே இந்த நாடு செய்த மிகப்பெரிய குற்றமாகும்.

மத்தியில் ஆளும் பாஜகவிற்கு எதிராக ஒரு வலுவான மாற்று ஆட்சி முறையை உருவாக்க இந்தியா கூட்டணியால் முடியவில்லை. ஆனால், ஊடகங்கள் சொல்வது போல பாஜக ஒன்றும் வீழ்த்த முடியாத பலமான சக்தி கிடையாது. இந்த நாட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலமாகத் தேர்தல் நடப்பதால்தான் பாஜக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது.

பாஜகவை நோக்கி செல்கிறதா திமுக

முறையான, நேர்மையான தேர்தல் நடைமுறை இங்கு இருக்குமேயானால், வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியே வெற்றி பெற மாட்டார். வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள தொழில்நுட்ப முறைகேடுகளைப் பயன்படுத்தி, பக்காவாகத் திட்டமிட்டுத்தான் பாஜக தேர்தல்களை வெல்கிறது. திமுக கூட்டணியை விட்டு வெளியேறுவதால் அது பாஜகவை நோக்கி நகரும் என்று சொல்வது தவறானது.

தமிழ்நாட்டில் ஒரு தொகுதியைக் கூட பெற்றிராத பாஜகவிற்குத் திமுகவை நோக்கி வர வேண்டிய அவசியமே தவிர, திமுகவிற்கு பாஜகவை நோக்கி செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை.

தேசியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய 2 கட்சிகளுமே மாநிலக் கட்சிகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவே நினைக்கின்றன, இந்த இரு கட்சிகளையும் விடுத்து மாநிலக் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து மூன்றாவது அணியாக செயல்படுவதே நாட்டிற்கு உண்மையான மாற்றத்தைத் தரும்" என்றெல்லாம் அய்யநாதன் தனது பேட்டியில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+