மோடி மட்டும்தான்.. பாஜகவில் கவனிச்சீங்களா.. வெளியே வராத "டாப்" மூத்த தலைவர்கள்.. என்ன ஆச்சு?
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி மட்டுமே பாஜக சார்பாக பெரும்பாலான இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு உள்ளார். மற்ற தலைவர்கள் பெரும்பாலும் பிரச்சாரத்திற்கு செல்லவில்லை.
பாரதிய ஜனதா கட்சி 2024 லோக்சபா தேர்தலில் 370 இடங்களை வெல்வதை லட்சிய இலக்காக நிர்ணயித்துள்ளது. 2019 ஐ விட 67 இடங்கள் அதிகம் வெல்வோம் என்று பாஜக தலைவர்கள் மேடைக்கு மேடை அறிவித்து வருகின்றனர். ஆனால் பாஜகவால் இந்த இலக்கை அடைய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தலும் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

தேர்தல் இறுதிக்கட்டம்: நாடு முழுக்க 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. ஏப்ரல் 19, ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதல் மூன்று கட்டத் தேர்தலில் முறையே 66.1, 66.7 மற்றும் 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 2019 தேர்தலை விட இதுவரை வாக்குப்பதிவு குறைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் 4ம் கட்ட தேர்தல் 9 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசத்தில் நடந்தது. ஆந்திரப் பிரதேசத்தில் 25 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இதில் 67.25 சதவிகித வாக்குகள் பதிவானது.
கடந்த வாரம் 6 மாநிலங்களில் 5ம் கட்ட தேர்தல் நடந்தது. இதில் 60.48% வாக்குகள் பதிவாகி உள்ளது.
நேற்று 6ம் கட்ட தேர்தல் நடந்தது. நேற்று நடந்த ஆறாவது கட்டத் தேர்தலில் எட்டு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் (UTs) மொத்தம் 889 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
நேற்று 6 ஆம் கட்ட மக்களவைத் தேர்தலில் தேர்தலை சந்தித்த 58 தொகுதிகளில் தோராயமாக 61.75 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. இனி கடைசியாக 7ம் கட்ட தேர்தல் நடக்க உள்ளது. 7ம் கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதி நடக்க உள்ளது. ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வர உள்ளன.
மோடி பிரச்சாரம்: இந்த லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி மட்டுமே பாஜக சார்பாக பெரும்பாலான இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு உள்ளார். மற்ற தலைவர்கள் பெரும்பாலும் பிரச்சாரத்திற்கு செல்லவில்லை
பிரதமர் மோடி கிட்டத்தட்ட எல்லா மாநிலத்திற்கும் பிரச்சாரத்திற்கு சென்றுவிட்டார். தமிழ்நாட்டில் 5 முறை, கேரளாவிற்கு 2 முறை, ஒடிசாவிற்கு 6 முறை, உத்தர பிரதேசத்திற்கு 5 முறை, பீகார், கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு 4 முறை, மேற்கு வங்கத்தில் 3 முறை என்று பிரதமர் மோடி விடாமல் பிரச்சாரம் செய்து வருகிறார்.
ஆனால் பாஜகவின் மற்ற தலைவர்கள் பெரிதாக எங்கும் பிரச்சாரம் செய்யவில்லை. உதாரணமாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தர பிரதேசத்தில் மட்டுமே இருந்தார். ஒரே ஒரு முறை ராஜஸ்தான் சென்றார். பீகார் சென்றார். மத்திய பிரதேசத்தில் பாஜகவின் டாப் லீடர், அடையாளமாக இருந்த சிவராஜ் சிங் சவுகான் அங்கேயே பிரச்சாரம் செய்ய வரவில்லை.
சில முறை அவர் பாஜக பொதுக்கூட்டங்களில் கூட மேடைகளுக்கு வரவில்லை. ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே ஓரம்கட்டப்பட்டு விட்டார். கர்நாடகாவில் எடியூரப்பா வெளியே வரவே இல்லை. பாஜகவின் அடையாளமாக பல மாநிலங்களில் இருந்தவர்கள் பெரிதாக வெளியே தலைகாட்டவில்லை.
பாஜக ஸ்மிரிதி இராணி மட்டும் சில மாநிலங்களில் பிரச்சாரம் செய்தார். ஆனால் அது எடுபடவில்லை, அமித் ஷாவும் இந்த முறை தென்னிந்தியாவில் பெரிதாக தலைகாட்டவே இல்லை. ராஜ்நாத் சிங், நிதின் கட்கரியும் 90 சதவிகிதம் டெல்லி தாண்டி பிரச்சாரம் செய்யவே இல்லை. பாஜகவில் ஏன் மூத்த லீடர் பிரச்சாரத்திற்கு வரவில்லை என்ற கேள்வி விவாதம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications