ஏன் அதிமுக கூட்டங்களில் "நான் வெஜ்" போடுவது இல்லை? எடப்பாடியின் முடிவு.. ஜெயலலிதா கூட இப்படி இல்லையே
சென்னை; அதிமுக மாநாடுகளில் தற்போதெல்லாம் நான் வெஜ் உணவுகள் பயன்படுத்தப்படாமல் இருப்பது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக கட்சி உருவாக்கப்பட்டு 51 ஆண்டுகள் நடந்து முடிந்துவிட்டன. திமுகவிற்கு இணையான கட்சி என்றாலும் மாநாடுகளை நடத்துவதில் எப்போதுமே அதிமுக இரண்டாம் இடம்தான். திமுக அளவிற்கு அதிமுக பிரம்மாண்ட மாநாடுகளை நடத்தியது இல்லை.

அதிமுக நடத்திய மாநாடுகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். அதிலும் அதிமுகவின் மாநாடுகள் கடந்த 10 வருடங்களாக நடக்கவே இல்லை. இந்த நிலையில் அதிமுகவை கைப்பற்றியதும் மதுரையில் எடப்பாடி பழனிசாமி மாநாட்டை நடத்தி காட்டி இருக்கிறார்.
மதுரையில் அதிமுகவின் எழுச்சி மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆன பின் நடந்த மிகப்பெரிய மாநாடு ஆகும் இது.
உணவு வேஸ்ட்: மதுரை ரிங்ரோடு பகுதியில் இந்த கூட்டம். நடந்தது. கிட்டத்தட்ட 63 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
2 லட்சம் பேர் கலந்து கொள்ளும் விதமாக இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்தது. கூட்டத்திற்கு வரும் மக்கள் பலர் நேற்றே இதற்காக மதுரை வந்து சேர்ந்தனர். மதுரையில் காலை எடப்பாடி பழனிசாமி கொடி ஏற்றி கூட்டத்தை தொடங்கி வைத்தார். கூட்டத்தில் 3 லட்சம் பேருக்கு உணவு தயாரிக்கப்பட்டது.
புளி சாதம் தயாரிக்கப்பட்டதால் உணவு வீணாய் போனது. 1 லட்சம் பேர் மட்டுமே கூட்டத்திற்கு வந்ததால் நேற்று 2 லட்சம் பேருக்கான உணவு தரையில் கொட்டப்பட்டது. இந்த சம்பவம் இணையத்தை உலுக்கி உள்ளது. இந்த பல்வேறு விஷயங்களால் தற்போது மதுரையில் நடைபெற்ற பிரம்மாண்ட அதிமுக மாநாடு தற்போது பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகி இருக்கிறது.
என்ன காரணம்?: இந்த மாநாட்டில் உணவு வீணாக போனதற்கு பின் வரும் காரணங்கள் சொல்லப்படுகிறது. புளி சாதம் செய்தது முதல் காரணம். இதற்கு சாம்பார் கொடுத்தது இரண்டாவது காரணம். அதில் உப்பு இல்லாமல் போனது மூன்றாவது காரணம். பொதுவாக புளி சாதம் வீணாகாது என்று முதல் நாள் இரவே செய்துள்ளனர்.
ஆனால் இப்படி பெரிய கூட்டங்களுக்கு புளி சாதம் போடுவது என்பது முட்டாள்தனம். ஏனென்றால் அதன் சுவை எல்லாம் ஒரு அளவில் செய்யும் வரைதான். அளவு கூட கூட.. அதன் சுவை குறைந்து கொண்டே செல்லும். பிரியாணி எப்படி அளவு கூட கூட சுவை அதிகரிக்குமா அதற்கு எதிர்பதம் புளியோதரை. இதை போய் ஒரு பெரிய கூட்டத்திற்கு. அதுவும் கட்சி கூட்டத்திற்கு போட்டது மிகப்பெரிய அளவில் விமர்சனம் ஆகி உள்ளது.

அதிமுக கூட்டங்கள்: இது போக அதிமுக மாநாடுகளில் தற்போதெல்லாம் நான் வெஜ் உணவுகள் பயன்படுத்தப்படாமல் இருப்பது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. கடைசியாக நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி எதிலுமே நான் வெஜ் உணவுகள் போடப்படவில்லை. சமீபத்தில் நடந்த திமுக கூட்டத்தில் கூட .. ஏன் விஜய் நடத்திய மக்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் கூட பிரியாணி போடப்பட்டது.
பரம்பரையாக நான் வெஜ் சாப்பிடாத ஜெயலலிதா இருந்த போது கூட அதிமுக கூட்டங்களில் நான் வெஜ் போடப்பட்டது. எம்ஜிஆர் என்றால்.. அவர் அளிக்கும் அசைவ உணவுதான் பிரபலம். ஆனால் அப்படி எல்லாம் அதிமுக கூட்டங்களில் அசைவம் போடப்பட்ட காலம் போய் எடப்பாடி காலத்தில் வெறும் வெஜ் என்ற நிலை வந்துள்ளது.
இதற்கு காரணம் காசு இல்லை.. எடப்பாடியின் முடிவுதான் என்கிறார்கள். அசைவம் போட வேண்டாம் என்ற முடிவில் எடப்பாடி இருக்கிறாராம். சில சாஸ்திர நம்பிக்கை காரணமாக அவர் நான் வெஜ் போடாமல் தவிர்த்து வருகிறாராம். கோவில் பூஜைகளை தவிர்த்து வேறு எங்கும் கறி விருந்து கொடுக்க கூடாது என்ற முடிவில் அவர் இருப்பதால்தான் தொண்டர்களுக்கு புளி சாதம் போடப்பட்டதாக கூறப்படுகிறது.
-
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர்












Click it and Unblock the Notifications