டார்க்கெட் செய்யப்படும் சென்னை மேயர் பிரியா ராஜன்.. பதிலடி கொடுக்கும் திமுக.. என்ன பிரச்சனை?
சென்னை: சென்னை மேயர் பிரியா ராஜன் வீட்டினை நேற்று மின்சாரம் கேட்டு மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய வீடியோவை வைத்து அவரை சமூக ஊடகங்களில் சிலர் டார்க்கெட் செய்து விமர்சித்து வருகிறார்கள்.
சென்னை மேயர் பிரியா ராஜன் வீட்டினை நேற்று மின்சாரம் கேட்டு மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அந்த வீடியோவில் ஒரு பெண் ஆவேசமாக கேள்வி எழுப்புவார். அதற்கு அமைதியாக பதில் அளித்து கொண்டிருப்பார் பிரியா ராஜன்.. இந்த வீடியோவை சிலர் வேகமாக பரப்பி, பிரியா ராஜனை டார்க்கெட் செய்து விமர்சித்து வருகிறார்கள். இதற்கு திமுக ஐடிவிங்கும் பதிலடி கொடுத்து வருகிறது.

மிக் ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடந்த ஞாயிறு அன்று மழை தொடங்கியதில் இருந்தே மேயர் பிரியா ராஜனை பலர் விமர்சித்து வருகிறார்கள். அவருடைய பேட்டி வீடியோக்களை போட்டு, தமிழை தடுமாற்றத்துடன் பேசுவதாக சிலர் விமர்சித்தார்கள். ஆனால் இதற்கு கடுமையான எதிர்வினை ஆற்றிய திமுக ஐடி விங்க் குழுவினர், ஒருவரின் செயல்களை தான் பார்க்க வேண்டும், மொழியை பார்க்க கூடாது பதிலடி கொடுத்தனர்.

அதன்பின்னர் மழை தீவிரமான நிலையில் மேயர் பிரியா ராஜன் இரவு பகல் பார்க்காமல் வேலை பார்த்ததை புகழ்ந்து திமுகவினர் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவிட்டனர்.. அதற்குமே பாஜகவினர் மற்றும் அதிமுகவினர் கடும் பதிலடி கொடுத்தனர். இதனிடையே மேயர் பிரியா ராஜனின் ஒவ்வொரு நடவடிக்கையையும் தீவிரமாக கண்காணிக்கும் எதிர்க்கட்சியினர், மக்கள் போராட்டங்கள், விமர்சனங்கள் ஆகியவற்றை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
அப்படித்தான் சென்னை மேயர் பிரியா ராஜன் வீட்டினை நேற்று மின்சாரம் கேட்டு மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அந்த வீடியோவில் ஒரு பெண் ஆவேசமாக 'நாங்க யாரும் சாவல மேடம் பால் ஊத்தறதுக்கு' என்று கேட்பார். அதற்கு மேயர் பிரியா ராஜன், அவர்களை சமாதானம் செய்தபடி, மின்சாரமும் ஏன் இன்னும் தராமல் உள்ளார்கள் என்பது குறித்து விளக்கம் அளித்தார்.
நெறையா வீட்டுக்குள்ள ஷாக் வருது, ஷாக் அடித்து உயிர் போனால் கஷ்டம், அதுனால தான் கரெண்ட் கட் பண்ணி வச்சிருக்காங்க.. இன்று ((நேற்று மாலை) மாலைக்குள் கரெண்ட் கொடுத்து விடுவார்கள் என்று பொறுமையாக கூறினார். இந்த வீடியோவை எடுத்து பாஜக மற்றும் அதிமுக ஆதரவாளர்கள் பிரியா ராஜனுக்கு எதிராக கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். இதற்கு திமுக ஐடி விங்க் நிர்வாகிகள், திமுக ஆதரவாளர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் இடதுசாரிகளும் அதிமுக மற்றும் பாஜகவினருக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள்.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிந்தன் பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், "இயற்கை பேரிடராக இருந்தாலும் மக்களுக்கு பதில் சொல்ல அரசியல் தலைவர்கள் கடமைப்பட்டவர்களே. அதற்குத்தான் நிர்வாகம் உள்ளது. ஆனால், தானே ஒரு பேரிடராகவும், ஊடகங்களை கண்டால் Oh My God என ஓடிவிடுபவராகவும் இருப்பவரை தலைவராக வைத்துக் கொண்டு இப்படி பதிவு செய்ய வெட்க உணர்வு வேண்டாமா?." என்று காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications