தங்கம் மீது தப்பான வார்த்தையை முதலில் வீசியது தினகரன்தானாம்!
சென்னை: தங்க தமிழ்ச்செல்வனை தப்பான வார்த்தையில் முதலில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தான் விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்தே தினகரனை ஆபாசமாக திட்டும் ஆடியோ வெளியிடப்பட்டதாம்.
அமமுகவில் தினகரனை தலைவராக ஏற்றுக் கொண்டுதான் நிர்வாகிகள் வலம் வருகின்றனர். ஆனால் தொடக்கம் முதலே தங்க தமிழ்செல்வன் தங்களோடு ஒருவராகத்தான் தினகரனை நடத்தி வந்தார்.
ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கிய போது தமக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார். அதுநடக்காத நிலையில் தினகரனுடன் சேர்ந்து கொன்டு முதல்வர் எடப்பாடி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.

தங்கம் கருத்து வேறுபாடு
தினகரன் அணிதான் என்றாலும் தங்க தமிழ்ச்செல்வன் தனிஆவர்த்தனம்தான். எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தினகரனுடன் கருத்து வேறுபாடு தொடங்கியது. தற்போது பூதாகரமாக வெடித்து இருவரும் பிரிந்துவிட்டனர்.

போட்டுக் கொடுத்த பிரமுகர்
தினகரன், தங்கம் இடையேயான கருத்து வேறுபாட்டை ஊதி பெரிதாக்கியது ஒரு முக்கிய பிரமுகர்தானாம்.. தினகரனும் அந்த பிரமுகரும் பேசிக் கொண்டிருந்த போதுதான் தங்கம் தமிழ்ச்செல்வனை தப்பான வார்த்தைகளால் விளாசியிருக்கிறார் தினகரன். இந்த வார்த்தைகளை அச்சுபிசகாமல் அப்படியே தங்கத்திடம் அந்த பிரமுகர் போட்டு கொடுத்திருக்கிறார்.

ரிலீஸ் செய்த தேனி பிரமுகர்
இதில்தான் படுசூடாகிப் போன தங்கம், போனை போட்டு ஆபாச வார்த்தைகளால் அர்ச்சித்திருக்கிறார். இந்த அர்ச்சனைகளை தேனி பிரமுகர் ஒருவருக்கு போட்டும் காட்டியிருக்கிறார் தங்கம். அந்த தேனிபிரமுகர், தினகரனை டேமேஜ் செய்வதற்காகவே பத்திரிகையாளர்களுக்கு அனுப்பிவிட்டாராம்.

அடுத்த நம்பர் 2
தங்கம் விக்கெட் காலியானதில் தற்போது போட்டுக் கொடுத்த பிரமுகர் மிகவும் மகிழ்ச்சியாம். இனி அமமுகவில் தினகரனுக்கு அடுத்து நாம்தான்... என கெத்துகாட்டி வருகிறாராம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications