சட்டென குவிந்த டெல்லி தலைகள்! இளையராஜா பற்றி பேசாதீங்க.. உதயநிதிக்கு போன அந்த மெசேஜ்.. நடந்தது என்ன?
சென்னை: இளையராஜாவிற்கு எதிராக திமுகவினர் கடுமையான விமர்சனங்களை வைக்க கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் சொன்னதாக திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுகவின் இந்த நிலைப்பாட்டிற்கு பின் பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
Recommended Video
கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடியை பாராட்டி இசையமைப்பாளர் இளையராஜா பேசி இருந்தார். பிரதமர் மோடியை அண்ணல் அம்பேத்கருடன் இசையமைப்பாளர் இளையராஜா ஒப்பிட்டு பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பாஜகவினர் இதை பெரிதும் வரவேற்று பேசி இருந்தனர். அதே சமயம் திமுக தரப்பில் பலர் இதை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

என்ன சொன்னார்?
சமீபத்தில் ப்ளூ கிராப் டிஜிட்டல் பவுண்டேசன் நிறுவனம் மூலம் 'மோடியும் அம்பேத்கரும்' என்ற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். அதில், மோடியின் ஆட்சியின் செயல்பாடுகளை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார் என்றார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள். பெண் குழந்தைகளை பாதுகாப்போம் - பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' திட்டம், முத்தலாக் சட்டம் மூலம் பெண்களை முன்னேற்றி இருக்கிறார் மோடி என்று குறிப்பிட்டார். இளையராஜாவின் இந்த பேச்சை திமுகவினர் பலரும் விமர்சனம் செய்து இருந்தனர்.

இளையராஜா
இந்த நிலையில்தான் இளையராஜாவிற்கு ஆதரவாக பாஜகவினர் பலரும் கருத்து தெரிவிக்க தொடங்கினர். பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா கூட இளையராஜாவிற்கு ஆதரவாக பேசினார். இளையராஜாவை கடுமையாக விமர்சிப்பது தவறு. வெறுப்பு கருத்துக்களை நிறுத்துங்கள் என்று நட்டா குறிப்பிட்டு இருந்தார். அதோடு மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவும் இதே கருத்தை கடுமையாக வெளிப்படுத்தி இருந்தார். தேசிய பாஜக தலைகள் இதில் கவனம் செலுத்தியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

ரஜினிகாந்த்
ஏனென்றால் 2021 சட்டசபை தேர்தலுக்கு முன் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக இருந்தது. அப்போது அவர் பாஜகவிற்கு நெருக்கமாக இருந்தார். அப்போது ரஜினிகாந்தை திமுகவின் கடுமையாக விமர்சனம் செய்த போது கூட தேசிய பாஜக தலைகள் யாரும் ரஜினிக்கு சப்போர்ட்டாக வரவில்லை. பொதுவாக தமிழ்நாட்டில் நடக்கும் இது போன்ற எதிர்ப்புகளுக்கு எல்லாம் தேசிய பாஜக ரியாக்சன் கொடுத்தது இல்லை. ஆனால் இளையராஜா மேட்டரில் பாஜக இப்படி திடீரென திரண்டு வருவது திமுக தரப்பில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

எம்பி பதவி
அதிலும் இளையராஜாவிற்கு எம்பி பதவி கிடைக்க போகிறது என்று ஒரு பக்கம் பேச்சு ஓடிக்கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கம் அதற்கும் மேலே சென்று இளையராஜாவிற்கு அடுத்த குடியரசுத் தலைவர் பதவி கிடைக்கலாம் என்றும் பேச்சுக்கள் எழ தொடங்கி உள்ளன. ஆனால் இந்த தகவல் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. இருந்தாலும் பாஜக தேசிய தலைவர் வரை இளையராஜாவிற்கு ஆதரவாக இறங்கி உள்ளதால் இதற்கு பின் பெரிய விஷயம் ஏதாவது இருக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.

செய்ய கூடாது
இந்த நிலையில்தான், இளையராஜா குறித்து எந்த கருத்தையும் கூறக் கூடாது என திமுகவினரை முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் என்று நேற்று திமுக எம்எல்ஏவும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். அவரை பற்றி நாகரீகம் அற்ற முறையில் பேச கூடாது. அப்படி விமர்சனம் செய்வது தவறு. இளையராஜா பிரதமர் மோடி பற்றி தன்னுடைய தனிப்பட்ட கருத்தைதான் தெரிவித்துள்ளார் என்று, உதயநிதி தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் திடீரென இப்படி பேச பல்வேறு காரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. திரைத்துறையில் சில முக்கிய பிரமுகர்கள் இளையராஜா மீது வைக்கப்படும் விமர்சனங்கள் பற்றி திமுக தரப்பிடம் பேசியதாக கூறப்படுகிறது. இளையராஜா தன்னுடைய கருத்தை கூறிவிட்டார். அதற்காக அவரை திமுகவினர் சில இணையத்தில் மோசமாக விமர்சிக்கிறார்கள். இதை கட்டுப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று சில முக்கிய திரைத்துறையினர் ஆளும் தரப்பிடம் பேசியதாக கூறப்படுகிறது.

பாஜக இழுக்கிறது
அதேபோல் முன்னதாக ரஜினிகாந்தை இதேபோல் பாஜக தங்கள் பக்கம் இழுக்க பார்த்தது. திமுக ரஜினியை எதிர்த்தாலும், தனிப்பட்ட வகையில் திமுக - ரஜினி இடையிலான நட்பு இருந்து வந்தது. அதேபோல் இளையராஜா மோடிக்கு ஆதரவாகவே இருந்தாலும் அவரை தனிப்பட்ட நாம் விமர்சனம் செய்ய கூடாது. விமர்சனம் செய்தாலும் diginity இருக்க வேண்டும். அவருடன் நாம் நட்பாக இருப்பதே நல்லது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்ததாக கூறப்படுகிறது..

உதயநிதி ஸ்டாலின்
இதையடுத்தே முதல்வர் ஸ்டாலின் நேரடியாக உதயநிதி ஸ்டாலினை அழைத்து இந்த விஷயம் பற்றி பேசியதாக கூறப்படுகிறது. முன்னதாக இளையராஜா தனது விளக்கத்தில், பிரதமர் மோடி குறித்து எழுதிய கருத்தை திரும்ப பெற மாட்டேன். இதை நான் அரசியலாக்க விரும்பவில்லை. நான் எந்த கட்சியும் சேர்ந்தவன் இல்லை. மோடிக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்லவும் மாட்டேன்.. ஓட்டு போடாதீங்க என்றும் பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்றும் இளையராஜா குறிப்பிட்டதாக கங்கை அமரன் பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications