வாக்குறுதியை அள்ளி வீசுனா ‘வாட்ஸ் அப் பல்கலை.’ எப்படி நடத்துவதாம்? தமிழக பாஜகவினரை கதறவிடும் மேலிடம்
சென்னை: ஒவ்வொரு மாநில தேர்தலிலும் பாஜகவும் தமிழ்நாட்டின் திராவிட கட்சிகளான திமுக, அதிமுக பாணியில் இடைவிடாமல் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறது. இதனால் சமூக வலைதளங்களில் களமாடும் தமிழக பாஜகவினர் நிலைமைதான் மிகவும் பரிதபாமாகி வருகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
தமிழகத்தில் எப்படியாவது வேர்பிடித்துவிட வேண்டும் என்பதற்காக பாஜக பன்னெடுங்காலமாக போராடிக் கொண்டிருக்கிறது. இதனால் 'கழகங்கள் இல்லாத தமிழகம்' என முழக்கமிட்டது. ஊர் ஊராக சுவரெழுத்துகள் எல்லாம் எழுதியது பாஜக. இந்த முழக்கத்தை வலியுறுத்த வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் 'திராவிடம்' 'திராவிட கட்சிகள்' ஆகியவற்றுக்கு எதிராக நினைத்தவற்றை எல்லாம் 'வரலாறு' என எழுதி கம்ப சுற்றிவந்தனர் பாஜகவினர். ஆனால் அதிமுகவின் கழுத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டு வேதாளம் போல பாஜக தொங்கிக் கொண்டிருந்தது. இதனால் 'கழகங்கள் இல்லாத பாஜக' முழக்கத்தை கைவிட்டுவிட்டு திமுக எதிர்ப்பை மட்டும் கையில் எடுத்ததர் பாஜகவினர். பின்னர் அதிமுகவும் 'சுமையை' இப்போது இறக்கி வைத்துவிட்டது.

இன்னொரு பக்கம், திமுக ஆட்சி அமைந்தது முதலே அதன் தேர்தல் வாக்குறுதிகள் ஏன் நிறைவேறவில்லை? நிறைவேற்றவே முடியாத இலவசங்களை ஏன் அறிவிக்க வேண்டும்? என டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கி குன்னூர் குமாரசாமி எனும் பாஜக தொண்டர் வரை தொண்டை தண்ணீர் வற்ற வற்ற குரல் கொடுத்தனர். சிலிண்டர் விலையை குறைத்தாலும் விமர்சனம்; பெண்களுக்கு மாதம் ரூ1,000 கொடுத்தாலும் விமர்சனம்; வேலைவாய்ப்புகளை அறிவித்தாலும் விமர்சனம் என சகட்டுமேனிக்கு 'வாட்ஸ் அப் பல்கலைக் கழகங்களில்' வாரி வாரி வீசிக் கொண்டிருந்தனர் பாஜகவினர்.
ஆனால் ஒவ்வொரு மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல்கள் நடக்கும் போதெல்லாம் அதே பிரதமர் மோடி முதல் அத்தனை மாநில பாஜகவும் அதே இலவசங்களை வாக்குறுதிகளாக வாரி வாரி வீசுகின்றனர். அதிலும் தமிழக பாஜகவினர் கடுமையாக எதிர்க்கும் பெண்களுக்கு ரூ1,000 திட்டம்; சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு உள்ளிட்டவைகளைத்தான் கர்நாடகா, சத்தீஸ்கர் என அத்தனை மாநிலங்களுக்கும் தேர்தல் வாக்குறுதி- மோடி வாக்குறுதி- எங்களது உறுதி மொழிப் பத்திரம் என வகைவகையாக பாஜக அறிவித்து கொண்டே இருக்கிறது.
பாஜக மேலிடம் இப்படி வகை தொகையில்லாமல் வாக்குறுதிகளை அதுவும் தமிழ்நாட்டு திராவிட கட்சிகளை காப்பி அடித்து அப்பட்டமாக பிற மாநிலங்களில் தேர்தல் அறிக்கைகளாக வெளியிடுவதால் பாஜகவின் வாட்ஸ் அப் பல்கலைக் கழகங்களுக்கு செம்ம காண்டு போல.. இப்போதெல்லாம் இந்த வாக்குறுதிகளுக்கு எதிரான கம்புகள் காணாமல் போய்விடுகின்றன. இது உண்மையாக சமூக வலைதளங்களில் களமாடுகிற பாஜகவினருக்கு பெரும் தர்மசங்கடம்; அவமானம்தான்; கூனிக் குறுகல்தான். இதனையும் புரிந்து கொள்ளாத சில சமூக வலைதள பாஜக மழலையர் பாலகர்கள், இந்த வாக்குறுதிகளுக்கு முட்டுக் கொடுத்து நியாயப்படுத்தி சேம் சைட் கோல் அடிக்கிற கூத்தையும் பார்க்க முடிகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். அந்தோ பரிதாப பாஜக தொண்டர்கள்!
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications