இந்தியாவிற்குள் கால் பதித்த HMPV வைரஸ்.. மீண்டும் லாக்டவுன் வருமா? வாய்ப்பே இல்லை.. ஏன் தெரியுமா?
சென்னை: இந்தியாவில் முதல் HMPV வைரஸ் கேஸ் பதிவாகி உள்ள நிலையில், மீண்டும் லாக் டவுன் போன்ற கட்டுப்பாடுகள் வருமா என்று பலரும் கேட்க தொடங்கி உள்ளனர்.
பெங்களூருவில் 8 மாத குழந்தைக்கு HMPV வைரஸ் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. குழந்தை காய்ச்சல் காரணமாக பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்தப் பரிசோதனையில் அவருக்கு HMPV வைரஸ் இருப்பது தெரியவந்தது. ஆனால், இது குறித்து கவலைப்படத் தேவையில்லை என, கர்நாடகாவின் சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஹர்ஷா குப்தா தெரிவித்து உள்ளார்.

இந்தியாவில் இதன் கேஸ் பதிவாகி இருந்தாலும்.. மீண்டும் லாக்டவுன் வருவதற்கு வாய்ப்புகள் குறைவு. இதற்கு பின் சில காரணங்கள் உள்ளன.
1. HMPV வைரஸ் புதிய வைரஸ் இல்லை. ஏற்கனவே கிட்டத்தட்ட இந்தியாவில் 0.7 சதவிகிதம் பேருக்கு இந்த வைரஸ் உள்ளது. அதனால் லாக்டவுன் அவசியம் இல்லை.
2. கொரோனா அளவிற்கு இது வேகமாக பரவாது. கொரோனா அளவிற்கு வேகமாக உருமாற்றம் அடையாது.
3. HMPV வைரஸ் ஏற்கனவே இந்தியாவிலும் உள்ளது. இந்தியாவிற்கு புதிது கிடையாது. ஆனால் இப்போது ஏற்பட்ட வைரஸ் சீனாவில் பரவும் அதே உருமாற்றம் அடைந்த வைரஸ்ஸா என்ற கேள்வி எழுந்துள்ளது. சீனாவில் பரவும் உருமாற்றம் அடைந்த வைரஸின் ஜீனோம் எப்படி இருக்கும் என்று இந்தியாவிற்கு இதுவரை தெரியாது. சீனா இந்த விவரங்களை இன்னும் உலக சுகாதார மையத்திடம் முழுமையாக பெறவில்லை.
4. அந்த விவரங்கள் வந்தால் மட்டுமே அச்சப்படலாமா இல்லையா என்று தெரிய வரும்.
5. அதேபோல் இந்த வைரஸ் இன்னும் பெரிய அளவில் அச்சப்படும் அளவிற்கு பரவவில்லை. எனவே கவலைப்பட தேவை இல்லை.
6. வேண்டுமென்றால் வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் பயணிகள் சோதனை செய்யப்படலாம். ஆனால் இந்தியாவிற்குள் லாக்டவுன் வர வாய்ப்பு இல்லை.
7. இந்தியாவிற்குள் ஒரு சில கட்டுப்பாடுகள்.. பயண கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படலாம். சோதனைகள் கட்டாயமாக்கப்படலாம்.
வைரஸ் பின்னணி:
சீனாவில் இளைஞர்கள் இடையே முக்கியமாக சிறுவயதை சேர்ந்தவர்கள் இடையே இது அதிகம் ஏற்படுகிறது. கொரோனா எப்படி பூமர் வைரஸ் என்று அழைக்கப்பட்டது.. அப்படி இது ஜென் ஆல்பா வைரஸ் என்று அழைக்கும் வகையில்.. வயது குறைவானவர்களை இந்த வைரஸ் அதிகம் பாதித்து வருகிறது. பெரும்பாலான குழந்தைகள் சில நாட்களில் குணமடைவார்கள், இருப்பினும் கடுமையான நோய்களுக்கு மருத்துவமனையில் சேர்க்க வேண்டியிருக்கலாம்.
அந்த வகையில் இந்தியாவில் ஏற்பட்ட பாதிப்பும் குழந்தைக்கு ஏற்பட்டு உள்ளது. அந்த குழந்தையின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர்.
HMPV எவ்வாறு பரவுகிறது?:
HMPV இருமல் அல்லது தும்மல், தொடுதல் அல்லது கைகுலுக்குதல் போன்ற நெருங்கிய தொடர்பு மூலம் பரவும். அசுத்தமான இடங்களில் இந்த வைரஸ் இருக்கலாம், வாய், மூக்கு அல்லது கண்களைத் தொடுவதன் மூலம் பரவும், நீர்த்துளிகள் மூலம் பார்வையும். இதனால் மாஸ்க் போடுவது பலன் அளிக்கும்.
HMPV 2001 இல் கண்டுபிடிக்கப்பட்டது. HMPV ஆனது நியூமோவிரிடே குடும்பத்தைச் சேர்ந்தது. அந்த குடும்பத்து வைரசுகள் பொதுவாக சுவாசம் தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்தும். பொதுவான சளி அல்லது காய்ச்சல் போன்ற அறிகுறிகளை கொண்டு இருக்கும். மூச்சு விடுவதில் அதிக சிரமத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications