ரெடியான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை.. ரூ.1000 பெறுவதற்கான விண்ணப்பம்.. ஆனால் எழுந்த புது சிக்கல்!
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்ப படிவங்களை வழங்கும் பணிகளை மேற்கொள்ள ரேஷன் கடை ஊழியர்கள் பலரும் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான அடுத்த கட்ட பயனாளிகள் சேர்ப்பு ஜூன் 4ம் தேதி நடக்க உள்ளது. தமிழ்நாடு முழுக்க இதற்காக கேம்ப்புகள் அமைக்கப்பட உள்ளன. மொத்தமாக 9000 இடங்களில் இதற்காக கேம்ப்புகள் அமைக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் தற்போது 1 கோடியே 25 லட்சம் பெண்கள் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் நேரடியாக பயன் பெற்று வருகின்றனர். இதில் கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளனர். அதன்படி கூடுதலாக 10 - 15 லட்சம் பேர் வரை இந்த திட்டத்தில் பயனாளிகளாக சேர்க்கப்பட உள்ளனர். அதன்படி இந்த பயனாளிகள் எண்ணிக்கை 1.45 லட்சமாக உயர்த்தப்பட உள்ளது.

ரேஷன் கடை ஊழியர்கள்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்ப படிவங்களை வழங்கும் பணிகளை மேற்கொள்ள ரேஷன் கடை ஊழியர்கள் பலரும் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த முறைகளில் இந்த திட்டம் தொடங்கப்பட்ட போதும், விரிவாக்கம் செய்யப்பட்ட போதும் ரேஷன் ஊழியர்களே விண்ணப்பங்களை ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களிடம் நேரடியாக வழங்கினார்கள்.
ஆனால் அதற்கு வழங்கப்பட வேண்டிய ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதோடு பல குடும்பத்தினர் தங்களுக்கு விண்ணப்பம் கிடைக்கவில்லை என்று ரேஷன் கடைகளில் தகராறு செய்தனர். அதனால் இந்த முறை கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்ப படிவங்களை வழங்கும் பணிகளை மேற்கொள்ள ரேஷன் கடை ஊழியர்கள் பலரும் விரும்பவில்லை.. தங்களுக்கு இந்த கூடுதல் பணிகள் தேவை இல்லை என்று ரேஷன் கடை ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கி உள்ளனர்.
தளர்வுகள் வருகிறது
மகளிர் உரிமை தொகை திட்டம் ஜூன் மாதம் விரிவாக்கம் செய்யப்படும் போது அதில் கூடுதல் தளர்வுகள் கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இப்போது இருக்கும் கட்டுப்பாடுகள் குறைக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.
அடுத்த வருடம் நடக்க உள்ள சட்டசபை தேர்தலை மனதில் வைத்து முக்கியமான பல தளர்வுகள் கொண்டு வரப்படலாம் என்று கூறப்படுகிறது.
இப்போது உள்ள விதி என்ன?
இந்த மகளிர் உரிமை தொகை திட்டத்தில் குடும்ப தலைவி அல்லாதவர்களுக்கு பணம் கிடைக்கும். ஒரு வீட்டில் அப்பா, 2 மகன், 3 மகள் இருக்கிறார்கள். யாருக்கும் திருமணம் ஆகவில்லை. அம்மா உயிரோடு இல்லை என்றால் வீட்டில் உள்ள 21 வயது நிரம்பிய முதல் பெண்ணுக்கு பணம் தரப்படும். அவர் குடும்ப தலைவி இல்லையென்றாலும் மகளிர் உரிமை தொகை மூலம் பணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்து அவர்கள் தகுதியானவராக இருந்தால் அது ஏற்றுக்கொள்ளப்படும். இதன் மூலம் மீண்டும் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் விவாகரத்து பெற்றவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை கிடைக்கும். அவர்கள் தனி ரேஷன் கார்டு பெற்றுள்ள நிலையில் கண்டிப்பாக மகளிர் உரிமை தொகை கிடைக்கும்.
கடந்த முறை சில ஆவணங்கள் சரியாக இல்லாத பெண்களுக்கும் பணம் வழங்கப்படவில்லை, அரசின் வேறு நிதிகளை வங்கியில் பெற கூடிய பெண்களுக்கு இந்த திட்டத்தில் இப்போது என்று இல்லாமல் எதிர்காலத்திலும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்கிறார்கள்,.
மாறாக ஆவணங்கள் சரியில்லாத பெண்கள், இனி திருமணம் ஆகி குடும்ப தலைவி ஆகும் பெண்கள் ரூ.1000 பெறுவதற்கு விண்ணப்பம் செய்யலாம். அடுத்த சில நாட்களுக்கு பின் திட்டத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். அப்போது விடுபட்டவர்கள் விண்ணப்பங்களை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் செய்யப்படும். ஆனால் இதற்காக ரேஷன் கார்டு உள்ள எல்லோருக்கும் இந்த திட்டத்தின் கீழ் பணம் தரப்பட்டது. மாறாக விண்ணப்பித்துள்ள அனைவருடைய விண்ணப்பங்களையும் பரிசீலித்து, தகுதியுள்ள அனைவருக்கும் வழங்கப்படும். தகுதி இல்லாதவர்களுக்கு பணம் வழங்கப்பட வாய்ப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கவனிக்க வேண்டிய விஷயம்
ஒரே வீட்டில் 2 பெண்கள் இருந்தால் அவர்கள் ரூ.1000 பெற விண்ணப்பிக்கலாமா என்ற கேள்வி பலருக்கு எழுந்துள்ளது. இதற்கு தமிழக அரசு விதிகள் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.
மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதனால் பலரும் தங்கள் ரேஷன் கார்டுகளில் மாற்றங்களை செய்ய தொடங்கி உள்ளனர். உதாரணமாக உங்கள் வீட்டில் ஒரு பாட்டி இருக்கலாம். அவர் பென்சன் வாங்கலாம்.
இதனால் வீட்டில் உள்ள மருமகளுக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்காமல் போகலாம் என்ற அச்சம் ஏற்படலாம்.இதனால் பலர் வீடுகளில் பாட்டிகளின் பெயர்களை ரேஷனில் இருந்து நீக்க தொடங்கி உள்ளனர். ஆனால் உங்கள் வீட்டில் எத்தனை பெண்கள் அரசின் பென்சன் வாங்கினாலும் பிரச்சனை இல்லை. அந்த ரேஷன் அட்டையில் குடும்ப தலைவி யாரோ அவருக்கே மகளிர் உரிமை தொகை வழங்க முடியும்.
அவர்கள் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்கள் பென்சன் பெறக்கூடாது. அதாவது குடும்ப தலைவியாக இருப்பவர் பென்ஷன் பெறக்கூடாது. அதேபோல் அவர்களின் கணவர் அரசு வேலை செய்ய கூடாது. மற்றபடி ஒரே வீட்டில் பல பெண்கள் இருந்தாலும் அவர்கள் எல்லாம் பென்ஷன் பெற்றாலும் குடும்ப தலைவி என்ற பெயரில் உள்ள பெண்ணுக்கு வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications