இங்க பேச இடமா இல்லை? மலேசியாவில் ஏன் ஆடியோ லான்ச்? மாற்றி யோசிக்கிறாரா விஜய்!
சென்னை: அரசியலுக்கு வந்திருக்கும் விஜய், கடைசியாக ஜனநாயகன் எனும் திரைப்படத்தில் நடித்து கொடுத்திருக்கிறார். இப்படம் ஜன.9ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், நாளை மலேசியாவில் இந்த திரைப்படத்தின் ஆடியோ லான்ச் நடக்க இருக்கிறது. விஜய்க்கு தமிழ்நாட்டில்தான் மவுசு அதிகம். அப்படி இருக்கையில் இங்கு பேச இடமில்லாமல்தான் மலேசியாவில் கொண்டு போய் ஆடியோ லான்ச் வைத்திருக்கிறாரா? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
திரைப்படத்தின் ஆடியோ லான்ச், தமிழகத்தில் வைத்தால், இதில் சேரும் கூட்டத்தை காட்டி மாஸ் செய்யலாம். இருந்தும் மலேசியாவில்தான் ஆடியோ லான்ச் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு மூன்று முக்கிய காரணங்கள் சொல்லப்படுகிறது.

காரணம் ஒன்று
கரூர் துயர சம்பவம் விஜய் அரசியல் வாழ்க்கையில் கரும்புள்ளியாக மாறியது. அதற்கு முன்னர் வரை விஜய் பேச்சில் இருந்த தோரணை, இந்த சம்பவத்திற்கு பின்னர் அப்படியே டோட்டலாக மாறிவிட்டது. தோரணை மாறிய விஜய்யின் பேச்சு, சில இடங்களில் ட்ரோல் மெட்டீரியலாகவும் ஆகியிருக்கிறது. இந்த சூழலில் தமிழகத்தில் இசை வெளியீட்டு விழா வைத்தால் வரும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது. இதனால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கான முழு பொறுப்பும் தன் தலையைில் கட்டிவிடுவார்களோ! என்று விஜய் அஞ்சுகிறார்.
விஜய் பேச்சு
எனவேதான் ஆடியோ லான்ச் மலேசியாவுக்கு மாற்றப்பட்டிருக்கிறது என்று விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள். 30 நிமிடங்கள் வரை பேசும் அரசியல் கூட்டத்திற்கு வரும் மக்களையே கட்டுப்படுத்த முடியவில்லை. ஆடியோ லான்ச் என்று சொன்னால் குறைந்தது ஒரு மணி நேரமாவது மூச்சு முட்ட பேச வேண்டும், குட்டிக்கதைகள் சொல்ல வேண்டும், சினிமா பாணியில் பஞ்ச்கள் பல இருக்கும். இதை கேட்க குவியும் கூட்டத்தை நிச்சயம் கட்டுப்படுத்த முடியாது என்பதை விஜய் டீம் உணர்ந்திருக்கிறது என்றும் கூறுகின்றனர்.
காரணம் இரண்டு
கரூர் சம்பவத்தில், ஆளும் கட்சியின் புள்ளிகள் உள்ளே புகுந்து நாச வேலையை செய்தார்கள் என்று, வாய்க்கு வந்ததை பொது வெளியில் அடித்துவிட்ட விஜய் தரப்பு, நீதிமன்றத்தில் இதைப்பற்றி வாயை திறக்கவே இல்லை. இப்படி அங்கொன்றும், இங்கொன்றுமாய் மாறி மாறி பேசியது, அக்கட்சிக்கு பேக் ஃபயராக மாறிவிட்டது. எனவே மீண்டும் தமிழகத்தில் இப்படி ஒரு கூட்டம் சேர்ந்து, அசம்பாவிதம் ஏற்பட்டால் அதை கருத்தியல் ரீதியில் எப்படி சமாளிப்பது? என்று யோசித்து கூட விழாவை மலேசியாவுக்கு பார்சல் செய்திருக்கலாம் என்கிறார்கள்.
காசு, பணம், துட்டு
தமிழகத்தில் இசை வெளியீட்டு விழாவை வைத்தால், தயாரிப்பாளருக்கு ரூ.10 கோடி வரை செலவாகும். ஆனால், மலேசியாவில் ஜனநாயகன் திரைப்பட வெளியீட்டு உரிமையை வாங்கியவர்களே, ஆடியோ லான்ச் செலவுகளை ஏற்பதாக கூறியிருக்கிறார்கள். எனவே, செலவை மிச்சப்படுத்த மலேசியாவை தேர்ந்தெடுத்திருக்கலாம் என யூடியூபர் செய்யாறு பாலு கூறியுள்ளார். அதேபோல இந்த நிகழ்வில் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் விஜய்யை மேடையில் வைத்து கவுரவப்படுத்த இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications