பிடிஆருக்கு அலை அலையாய் குவியும் ஆதரவு! மக்கள் மத்தியில் அப்படியொரு தாக்கம்! என்ன காரணம்?
சென்னை: அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடமிருந்து நிதி இலாகா பறிக்கப்பட்டிருப்பது உள்ளூர் முதல் உலகத்தமிழர்கள் வரை விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.
நாசரை அமைச்சரவையிலிருந்து நீக்கியதை மக்கள் ஒரு பொருட்டாகவே கருதாத நிலையில், பிடிஆருக்கு இலாகா மாற்றிக் கொடுக்கப்பட்ட விவகாரம் தேநீர் கடை முதற்கொண்டு மக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இத்தனைக்கும் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பம் என்ற உயர்ந்த போர்ட் போலியோ தான் மாற்றாக வழங்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் இதனை டிபுரோமோஷனாகவே பார்க்கிறார்கள் சமூக வலைதளவாசிகள்.

#I STAND WITH PTR, என்பன போன்ற ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் குறிப்பாக டிவிட்டரில் அதிகமானோரால் பகிரப்பட்டு வருகின்றன.
பழனிவேல் தியாகராஜனிடமிருந்து நிதித் துறை பறிக்கப்பட்டதற்கு உதயநிதி ஸ்டாலின் தான் காரணம் என்பதை போல் சமூகவலைதள வாசிகள் அவரை நோக்கி விமர்சனக்கணைகளை வீசுகின்றனர்.
பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோவை உண்மை என நிரூபிக்கும் வகையில் நேற்று நடந்த நிகழ்வுகள் இருப்பதாக பலரும் அங்கலாய்த்து கொள்கின்றனர்.
மற்ற அமைச்சர்களை எல்லாம் திட்டித் தீர்க்கும் பலரும் பழனிவேல் தியாகராஜன் மீது மட்டும் பேரன்பு வைத்திருப்பதற்கு காரணம் அவரது ஸ்டைரட் ஃபார்வார்டு தான். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலாக இருக்கட்டும், 2016 சட்டமன்றத் தேர்தலாக இருக்கட்டும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் வெற்றி பெற்ற ஒரே நபர் இவராக தான் இருப்பார்.

அதேபோல் ஒவ்வொரு துறையிலிருந்தும் எக்கச்சக்கமாக நிதி கோரி வரும் கோப்புக்களை அலசி ஆராய்ந்து இதற்கு எதற்கு இவ்வளவு பணம், இந்தத் தொகையில் இந்த திட்டத்தில் முடிக்கலாமே என கடிவாளம் போட்டார். இது மற்ற அமைச்சர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.
தொழில்துறையை தங்கம் தென்னரசு சரியாக கவனிக்கவில்லையா அல்லது நிதித்துறையை பழனிவேல் தியாகராஜன் சரியாக கவனிக்கவில்லையா என்றும் இருவரில் யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் இல்லாத போது பிறகேன் இவர்கள் இருவருக்கும் இப்படியொரு இலாகா மாற்றம் என சமூக வலைதளங்கள் விவாதங்கள் அனல் பறக்கின்றன.
இதனிடையே நிர்வாக காரணங்களுக்காகவே அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டிருப்பதாக நேற்று ஹூண்டாய் மோட்டார் நிறுவன நிகழ்வில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் கூறியது குறிப்பிடத்தக்கது.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்












Click it and Unblock the Notifications