வருமான வரி விவகாரம்: எங்க சசிகலாவுக்கு ஒரு நீதி? உங்க ரஜினிகாந்துக்கு ஒரு நீதியா?- சீமான்
சென்னை: வருமான வரித்துறை விவகாரத்தில் சசிகலாவுக்கு ஒரு நீதி? ரஜினிகாந்துக்கு ஒரு நீதி ஏன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பாசறை சார்பாக நேற்று ஒன்று கூடல் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:

குடியுரிமை சான்றிதழ்களை நாம் தமிழர் கட்சியினர் எவரும் தர மாட்டோம். எங்களை முகாம்களில் அடைத்தாலும் அதை ஏற்போம். குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராடுகின்றனர்.
இது இஸ்லாமியர்களுக்கு மட்டுமான பிரச்சனை அல்ல; நாளை நமக்கும் இந்த பிரச்சனை வரும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த ரஜினிகாந்திடம் விளக்கம் கேட்க வேண்டும் என்று நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷனிடம் நான் வேண்டுகோள் வைத்தேன்.
அதை ஏற்றுதான் தற்போது ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அன்று தூத்துக்குடிக்கு செல்ல முடிந்த ரஜினியால் இன்று ஏன் செல்ல முடியவில்லை? வருமான வரித்துறை ரஜினிகாந்துக்கு ரூ66 லட்சம் விலக்கு அளிக்கிறது.
தகவல் தொழில்நுட்பப் பாசறை சார்பாக இன்று 23-02-2020 கிழக்கு தாம்பரம், அன்னை அருள் திருமண அரங்கத்தில் நடைபெற்ற நாம் தமிழர் சமூக ஊடக ஆர்வலர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு குறித்த #சீமான் அவர்களின் செய்தியாளர் சந்திப்பு.https://t.co/FDINpQ3tn3#NTKSocialMediaConvention2020 #Seeman
— நாம் தமிழர் கட்சி (@NaamTamilarOrg) February 23, 2020
அப்படியானால் சசிகலாவுக்கு ஒரு நீதி? ரஜினிகாந்துக்கு ஒரு நீதியா? ஏன் எனில் சசிகலா எங்க ஆள்.. ரஜினிகாந்த் உங்க ஆள் என்பதால்தானே.. மாநில சுயாட்சி பேசிய நாம், ஜம்மு காஷ்மீருக்கான 370-வது பிரிவு நீக்கம் குறித்து பேசவில்லை. சந்திரபாபு நாயுடு, கெஜ்ரிவால் போன்றவர்கள் இதை ஆதரிக்கிறார்கள்.
ராஜீவ் வழக்கில் 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும். மத்திய அரசு என்பது மாநிலங்களின் நிதியில் இயங்குகிறது. மத்திய அரசுக்கு என்று அதிகாரம் எதுவும் இல்லை. மாநிலங்களின் உரிமைகளை மதிக்க தவறினால் உள்நாட்டு யுத்தம் வரும் என்று அம்பேத்கர் ஏற்கனவே எச்சரித்துள்ளார். இவ்வாறு சீமான் கூறினார்.
-
குறுக்க இந்த கவுசிக் வந்தா.. 2026ல் டாக்டர் தனித்து போட்டி! ஏற்கனவே லைனில் சசி-அய்யா! 6 முனை போட்டி? -
நடிகர் கார்த்திக் இதுக்குதான் வர்றாரா? போயஸ் கார்டனில் இருந்து அந்த "உத்தரவு".. அலறிய முக்கிய கட்சி -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்?












Click it and Unblock the Notifications