மு.க.ஸ்டாலின் “தளபதி” ஸ்டாலின் என்று அழைக்கப்படுவது ஏன்?
சென்னை: திமுகவின் இளைஞரணி நாளான இன்று கட்சியின் முன்னாள் இளைஞரணி செயலாளர் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு தளபதி என்ற அடைமொழி வந்ததற்கான காரணத்தை எம்.எல்.ஏ. டி.ஆர்.பி ராஜா ட்விட்டரில் பகிர்ந்து இருக்கிறார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி நாள் ஜூலை 20 ஆம் தேதியான இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இதுகுறித்து முகநூலில் பதிவிட்ட திமுகவின் முன்னாள் இளைஞரணி செயலாளர் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், "கழகம் வில்லென்றால் இளைஞரணி கணை என்றார் கலைஞர்! 42 ஆண்டுகள் கடந்தும் அக்கணையின் வேகமும் வலிமையும் கூர்மையும் குறையவில்லை! மாறாகக் கூடிக்கொண்டே போகிறது.

திமுக இளைஞரணி
காலத்திற்கும் களத்திற்கும் ஏற்ப கடமையாற்றி, கழகத்துக்கு இளைஞரணி துணைநிற்க வேண்டும்! எதையும் தாங்கும் இயக்கம்! இயக்கத்தைத் தாங்கி நிற்கும் இளைஞரணி! நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும், இளைஞரணியின் ஈட்டிமுனைகளான இனிய செயல்வீரர்களுக்கும் உங்களில் ஒருவன் எழுதும் மடல். திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கம் எப்போதுமே இளைஞர்களின் பாசறையாக - பாடிவீடாக விளங்குகின்ற இயக்கம்.

கோபாலபுரம் இளைஞர் தி.மு.க.
அதனால்தான் என் இளமைப் பருவத்திலேயே பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் - நாவலர் நெடுஞ்செழியன் - இனமானப் பேராசிரியர் உள்ளிட்டோரின் செயல்பாடுகளைக் கண்டு, அதனால் உந்துதல் பெற்று, நண்பர்களுடன் இணைந்து கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. என்ற அமைப்பைத் தொடங்கினேன். மாநகராட்சித் தேர்தல் பரப்புரைப் பணியில் ஈடுபட்டேன். பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கினேன். கழகப் பிரச்சார நாடகங்களில் மேடையேறினேன். முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றும் மேடைகளில் ஓரமாக அமர்ந்து, அவர்களின் உரைகளை ஒரு டேப்ரெகார்டரில் பதிவு செய்து, பின்னர் அதனை முரசொலியில் அச்சிட ஏற்ற வகையில் எழுதித்தரும் பணியையும் மேற்கொண்டேன்.

1980 ஆம் ஆண்டு
கருப்பு - சிவப்பு என்பது கழகத் தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் குருதியுடன் கலந்த உணர்வு. அந்த உணர்வுமிக்க இளைஞர்களைக் கொண்டு, 1980-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் நாள் கழகத் தலைவர் கலைஞர் அவர்களால் மதுரை ஜான்சிராணி பூங்காவில் தி.மு.கழகத்தின் துணை அமைப்பாக இளைஞரணி உருவாக்கப்பட்டது. 'கழகம் வில்லாம்! நின் அணியே கணையாம்' என நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள் சொன்னதற்கேற்ப, அன்றைக்கு எதிர்க்கட்சியாக இருந்த கழகத்தினை வலிமைப்படுத்திடவும், இளைய ரத்தம் கொண்ட புதிய பட்டாளத்தை ஜனநாயகப் போர்ப்படையாக உருவாக்கிடவும் உங்களில் ஒருவனான என்னிடம் இளைஞரணியின் செயலாளர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின்
இளைஞரணி தொடங்கப்பட்டு 42 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தற்போது அதனை தம்பி உதயநிதி அவர்கள் சிறப்பாக முன்னெடுத்து வருவதைக் கண்டு தந்தையாக அல்லாமல், கழகத்தின் தலைவராக மகிழ்கிறேன். காலத்திற்கும் களத்திற்கும் ஏற்ற வகையில் அதன் செயல்பாடுகள் தொடரவேண்டும் என விரும்புகிறேன். நாடாளுமன்ற - சட்டமன்றத் தேர்தல் களத்தில் தம்பி உதயநிதியும் அவரது இளைஞரணிப் பட்டாளத்தினரும் ஆற்றிய முனைப்பான பணிகள் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் மகத்தான வெற்றிக்குத் துணை நின்றன. குடியுரிமைத் திருத்தச் சட்டம் எதிர்ப்பு, நீட் விலக்குப் போராட்டம், கொரோனா கால நிவாரணப் பணிகள் ஆகியவற்றில் இளைஞரணியின் பங்களிப்பை ஒரு தாயின் உணர்வுடன் கவனித்து பெருமை கொண்டேன்." என்று குறிப்பிட்டார்.

“தளபதி” என்ற அடைமொழி
இந்த நிலையில் திமுக இளைஞரணி தினத்தை முன்னிட்டு அக்கட்சியின் தொழில்நுட்ப பிரிவு நடத்தி வரும் DMK IT WING ட்விட்டர் பக்கத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தளபதி என்ற அடைமொழி வந்ததற்கான காரணம் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதில், "இளைஞரணியின் முதல் மாநிலச் செயலாளரான மு.க.ஸ்டாலின் மாநிலம் முழுவதும் அமைப்பை வலுப்படுத்தி, திமுகவின் பேரணிகளிலும் போராட்டக்களங்களிலும் இளைஞரணியை திறம்பட முன்னிருத்தியதால் தளபதி எனப் பெயர் பெற்றார்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனை ட்விட்டரில் பகிர்ந்துள்ள திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா, "தளபதி யை நமக்கு தந்த திமுக இளைஞர் அணி" என்று குறிப்பிட்டுள்ளார்.
-
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
திமுக கூட்டணியில் 7 சீட்டா? எந்தெந்த தொகுதிகள்? நாளை மேஜர் மீட்டிங்.. இறுதி முடிவெடுக்கும் விசிக! -
Duraimurugan: தவாக வேல்முருகன் விலகியது குறித்த கேள்விக்கு! துரைமுருகனின் face expression-ஐ பாருங்க -
திமுகவால் எப்படி சமூகநீதி அரசாக நடைபோட முடியும்? ஊழலை தோலுரித்து காட்டுவேன்! வேல்முருகன்












Click it and Unblock the Notifications