செந்தில் பாலாஜிக்கு வசமான செக் மேட்.. இனிமேல் ஜாமீன் கிடைத்தாலும் சிக்கல்தான்.. ஏன் தெரியுமா?
சென்னை: செந்தில் பாலாஜி மீது வழக்குத்தொடர ஆளுநர் அனுமதி அளித்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்ற வழக்கு தொடர அனுமதி அளித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் சரமாரி குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது. இதனால் செந்தில் பாலாஜிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
ஆளுநர் ஆர்.என். ரவி அனுமதி அளித்ததாக தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் தகவல் தெரிவித்துள்ளது. முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், செந்தில் பாலாஜி மீதான வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்காமல் உள்ளனர். அதோடு அவருக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிய வேண்டும்.

ஆனால் தமிழக அரசு வழக்கு பதியாமல் உள்ளது என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி அபய்.எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணை செய்யப்பட்டது. அதில் செந்தில் பாலாஜிக்கு எதிரான பண மோசடி வழக்குகளில் ஆளுநர் ரவி இன்னும் அனுமதி அளிக்கவில்லை. அவர் அனுமதி அளித்தால் விசாரணை செய்ய முடியும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதை பற்றிய ஆவணங்களை வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில்தான் செந்தில் பாலாஜி மீது வழக்குத்தொடர ஆளுநர் அனுமதி அளித்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்ற வழக்கு தொடர அனுமதி அளித்துள்ளது.
குற்றச்சாட்டு: இதில்தான், இத்தனை காலம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கு விசாரணைக்கு ஒப்புதல் வழங்காமல் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நிலுவையில் வைத்தது ஏன் என உச்சநீதிமன்ற நீதிபதி ஓகா கேள்வி எழுப்பியுள்ளார். அதோடு இல்லாமல்.. செந்தில் பாலாஜி வழக்கை கீழமை நீதிமன்றம் எப்படி விசாரிக்க போகிறார்கள் என்று கண்காணிக்க போகிறோம்.
உச்சநீதிமன்றம் நேரடியாக எல்லாத்தையும் கண்காணிக்கும். விசாரணை எவ்வாறு நடைபெறுகிறது என்று கவனமாக பார்ப்போம்.. ஏன் அவ்வப்போது அறிக்கை பெற்று மேற்பார்வை செய்வோம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதனால் இனி இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்தாலும் சிக்கல்தான் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. அதாவது ஜாமீன் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது... ஆனால் அதன் பின் வழக்கில் தீவிரமாக தொடர்ந்து விசாரணை நடக்கும் என்பதால் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.
செந்தில் பாலாஜி வழக்கு: இதே அமர்வில் செந்தில் பாலாஜிக்கு விரைவில் ஜாமீன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. PMLA வழக்குகளில் ஜாமீன் என்பது விதி, சிறை என்பது விதிவிலக்கு என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. ஜார்காண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுடன் சேர்ந்து பணமோசடி செய்ததாக அமலாக்கத்துறையால் கைதான பிரேம் பிரகாஷ் என்பருக்கு ஜாமின் வழங்கி தீர்ப்பு வழங்கி உள்ளது.
அதாவது PMLA வழக்கு என்பது சிறப்பு வழக்கு கிடையாது . எந்த வழக்காக இருந்தாலும்.. ஜாமின் என்பது விதி, சிறை என்பது விதிவிலக்கு என்பதே விதி. அதை இதிலும் பின்பற்றலாம் என்று நீதிபதிகள் குறிப்பிட்டு உள்ளனர். இது மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கிலும் பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளன.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதானவழக்கில் இதுவரை வைக்கப்பட்ட வாதங்கள் கவனம் பெறுகின்றன. இந்த வழக்கில் வாதங்கள் மொத்தமாக நிறைவு பெற்றுள்ளன. கடந்த வாரம் இந்த வழக்கில் உத்தரவு ஒத்திவைக்கப்பட்ட நிலையில்.. விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் செந்தில் பாலாஜி மனு விசாரணை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். 3000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்று முறையிட்டார். அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில், அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அவரது ஜாமீன் மனு சில நாட்களுக்கு முன் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் செந்தில் பாலாஜி மனு விசாரணை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது.
வழக்கில் வைக்கப்பட்ட வாதங்கள்: இதுவரை இந்த வழக்கில் வைக்கப்பட்ட வாதங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
1. பிஎம்எல்ஏ சட்ட பிரிவில் ஜாமீன் வழங்கப்பட கூடாது என்று விதி இல்லை. ஜாமீன்.. என்பது பிஎம்எல்ஏ வழக்கில் கொடுக்கப்பட வேண்டும் என்று வாதம் வைக்கப்பட்டது. இதையேதான் உச்ச நீதிமன்றமும் கூறி உள்ளது.
2. முதலில் அமலாக்கத்துறை இதில் மிகவும் தாமதமாக ஆவணங்களை கொடுத்தது. உதாரணமாக கடந்த மே 6ம் தேதி விசாரணையின் போது அமலாக்த்துறை வேண்டும் என்றே வழக்கை தாமதப்படுதுகிறது என்று செந்தில் பாலாஜி தரப்பு வாதிட்டது. அன்று வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் அன்றுதான் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்தது. அமலாகக்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், செந்தில் பாலாஜி ஜாமின் கோரி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை பதில் மனுவில் கூறியிருப்பதாவது: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகும், எம்எல்ஏ பொறுப்பில் உள்ளதால் influential person-ஆக உள்ளார்; வழக்கு தொடர்புடைய சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளதால் செந்தில்பாலாஜிக்கு ஜாமின் வழங்கக்கூடாது., விசாரணையின்போது செந்தில்பாலாஜி உரிய ஒத்துழைப்பை வழங்கவில்லை, என்று கூறியது.
3. இதற்கு செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த பதிலில், 320 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறேன் ஆனால் வேண்டுமென்றே இந்த வழக்கில் தாமதம் செய்ய வேண்டும் என்பதற்காக கடைசி நேரத்தில் பதில் மனுவை அமலாக்கத்துறை தாக்கல் செய்திருக்கிறது, என்று செந்தில் பாலாஜி இதற்கு பதில் அளித்தார்.
4. இதையடுத்து அமலாக்கத்துறை அளித்த பதிலில்.. நாங்கள் இந்த வழக்கில் தாமதமாக பதில் அளித்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். வேண்டும் என்றே நாங்கள் தாமதம் செய்யவில்லை, என்று அமலாக்கத்துறை கூறியது . தொடர்ந்து மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் விசாரணையை மே 15ம் தேதிக்கு ஒத்திவைத்தது.. இதனால் நீதிபதிகள் பதில் மனுவை படிக்க கூட முடியவில்லை. இதனால் அப்போது வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
5. செந்தில் பாலாஜி: செந்தில் பாலாஜி உடல்நிலை சரியில்லை. அதனால் அவருக்கு இடைக்கலஜா ஜாமீன் வழங்க வேண்டும். மருத்துவ காரணங்களால் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications