அந்த நம்பரை தாண்டினால்.. அப்பறம் விஜய்தான் கிங் மேக்கர்.. ரெடியாகும் ரிப்போர்ட்.. என்ன நடக்குமோ?
சென்னை: தமிழ்நாட்டில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்கு சதவிகிதம் எவ்வளவு என்று தெரியவில்லை. இந்த வாக்கு சதவிகிதத்தை பொறுத்தே அவரின் அரசியல் எதிர்காலம் தொடங்கி மற்ற பல அரசியல் எதிர்கட்சிகளின் எதிர்காலமும் அமையும்.
இப்படிப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் திமுக எதிர்பார்க்காத பிரச்சனையாக, அழுத்தமாக பல விஷயங்கள் தமிழ்நாடு அரசியலில் உருவெடுத்துள்ளது. கள்ளக்குறிச்சி விவகாரம் தொடங்கி விஜய்யின் அரசியல் வருகை வரை பல விஷயங்கள் நடந்துவிட்டன . இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் உளவுத்துறை ரிப்போர்ட் ஒன்றை கேட்கும் திட்டத்தில் இருக்கிறாராம்.

அதன்படி கள்ளக்குறிச்சி விவகாரம் மக்கள் இடையே எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது, கள்ளச்சாராய விவகாரத்தில் இன்னும் சிக்காதவர்கள் யார் யார்? அரசுக்கு எதிரான மனநிலை உள்ளதா? எடப்பாடி பழனிசாமியை மக்கள் எப்படி பார்க்கின்றனர்? விஜய்யின் அரசியலுக்கு ஆதரவு களத்தில் எப்படி உள்ளது என்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சில ரிப்போர்ட்டுகளை கேட்டு உள்ளாராம்.
கள்ளச்சாராய மரணத்தின் எண்ணிக்கைக் கூடுவது திமுக அரசுக்குத் தீரா விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது முதன் முறையாக கடும் கோபத்தில் இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இதன் காரணமாகவே அவர் உளவுத்துறை ரிப்போர்ட்டுகளை கேட்டு உள்ளாராம்.
ஸ்டாலின் ரிப்போர்ட்: ஸ்டாலின் கேட்ட ரிப்போர்ட்டில் விஜய்யின் வாக்கு சதவிகிதம் பற்றியும் தகவல்கள் இருக்கலாம் என்கிறார்கள்.
திமுக அஸ்திவாரம் - போட்டி: 2026 சட்டசபை தேர்தலில் திமுகவிற்கு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் நேரடியாக போட்டியிடும் பட்சத்தில் திமுகவின் முக்கியமான அஸ்திவாரத்தில் அந்த கட்சி கை வைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
1. 2026ல் விஜய் திமுக கூட்டணியை உடைக்க அல்லது குலைக்க வாய்ப்பு உள்ளது. விசிக சிபிஎம், சிபிஐ ஆகியவற்றை விஜய் தங்கள் பக்கம் இழுக்க முயற்சிக்கலாம்.
2. விசிக சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகள் விஜய்யை காரணம் காட்டி திமுக கூட்டணியில் கூடுதல் இடங்களை கேட்கலாம்.
3. 2026 சட்டசபை தேர்தலில் விஜய் தனியாக மக்கள் நலக்கூட்டணி போல புதிய 2.0 அமைக்கலாம். 2016ல் மக்கள் நலக்கூட்டணி திமுகவின் வாக்குகளை பிரித்தது.
4. விஜய்யின் பின்புலம் காரணமாக திமுகவிற்கு செல்லும் சிறுபான்மை வாக்குகள் சிதறும்.
5. திமுகவின் அஸ்திவாரமாக இருக்கும் 10-12% சிறுபான்மை வாக்குகள் சிதறும் வாய்ப்புகள் உள்ளன.
இதில் இனி விஜய்யின் வாக்கு சதவிகிதம்தான் சந்தேகம். பொதுவாக தமிழ்நாட்டில் புதிதாக நடிகர்கள் கட்சி தொடங்கினால் வாக்கு சதவிகிதம் முதல் தேர்தலில் 5 வரை இருக்கும். முறையான கட்டமைப்பு இருந்த தேமுதிகவிற்கே 5 சதவிகிதம்தான் இருந்தது.
இப்படிப்பட்ட நிலையில் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு அதிகபட்சம் 7 கொடுத்தால் கூட.. அதிகம்தான். ஆனால் அவர் ஒருவேளை 10- 12 சதவிகிதம் வாக்குகளை வென்றார் என்றால் அது அரசியல் ரீதியாக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
முக்கியமாக விஜய் கிங் மேக்கர் ஆகும் நிலை ஏற்படும். அதாவது விஜய் ஆதரவு தரும் நபரே ஆட்சி அமைப்பார் என்ற நிலை ஏற்படுத்தப்படும். இதை பற்றியே திமுகவின் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறதாம்.












Click it and Unblock the Notifications