ரியல் காரணமே வேறு.. திமுக பற்றி டெல்லிக்கு "பாஸ்" செய்யப்பட்ட மெசேஜ்.. ஆளுநர் ஆக்சனின் பின்னணி!
சென்னை: தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர் என் ரவி தள்ளுபடி செய்ததற்கு பின் சில முக்கிய காரணங்கள் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.
தமிழ்நாடு அரசின் நீட் தேர்வு சட்ட மசோதாவை அரசுக்கே திருப்பி அனுப்பி வைத்துள்ளார் ஆளுநர் ரவி. இதற்கு தமிழ்நாடு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி சட்டமன்ற கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசிக்கவிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதற்கான கூட்டம் நாளை நடக்கிறது.

வேல்முருகன்
இதற்கிடையே ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி ராஜ்பவனை முற்றுகையிடும் போராட்டத்தை நாளை நடத்த திட்டமிட்டிருக்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன். நீர் தேர்வு விவகாரம் இப்படி சீரியஸ் ஆகி வரும் சூழலில், கடந்த 6 மாதங்களாக கிடப்பில் இருந்த சட்ட மசோதாவை திடீரென திருப்பி அனுப்ப என்ன காரணம் ? என்று ஆளுநர் அலுவலக வட்டாரத்தில் விசாரித்தோம். திடீரென இந்த முடிவு எடுக்கப்பட்டது ஏன் என்று விசாரித்தோம்.

நீர் தேர்வு விவகாரம்
''கொக்கென நினைத்தாயோ கொங்கனவா? தமிழ்நாடு ஒன்றும் நாகாலாந்த் அல்ல ; திராவிட மண் என்றெல்லாம் ஆளுநருக்கு எதிரான மோதல் போக்கினை முரசொலி வழியாக நடத்தினார் ஆளும் திமுக தரப்பு. இந்த கட்டுரை தமிழ்நாடு அரசியல் உலகில் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. ஆளுநர் தரப்பிற்கும், ஆளும் தரப்பிற்கும் இதனால் மோதல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதற்கு ஆளுநர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

உளவுத்துறை
ஆனால், இந்த விசயத்தை மத்திய உளவுத்துறை அதிகாரிகளும், தமிழ்நாடு பாஜகவும் சீரியஸாக எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதை பற்றிய ரிப்போர்ட் ஒன்றை அவர்கள் டெல்லி தலைமைக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது. கொக்கென நினைத்தாயோ என்பது ஆளுநருக்கு எதிராக வீசப்பட்ட வார்த்தை அல்ல ; அது மத்திய அரசை நோக்கி வீசப்பட்ட வார்த்தை என ஒரு புதிய அர்த்தத்தை தமிழ்நாடு பாஜகவினர் டெல்லிக்கு பாஸ் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதான் டெல்லி தலைமைக்கு கோபத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது.

ரிப்போர்ட்
இந்த கட்டுரையில் இருந்ததை வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்து டெல்லிக்கு ரிப்போர்ட் அனுப்பி இருக்கிறார்களாம். இது ஒருபுறமிருக்க, டி.ஆர்.பாலு தலைமையிலான தமிழக எம்.பி.க்கள், அமித்சாவை சந்தித்து மனு கொடுத்த போது, நீட் குறித்த தொடர்புடைய அமைச்சகங்களிடம் கலந்து பேசி முடிவினை சொல்கிறேன் என தெரிவித்திருந்தார் அமித்ஷா. ஆனால் அது குறித்த எந்த தகவலையும் அமித்ஷா இதுவரை தமிழக எம்.பி.க்களுக்கு தெரிவிக்கவில்லை.

அமித் ஷா
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் அமித் ஷாவிற்கு எதிராக பார்லிமென்டில் குரல் எழுப்ப திமுக திட்டமிட்டிருந்தாக கூறப்படுகிறது. நடப்பு கூட்டத்தொடரில் திமுக எம்பிக்கள் அமித் ஷாவிற்கு எதிராக பேச திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. ஏனென்றால் அமித் ஷா அவ்வளவு எளிதில் தமிழ்நாடு எம்பிக்களை சந்திக்கவில்லை. 1 வாரம் காத்திருக்க வைத்து அதன் பின்பே தமிழ்நாடு எம்பிக்களை அமித் ஷா சந்தித்தார்.

பேச திட்டம்
இதனால் அமித் ஷா பற்றி பேச திமுக எம்பிக்கள் திட்டமிட்டு இருந்தனர். திமுகவினரின் இந்த திட்டத்தை அறிந்த மத்திய அரசு, பிரச்சனை அமித் ஷாவுக்கு எதிராக பார்லிமென்டில் திரும்ப கூடாது. அதனை தடுக்கும் வகையில் ஆளுநர் பக்கம் இஷ்யூ திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அந்த யோசனையின் அடிப்படையிலேயே ஆளுநருக்கு டெல்லியிலிருந்து நீட் மசோதாவை திருப்பு அனுப்புவது தொடர்பாக உத்தரவிடப்பட்டதாக என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகின்றது. அதோடு முரசொலி கட்டுரையும் இந்த முடிவை இப்போதே எடுக்க ஒரு காரணம் ஆகும்.
Recommended Video

மசோதா திருப்பு அனுப்பப்பட்டது
முரசொலி கட்டுரை வந்த இரண்டு நாளில் இந்த முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்தே, ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை அவசரம் அவசரமாக திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. டெல்லி நினைத்தது போல, நீட் விவகாரம் தற்போது ஆளுநருக்கு எதிரான விஷயமாக எதிரொலிக்கத் துவங்கியுள்ளது. தமிழ்நாட்டு ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று தமிழ்நாடு அரசியல் கட்சிகள் குரல் எழுப்ப தொடங்கி உள்ளன. மாறாக அமித் ஷா பற்றி இதில் யாரும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய உள்துறையும் இதைத்தான் எதிர்பார்த்ததாக டெல்லி அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications