சண்முக பாண்டியன் கூட ஓகே.. விஜயபிரபாகரன்தான்.. குழந்தை மாதிரி தேம்பி தேம்பி அழுது.. நொறுங்கும் இதயம்
சென்னை; தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் அருகே நின்று அவரின் மூத்த மகன் விஜயபிரபாகரன் விடாமல் தேம்பி தேம்பி அழுத காட்சிகள் மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டு அரசியல் உலகையும், சினிமா உலகையும் அதிர வைக்கும் விதமாக.. தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நிலை காரணமாக பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று காலை காலமானார். மொத்த தமிழ்நாடும் இவரின் மரணம் காரணமாக அதிர்ச்சியில் உறைந்து உள்ளது.

சிலரைத்தான் அரசியல் கடந்து, சினிமா கடந்து மக்கள் எல்லோரும் பொதுவாக விரும்புவது உண்டு. இவரின் மரணத்திற்கும் அப்படிதான் தற்போது தமிழ்நாடே கண்ணீர்விட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அப்போதே அவரின் உடல்நிலை மோசமானதாக செய்திகள் வந்தன. இந்த நிலையில்தான் நேற்று முதல்நாள் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்க விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பலியானார்.
கண்ணீர் விடும் மகன்: இந்த நிலையில்தான் விஜயகாந்தின் அருகே நின்று அவரின் மூத்த மகன் விஜயபிரபாகரன் விடாமல் தேம்பி தேம்பி அழுத காட்சிகள் மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காலையில் இருந்து இரவு வரை விஜயகாந்தின் அருகே நின்று அவரின் மூத்த மகன் விஜயபிரபாகரன் விடாமல் கண்ணீர்விட்டார்.
மற்றவர்கள் கூட கொஞ்சம் தேற்றப்பட்ட நிலையில்.. விஜயபிரபாகரனை மட்டும் யாராலும் தேற்ற முடியவில்லை. என்ன சொல்லியும் அவரால் விஜயகாந்த் மரணத்தை தாங்கவே முடியவில்லை. மூச்சு விட முடியாமல் தேம்பி தேம்பி.. உதடுகள் துடிக்க அவர் அழுதார். அதிலும் விஜயகாந்திற்கு நெருக்கமாக இருந்த சினிமா நட்சத்திரங்கள்.. அரசியல் தலைவர்கள் வந்த போதெல்லாம் விஜயபிரபாகரன் உடைந்து நொறுங்கி கண்ணீர்விட்டு அழுதார்.
சண்முக பாண்டியன் கூட ஒரு கட்டத்தில் அங்கே வந்தவர்களை கவனிப்பது, வேலைகளை செய்வது என்று கவனத்தை திசை திருப்பிக்கொண்டார். ஆனால் விஜயபிரபாகரன் அப்படி எதுவும் செய்ய முடியாமல் அப்படியே உடைந்து போய் நின்றார்.
நிச்சயம்: இந்த நிலையில் விஜயகாந்த் மரணத்தை தொடர்ந்து பலரும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் பற்றி தேட தொடங்கி உள்ளனர். அவரின் இறுதி அஞ்சலியில் குடும்ப உறுப்பினர்கள் யார் யார் உள்ளனர் என்று பலரும் தேடி வருகின்றனர். முக்கியமாக விஜயகாந்தின் மருமகள்கள் எங்கே என்று தேடி வருகின்றனர்.
நிச்சயதார்த்தம் ஆகி 4 வருடம் ஆகியும் விஜயகாந்த் - பிரேமலதா தம்பதிகளின் மகன் விஜய பிரபாகரனுக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை.
கடந்த 2019ஆம் ஆண்டு விஜய பிரபாகரனுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. கோவையை சேர்ந்த தொழிலதிபர் இளங்கோவின் மகள் கீர்த்தனாவை கரம் பிடிக்க உள்ளார் விஜயபிரபாகரன். ஆனால் இவரின் திருமணத்தை பார்க்காமலே விஜயகாந்த் மரணம் அடைந்துள்ளார்.

நேற்று மரணம்: தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நிலை காரணமாக பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று காலை காலமானார். கடந்த சில வாரங்களுக்கு முன்பே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அப்போதே அவரின் உடல்நிலை மோசமானதாக செய்திகள் வந்தன.
அவருக்கு இதயத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, ரத்த கொதிப்பு, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அவரின் உடலநிலை மோசமாகி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் அவரின் உடல்நிலை அதன்பின் சரியாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் கூட விஜயகாந்த் கலந்து கொண்டார். அதன்பின் மீண்டும் உடல்நிலை மோசமாக நேற்று முதல்நாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் மரணம் அடைந்தார்.












Click it and Unblock the Notifications