Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய், அஜிதாவுக்கு பதவி கொடுக்காதது ஏன்? நாடார் ஓட்டுதான் காரணமா? தூத்துக்குடியில் நடப்பது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக நிர்வாகிக்கு தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி மறுக்கப்படுவதற்கு என்ன காரணம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முதல் காரணமாக ஜாதி என சொல்லப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்திற்கு செயலாளரை தவெக நியமிக்கவில்லை. கடந்த 20 ஆண்டுகளாக விஜய் மக்கள் இயக்கம், தவெகவில் உழைத்து வரும் அஜிதா, அந்த பதவி தனக்கு கிடைக்க வேண்டும் என கேட்கிறார். அதற்கேற்ப அவர் தூத்துக்குடி மாவட்டத்தில் நிறைய பணிகளையும் செய்துள்ளார்.

vijay tvk panaiyur

இதை அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டும் வருகிறார். இன்றைய தினம் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு விஜய் வந்த போது அங்கு வந்த அஜிதா, அவரது காரை வழிமறித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் விஜய்யோ அஜிதாவிடம் எதுவும் கேட்காமல் காரில் சென்றுவிட்டார். இந்த நிலையில் அஜிதாவுக்கு ஏன் பதவி கொடுக்கப்படவில்லை, அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும் சாமுவேலுக்கு எப்படி பதவி வழங்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது, எதற்காக அவருக்கு பதவி கொடுக்கப்படுகிறது என்பது குறித்து பார்க்கலாம்.

இதுகுறித்து தவெக மூத்த நிர்வாகிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது : தூத்துக்குடி மாவட்டத்தில் நாடார் சமூகத்தினர் அதிகம் வசிக்கிறார்கள். பெரும்பாலும் அவர்களே தேர்தலில் வென்றுள்ளனர். சாமுவேல் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். ஆனால் அஜிதா மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு பதவி வழங்க மறுக்கப்படுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தன.

ஆனால் உண்மையில் என்ன காரணம் என தெரியவில்லை. இவ்வாறு நிர்வாகிகள் தெரிவித்தனர். தூத்துக்குடி தொகுதியில் 1971 ஆம் ஆண்டு நடந்த தேர்தல் முதல் இன்று வரை 6 முறை அதிமுகவும், 6 முறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நாடார், தேவர், மீனவ சமூகத்தினர் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் பட்டியலினத்தவர்களும் அருந்ததியர்களும் வசிப்பதாக தெரிகிறது. இங்கு முத்துகுளித்தல், உப்பளம், விவசாயம், மீன் பிடித்தல் உள்ளிட்ட தொழில்களை மக்கள் செய்து வருகிறார்கள்.

தூத்துக்குடியில் நாடார் சமூகத்தினர் அதிகம் இருக்கிறார்கள். இதற்கு எடுத்துக்காட்டு கடந்த 2019 ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கனிமொழி தூத்துக்குடியில் போட்டியிட்ட போது அவரை எதிர்த்து பாஜக சார்பில் களமிறக்கப்பட்டவர் நாடார் சமூகத்தை சேர்ந்த தமிழிசை சவுந்திரராஜன். இதனாலேயே இது நட்சத்திர தொகுதி அந்தஸ்தை பெற்றது.

தூத்துக்குடி எம்எல்ஏவாகவுள்ள கீதா ஜீவன் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்தான். கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் ராதிகா போட்டியிட்டார். இதற்கு காரணம் விருதுநகரில் நாடார்கள் அதிகம். சரத்குமார் நாடார் என்பதால் அவர் சமூகத்து வாக்குகள் ராதிகாவுக்கு கிடைக்கும் என்பதால் அவர் அந்த தொகுதியில் நிறுத்தப்பட்டார். ஆனால் ராதிகா தோல்வி அடைந்தார்.

அந்த வகையில் தவெகவின் மாவட்டச் செயலாளராக தேர்வு செய்யப்பட போகிறவர் சாமுவேல் என்கிறார்கள். இவர் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவராம். இவரது உடன் பிறந்த சகோதரர் விஜயசீலன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் உள்ளார். இவர் கடந்த தேர்தலில் கீதா ஜீவனை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். சாமுவேலுக்கும் விஜயசீலனுக்கும் கீதா ஜீவன் உறவினர் என சொல்லப்படுகிறது.

எனவே அஜிதாவுக்கு பதவி கிடைக்காததற்கு காரணம் ஜாதி மட்டுமே என சொல்ல முடியாது. அவரது அணுகுமுறையில் விஜய் அதிருப்தியடைந்திருக்கலாம். இல்லாவிட்டால் சிறப்பாக செயல்படும் அஜிதாவை மாவட்ட அளவில் சுருக்கிவிடாமல் அவருக்கு மாநில அளவிலான பதவியை கூட விஜய் தருவதற்கு முடிவு செய்திருக்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+