பளபளக்கும் பல்லவ ஸ்டைல்.. ஆனால் என்ன இருந்தாலும் திமுகவை இதுல அடிச்சிக்க முடியாது.. கவனிச்சீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகாபலிபுரத்தில் பல்லவ கட்டுமான கலையை பிரதிபலிக்கும் விதமாக, தென் மாவட்ட பயணிகளின் வசதிக்காக பிரம்மாண்ட பேருந்து நிலையம் வர உள்ளது. இந்த கட்டுமானம் தொடர்பாக முக்கியமான விவாதம் ஒன்று எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் அடையாளமாக இருக்கும் பல்வேறு கட்டுமானங்களை கட்டிய பெருமை திமுகவிற்கு உண்டு. சென்னை ஜெமினி பாலம் தொடங்கி கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை வரை பல விஷயங்கள் திமுகவின் கட்டிட கலை ஆர்வத்தை பிரதிபலிக்கும்.

Why the new Mahabalipuram massive bus stand gets appreciation for its Pallava style architecture?

பொதுவாக தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்டுமானம் வந்தாலும் அது தமிழர்களின் கட்டுமான கலை ஸ்டைலில் இருக்க வேண்டும் என்பதே பலரின் நோக்கமாக இருக்கும். ஆனால் புதிதாக கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அப்படியானது இல்லை. அதிமுக காலத்தில் கட்டப்பட்ட இது மாடர்ன் தோற்றம் கொண்டது. எந்த கட்டுமானமாக இருந்தாலும் அதில் தமிழர்களின் ஸ்டைலும் இருக்க வேண்டும் என்று பலரும் எதிர்பார்ப்பது உண்டு.

உதாரணமாக வள்ளுவர் கோட்டம் தொடங்கி பல எடுத்துக்காட்டுகளை சொல்லலாம். மாடர்ன் கட்டுமானமாக இருந்தாலும் கூட அது மருத்துவமனையாக மாற்றப்பட்ட புதிய தலைமை செயலகம் போல வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று பலர் விரும்புவது உண்டு. இது போன்ற கட்டிடங்களை எழுப்புவதில் திமுக அரசை அடித்துக்கொள்ள முடியாது என்றுதான் கூற வேண்டும்.

ஜல்லிக்கட்டு மைதானம், அண்ணா லைப்ரரி, கலைஞர் லைப்ரரி ஆகியவை இதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டுகள். அந்த வகையில்தான் மகாபலிபுரத்தில் பல்லவ கட்டுமான கலையை பிரதிபலிக்கும் விதமாக, தென் மாவட்ட பயணிகளின் வசதிக்காக பிரம்மாண்ட பேருந்து நிலையம் வர உள்ளது. முழுக்க முழுக்க இது பல்லவ ஸ்டைலில் கட்டப்படுவதுதான் இதன் சிறப்பே. மாடர்ன் தோற்றத்தில் அதே பேருந்து நிலையம் போல இல்லாமல் இதை பாரம்பரிய முறையில் கட்டுகின்றனர். இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன,

Why the new Mahabalipuram massive bus stand gets appreciation for its Pallava style architecture?

ஏன் பேருந்து நிலையம்: தென் தமிழ்நாட்டிற்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்களின் வசதிக்காகவே கோயம்பேடு பேருந்து நிலையம் (ஈசிஆர் வழி செல்லும் பேருந்துகள் மட்டும்), கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், தாம்பரம் புறநகர் பேருந்து நிலையங்கள் உள்ளன. ஆனாலும் கோயம்பேடு பேருந்து நிலையம் இடிக்கப்பட உள்ளதால் கோயம்பேடு பேருந்து நிலையம் மூடப்படும்.

இப்படிப்பட்ட நிலையில்தான் ஈசிஆரில் இன்னொரு பேருந்து நிலையத்தை பிரம்மாண்டமாக கட்ட முடிவு செய்துள்ளனர். மாமல்லபுரம் நகருக்கு வெளியே ECR இல் அமைய உள்ள இந்த புதிய பேருந்து முனையத்தை நிர்மாணிப்பதற்கான டெண்டரை CMDA வெளியிட்டு, ஒப்பந்ததாரரை இறுதி செய்துள்ளது.

சிஎம்டிஏ அமைச்சர் பி.கே சேகர் பாபு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாட்டினருக்கும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் முக்கிய இடமாக இருந்தாலும், மாமல்லபுரத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடத்தில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இதை மாற்ற முடிவு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார். ஆகஸ்ட் மாதம் புதிய பேருந்து நிலையத்தின் இடத்தைப் பார்வையிட்ட சேகர்பாபு, பயணிகளுக்கு எளிமையான பயண அனுபவத்தை அளிக்கும் வகையில் நவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையத்தை கட்டுவோம் என்று கூறியுள்ளார்.

Why the new Mahabalipuram massive bus stand gets appreciation for its Pallava style architecture?

எவ்வளவு பெரியது: அதன்படி 6.79 ஏக்கரில் 27,500 சதுர மீட்டர் பரப்பளவில் மொத்தம் ₹67 கோடி செலவில் புதிய பஸ் டெர்மினஸ் திட்டம் தொடங்கப்படும் என சிஎம்டிஏ தரப்பு தெரிவித்துள்ளது. இரண்டு மாடி கொண்ட பேருந்து முனையத்தில் இரு சக்கர வாகனம் மற்றும் கார் பார்க்கிங், தரைத்தள கடைகள், டிக்கெட் கவுன்டர்கள் மற்றும் காத்திருப்பு அறைகள் மற்றும் முதல் தளத்தில் அலுவலக அறைகள், தங்குமிடங்கள், பணியாளர்கள் ஓய்வு அறை மற்றும் கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சாட்டிலைட் சிட்டி: சென்னைக்கு அருகே ஆறாவது புதிய நகரமாக (செயற்கைக்கோள் நகரம்) மகாபலிபுரம் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் கீழ் மாநில வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி சார்பாக இங்கே உயர்த்தப்பட உள்ள கிராமங்களின் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, வளவந்தாங்கல், சந்தானம்பட்டு, நெம்மேலி, கிருஷ்ணங்கரணை, திருப்போரூர், சலுவன்குப்பம், பட்டிப்புலம், தண்டலம், வெங்கலேரி, ஆலத்தூர், கருங்குழிப்பள்ளம், பையனூர், சிறுதாவூர், அதிகமநல்லூர், காரணை, பஞ்சானந்தூர், அமஞ்சான்பட்டி, அமஞ்சான்பட்டி, அமமுகநல்லூர், அமமுகநல்லூர், தஞ்சைநல்லுார், ஆகிய வருவாய் கிராமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. , கொக்கிலிமேடு, மகாபலிபுரம், பூஞ்சேரி, காடம்பாடி, மற்றும் பெருமளேரி-வடகடம்பாடி-நல்லான்பிள்ளைப்பெற்றல் ஆகிய 25 கிராமங்கள் உயர்த்தப்பட உள்ளன.

Why the new Mahabalipuram massive bus stand gets appreciation for its Pallava style architecture?

இந்த கிராமங்கள் நகரங்களாக மாற்றப்பட்டு சர்வதேச தரத்திற்கு மாற்றப்பட உள்ளது. இங்கே இருக்கும் பழமையான புராதன சின்னங்களை பாதிக்காமல், சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக சர்வதேச தரத்திற்கு மகாபலிபுரத்தை உயர்த்தும் திட்டத்தை கையில் எடுத்துள்ளனர். 25 கிராமங்கள் சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் நிலையில் மகாபலிபுரம் சென்னையின் புதிய துணை நகரமாக, துணை அடையாளமாக மாறும், இங்கே முதலீடுகள் குவியும், போக்குவரத்து அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

பெரும்பொருட்செலவில் மாமல்லபுரத்தில் துணை கோள் நகரம் கொண்டு வர முடிவு செய்துள்ளனர். சென்னைக்கு மிக அருகில் மாமல்லபுரம் உள்ளது. நிறைய கடல் வளம் உள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் பகுதியாக உள்ளது. இங்கே துணைக்கோள் நகரம் வரும் பட்சத்தில் இந்த மாமல்லபுரம் மின்சார ரயிலுடன் இணைக்கப்படும். மெட்ரோவும் கூட இங்கே எதிர்காலத்தில் வர உள்ளது.

மெட்ரோ பணிகள் இந்த 20 ஆண்டுகளில் இங்கும் முடிக்கப்படும். தற்போது இங்கே நியூ டவுன் அமைப்பதற்கான கன்சல்டன்சி பணிகளுக்கு டெண்டர் விடுக்கப்பட உள்ளது. விரைவில் இதற்கான திட்ட அறிக்கை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னைக்கு இணையாக சர்வதேச தரத்தில் மாமல்லபுரம் இதன் மூலம் உயர்த்தப்படும். அண்ணா சாலை போல பெரிய சாலைகள், உயர் கட்டிடங்கள், சுற்றுலா அமைப்புகள் இங்கே உருவாக்கப்படும்.

அதேபோல் புதிய நிறுவனங்கள், முதலீடுகள் இங்கே ஈர்க்கப்படும். மேலும் சாலைக்கு கீழே மின்சாரம், ஸ்மார்ட் சிட்டி அமைப்புகள், நவீன கட்டிடங்கள், புதிய பாலங்கள் அமைக்கப்படும். முக்கியமாக இங்கே இருக்கும் கிழக்கு கடற்கரை சாலை வளத்தை பயன்படுத்திக்கொள்ள தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது

கடந்த காலங்களில் டெல்லி, கொல்கத்தா போன்ற நகரங்களில் நியூ டவுன்கள், சாட்டிலைட் சிட்டிகள், உருவாக்கப்பட்டன. அந்த நகரங்கள் தற்போது பெரிய வெற்றியும் அடைந்து உள்ளன. டெல்லியிலும் குர்கிராம், நொய்டா போன்ற இடங்களில் இதேபோல் துணை கோள் நகரங்கள் உருவாக்கப்பட்டன. அதேபோல் மாமல்லபுரத்தில் நியூ டவுன் கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.

சிங்கார சென்னை: ஏற்கனவே சிங்கார சென்னை 2.0 திட்டத்தை ஆட்சிக்கு வந்ததில் இருந்தே திமுக அரசு தீவிரமாக செயல்படுத்த முயன்று கொண்டு இருக்கிறது. தமிழ்நாடு பட்ஜெட்டில் கூட இது தொடர்பான பல முக்கியமான அறிவிப்புகள், திட்டங்கள் வெளியாகின.

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் புதிய சுற்றுலா பகுதிகளை உருவாக்குவது, பழைய சுற்றுலா பகுதிகளை மேம்படுத்துவது என்று பல முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

முக்கியமாக சென்னையில் இருக்கும் கடற்கரைகளை சுத்தப்படுத்தும் பணிகளும் நடந்து கொண்டு இருக்கின்றன. சென்னையில் பல புதிய அலங்கார அமைப்புகளை ஏற்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முக்கியமாக சாலைகளையும், பொது இடங்களையும் சுத்தப்படுத்தும் பணிகளும் சென்னையில் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+