"வானத்தை போல மனம் படைத்த" விக்ரமன்.. வடபழனி மருத்துவமனை மீது புகார் கொடுக்காதது ஏன்? மனைவி விளக்கம்
சென்னை: இயக்குநர் விக்ரமனின் மனைவி படுத்த படுக்கையாக 5 ஆண்டுகளாக இருந்து வரும் நிலையில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனையின் பெயரை அவர் குறிப்பிடாதது ஏன் என்பது குறித்து அவருடைய மனைவி ஜெயப்பிரியா விளக்கியுள்ளார்.
வெள்ளி விழா திரைப்படங்களை கொடுத்தவர் இயக்குநர் விக்ரமன். இவர் ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட ஜெயப்பிரியாவை திருமணம் செய்து கொண்டார். இவர் குச்சிப்புடி நடன கலைஞர் ஆவார். இதுவரை 1000 மேடைகளில் தொடர்ந்து நடனம் ஆடியுள்ளார்.

இதனால் அவருக்கு 5 ஆண்டுகளுக்கு முன்னர் உடல் வலி ஏற்பட்டதாம். உடனே பதறி போன விக்ரமன் அப்போது இயக்குநர் சங்கத் தலைவராக இருந்ததால் வடபழனியில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றாராம். அங்கு நடந்தது குறித்துதான் ஜெயப்பிரியா கண்ணீர் மல்க ஒரு சேனலுக்கு விளக்கியுள்ளார்.
அதில் அவர் கூறுகையில் மருத்துவமனைக்கு நடந்து சென்ற நான் அவர்கள் அளித்த தவறான சிகிச்சையால் முதுகெலும்புக்கு செல்லும் நரம்புகள் பாதிக்கப்பட்டு தற்போது நீண்ட நேரம் உட்கார முடியாமலும் நடக்க முடியாமலும் படுத்த படுக்கையாக இருந்து வருகிறேன். என்னை எனது கணவர் அந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது எனக்கு முதுகு பகுதியில் புற்றுநோயாக இருக்கலாம் என கருதி மருத்துவர்கள் பயாப்சி செய்ய வேண்டும் என்றனர்.
இதையடுத்து அரை மணி நேரம் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றும் கூறினர். ஆனால் இரண்டு மணி நேரம் கழித்து அழைத்து வந்த போது எனது கால் விரல்களை கூட அசைக்க முடியவில்லை. இது குறித்து கேட்ட போது இப்போதுதானே ஆபரேஷன் நடந்தது போக போக சரியாகும் என்றனர். ஆனால் 5 ஆண்டுகளாக நடக்க முடியாமல் அவதிப்படுகிறேன்.
என்னை கவனித்துக் கொள்ள இரு நர்ஸுகளை கணவர் நியமித்துள்ளார். ஆனாலும் என்னை அவர் கூடவே இருந்து பார்த்து வருகிறார். நான் எழுந்து நடந்தால் மட்டுமே ஸ்கிரிப்ட் பேடை தொடுவேன் என கூறியுள்ளார். அது போல் பொறியியல் படித்துவிட்டு தற்போது நாயகனாக அறிமுகமாகியுள்ள மகனும் தன்னை கவனித்துக் கொள்கிறார்.
எனது மருத்துவ செலவுக்காக 70 சதவீத சொத்துகளை கணவர் விற்றுவிட்டார். மாதம்தோறும் மருத்துவச் செலவிற்கு ரூ 5 லட்சம் ஆகிறது. இதனால் குற்றாலத்தில் உள்ள தோட்டத்தை விற்பனை செய்ய எனது கணவர் பேசி வருகிறார் என்றார் ஜெயப்பிரியா. அப்போது நெறியாளர் தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனை மீது புகார் அளிக்காதது ஏன் என கேட்டார்.
அதற்கு ஜெயப்பிரியா, அந்த மருத்துவமனையின் தலைவர் திரையுலகை சேர்ந்த உதவி இயக்குநர்களின் குடும்பத்திற்கு பல உதவிகளை செய்துள்ளார். அவர் வீட்டு குழந்தைகளை இலவசமாகவே பொறியியல் படிக்க வைத்து உள்ளார். அந்த மருத்துவமனையின் பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக அந்த மருத்துவமனையின் தவறை வெளியே சொல்ல விக்ரமன் தயக்கம் காட்டுகிறார்.
அது போல் பல உதவி இயக்குநர்களின் குடும்பத்தினருக்கு இலவச மருத்துவம் அளித்துள்ளது. ஆனால் இப்போது கல்வி உதவிகளையும் மருத்துவ சேவைகளையும் அந்த மருத்துவமனை தற்போது நிறுத்திவிட்டது. எனவே அந்த தனியார் மருத்துவமனையின் தவறால் படுத்த படுக்கையாக முடங்கி கிடக்கும் எனக்கு அவர்களாகவே நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications