காரணமே குணால் தான்? டெல்லி அனுப்பிய ஸ்டிரிக்ட் ஆர்டர்.. அதே நாளில் விளாசிய நிர்மலா! பின்னணி
சென்னை: தென் மாவட்டங்களை பார்வையிட அனுப்பி வைத்த மத்திய குழுவினரிடம், தமிழக அதிகாரிகளின் உதவியை பெறக்கூடாது ; தமிழக அதிகாரிகளிடம் எந்த ஆலோசனையும் செய்யக் கூடாது என்கிற ஸ்ட்ரிக்ட் ஆர்டரும் கொடுத்தே அனுப்பி வைத்ததாம் மத்திய அரசு.
சமீபத்தில் தென்மாவட்ட வெள்ளப்பாதிப்புகளை பார்வையிட டெல்லியிலிருந்து சென்னை வந்து, அங்கிருந்து மதுரை சென்று அங்கிருந்து மழை பாதிப்பு மாவட்டங்களுக்கு சென்று பார்வையிட்டதுடன் ஆய்வுகளை நடத்தி விட்டு டெல்லிக்கு திரும்பிவிட்டனர் மத்திய குழுவினர்.

பாராட்டிய அதிகாரிகள்: இவர்களுக்கு உதவ தமிழக அரசு அதிகாரிகள் முன்வந்த போதும் அவர்களை தவிர்த்துவிட்டனர். இதற்கு ஒரு பின்னணி இருக்கிறது. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை பார்வையிட வந்த மத்திய குழுவினர், தமிழக அதிகாரிகளின் துணையுடன் சென்றனர். வெள்ளப் பகுதிகளை பார்வையிட்டதுடன் திமுக அரசின் நடவடிக்கைகளைப் பாராட்டவும் செய்தனர்.
குணால் சத்யார்த்தி: குறிப்பாக, சென்னைக்கு வந்த மத்தியக்குழுவுக்கு தலைமை தாங்கியவர் குணால் சத்யார்த்தி. இவர்தான் திமுக அரசின் வெள்ளப்பாதிப்பு நடவடிக்கைகளை பாராட்டியவர். திமுக அரசை பாராட்டியதை ரசிக்காத மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள், குணால் சத்யார்த்த்தியை கடுமையாக கண்டித்துள்ளனர். மேலும், தென் மாவட்டங்களுக்கு விசிட் அடிக்கும் மத்திய குழுவினருக்கு தலைமை தாங்கும் பொறுப்பை குணாலுக்கு ஒதுக்கவில்லை.
குழுவில்இல்லை : அந்த குழுவிலும் இடம்பெற வைக்கவில்லை. சென்னைக்கு வந்த குழுவில் இடம்பிடித்த அதிகாரிகள் பலரும் தென் மாவட்ட குழுவில் சேர்க்கப்பட்ட நிலையில், குணாலை மட்டும் சேர்க்கவில்லை மத்திய அரசு. இதற்கு காரணம், திமுக அரசை அவர் பாராட்டி பேசியதுதான். இது தவிர, தென் மாவட்டங்களை பார்வையிட அனுப்பி வைத்த மத்திய குழுவினரிடம், தமிழக அதிகாரிகளின் உதவியை பெறக்கூடாது ; தமிழக அதிகாரிகளிடம் எந்த ஆலோசனையும் செய்யக் கூடாது என்கிற ஸ்ட்ரிக்ட் ஆர்டரும் கொடுத்தே அனுப்பி வைத்ததாம் மத்திய அரசு.
விமர்சனம்: மழை வெள்ளம் பாதிப்புகள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு வைத்துள்ளார். மழை வெள்ள பாதிப்புகளை ஆராய்ந்த மத்திய அரசு குழு தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்திருந்த நிலையில் மத்திய நிதி அமைச்சர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி அளித்த போது, தென்மாவட்ட வெள்ளப் பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது. ஒருநாள் முழுவதும் டெல்லியில் இருந்து I.N.D.I.A கூட்டணி கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், போகிறபோக்கில் சந்தித்துக்கொள்ளலாம் என்ற தோரணையில் பிரதமர் மோடியை இரவில் சந்தித்தார் என் மக்களை நான் பார்க்க வேண்டும் என்று கூட்டணியினரிடம் சொல்லிவிட்டு, 'என் மண் என் மக்கள்'தான் முக்கியம் என்று முதலமைச்சர் சென்றிருக்க வேண்டாமா?
ரூ4,000 கோடி செலவு செய்திருக்கிறோம். என்ன மழை வந்தாலும் சென்னைக்கு ஒன்றும் ஆகாது' என ஒரு தமிழ்நாடு அமைச்சர் பேசினார். ஆனால், சென்னையில் வெள்ளம் வந்த பிறகு, 42% தொகை மட்டுமே செலவு செய்தோம் என்கிறார். வானிலை ஆய்வு மையம் துல்லியமாக முன்னறிவிப்பு செய்யவில்லை என்று குற்றம்சாட்டுபவர்கள், ஏன் ரூ4,000 கோடி பற்றி தவறான தகவலை கொடுத்தார்கள்?
ரூ.6,000 நிவாரணத் தொகையை வங்கிக்கணக்கு மூலம் அளிக்கலாமே; ஏன் ரொக்கமாக வழங்குகிறீர்கள்? ரூ.6,000 ரொக்கமாக வழங்கியதற்கு பதில் வங்கியில் செலுத்தினால் வெளிப்படைத்தன்மை இருக்கும். ஏன் அந்த வெளிப்படைத்தன்மை இல்லை, என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications