சிறை தண்டனை ஏன்? கர்மா? நீங்கள் செய்த பாவமா? : மகாவிஷ்ணு திணறல்
சென்னை: பரம்பொருள் அறக்கட்டளையைச் சேர்ந்த மகாவிஷ்ணு சிறை தண்டனை பெற்று வெளியே வந்திருந்த நிலையில், முதன்முறையாக நடந்து முடிந்த சர்ச்சைக்குப் பின்னால் தனக்குக் கிடைத்த அனுபவம் என்ன என்பதைப் பற்றி மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் சென்னை அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்ற ஆன்மிக பேச்சாளர் மாணவர்கள் மத்தியில் பேசிய விசயம் மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பி இருந்தது. அவர் தெரிவித்த சில கருத்துகள் தங்களைப் போன்ற மாற்றுத் திறனாளிகளின் மனதைப் புண்படுத்தும் விதமாக இருக்கின்றது என்று தமிழாசிரியர் சங்கர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அந்த விவாதம் தொடர்பான வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் வெளியாகி கண்டனங்கள் எழுந்தன. ஆசிரியர் சங்கரின் கருத்துக்கு ஆதரவாகப் பலரும் நின்றனர்.

அந்தச் சர்ச்சையை அடுத்து சைதாப்பேட்டை காவல்நிலையத்திலும் அசோக் நகர் காவல்நிலையத்திலும் புகாரளிக்கப்பட்டதை அடுத்து மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைதும் செய்யப்பட்டார். சிறை சென்ற அவருக்குக் கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.
வெளியே வந்த பிறகு முதன்முறையாக ஒரு யூடியூப் சேனலுக்கு மகாவிஷ்ணு பேட்டி அளித்துள்ளார். சிறை அனுபவம் பற்றி சில கருத்துகளை அவர் தெரிவித்துள்ளார். மகாவிஷ்ணு தன் பேட்டியில், "நான் எதையும் புதுசா சொல்லவில்லை. ஒளவையார் முன்பே சொன்னதைத்தான் அந்தப் பள்ளியில் நான் சொன்னேன். 'அரிது அரிது மானிடரா பிறத்தல் அரிது' என்றார் அவர். 'அதனினும் அரிது கூன் குருடு செவிடு பேடு இன்றி பிறத்தல் அரிது'என்று அவர் தான் சொல்லி இருக்கிறார். அவர்தான் 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்றும் சொல்லி இருக்கிறார். ஊழ்வினை என்பதுதான் வள்ளுவர் சொன்னார். ஒளவை சொன்னார். அதைத்தான் நான் பள்ளி மாணவர்கள் மத்தியில் பேசும் போது சொன்னேன். அது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது.
நான் அந்தப் பள்ளியிலிருந்த ஆசிரியரைத் தனிப்பட்ட முறையில் பேசவில்லை. ஊழ்வினை பற்றி பொதுவாகச் சொன்னது அவரை பாதித்துவிட்டது. அதை முழுமையாக உணர்ந்தேன். அங்கே நான் அன்று கோபமாகப் பேசவில்லை. ஆனால், கொஞ்சம் சத்தமாகப் பேசிவிட்டேன். அப்படிப் பேசியது தவறுதான். அந்த இடத்தில் இன்னும் சற்று கவனமாக நான் விசயத்தைக் கையாண்டிருக்க வேண்டும். அதில் தவறி இருக்கிறேன் என்ற கருத்தை ஏற்கிறேன்.

யாருக்காக இருந்தாலும் அடி சறுக்கும். எனக்கும் அப்படிதான் சறுக்கிவிட்டது. நான் இன்னும் முழு ஞானத்தைப் பெற்றுவிடவில்லை. அந்த நிலையை அடைந்திருந்தால், இன்னும் பக்குவம் பெற்றிருப்பேன். நானும் ஆன்மிக பயணத்தில் இருப்பவன். எனக்கும் அடி சறுக்கும். அன்று அதுதான் நடந்தது" என்று பேசி இருக்கிறார்.
திடீரென்று சிறைக்குப் போகும் அளவுக்கு உங்கள் வாழ்க்கை மாறியது எதனால்? அது நீங்கள் செய்த தர்மத்தாலா? அல்லது கர்மத்தாலா? என்ற கேள்விக்குப் பதிலளித்த மகாவிஷ்ணு, "சிறைக்குப் போவது என்பது தவறானது இல்லையே? விஷ்ணு கூட சிறையில்தான் பிறந்தார். நீ நல்லது செய். மக்களுக்குச் சேவை. அப்படி வாழ்ந்தால் சிறைக்கே போகமாட்டாய் என்று நான் எங்கேயும் போதிக்கவில்லை. நான் செய்த கர்ம வினைக்கு ஏற்ப என் வாழ்க்கை அமைகிறது. அதில் வருவது எதுவும் நல்லதும் கிடையாது. கெட்டதும் கிடையாது. அது அனுபவம். அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதான் ஆன்மிகம்" என்று தெரிவித்துள்ளார்.
இந்தக் கைது சம்பவம் பின்னால் ஏதேனும் திட்டமிட்ட சதி இருக்கும் என நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு மகாவிஷ்ணு, "அதில் சதி இருப்பதாக நினைக்கவில்லை. அது ஒரு பாடம் என்று எடுத்துக்கொண்டுள்ளேன்" என்று பேசி இருக்கிறார்.
-
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications