மகாவிஷ்ணுவை கைது செய்தது ஏன்? சங்கர் பேசியது சரியா? கரு.பழனியப்பன் புதிய விளக்கம்?
சென்னை: அரசுப் பள்ளிகள் கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் காவிமயமாக மாறிவிட்டன என்றும் அதனால்தான் மகாவிஷ்ணு போன்ற நபர்கள் பள்ளிக்கு அழைக்கப்பட்டு பேச வைக்கப்படுகிறார்கள் என்றும் இயக்குநர் கரு.பழனியப்பன் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.
சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் பேசிய கருத்துகள் மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பியதைத் தொடர்ந்து, 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆஸ்திரேலியாவிலிருந்து சென்னை திரும்பிய அவரை 2 நாட்கள் முன்னதாக கைது செய்தனர். இவரது கைது நடவடிக்கையை எதிர்த்து பரம்பொருள் அறக்கட்டளையை சார்ந்தவர்கள் மகாவிஷ்ணுவுக்கு ஆதரவாகப் பேட்டி அளித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பரம்பொருள் ஃபவுண்டேஷன் யூடியூப் தளத்தில் மாற்றுத்திறனாளிகள் பற்றி மகாவிஷ்ணு பேசிய சர்ச்சை கருத்துகள் அடங்கிய வீடியோ நீக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பிரச்சினையை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்று அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.

இந்தச் சர்ச்சை தொடர்பாக அசோக் நகர் அரசுப் பள்ளி தலைமையாசிரியர் பணி இடமாற்றம் செய்யபட்டுள்ளார். இவரது இடமாற்றம் தவறானது என்றும் அதைத் திரும்பப் பெறவேண்டும் என்றும் சீமான் உள்ளிட்ட சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் பாஜக கூறிவருகிறது.
இந்நிலையில் இந்தச் சர்ச்சை குறித்து இயக்குநர் கரு. பழனியப்பன் ஒரு விரிவான பேட்டியை அளித்துள்ளார். அதில் அவர் பேசும்போது, "மகாவிஷ்ணு என்பவர் ஏதோ ரோட்டில் போய் கொண்டிருந்தவர் அசோக் நகர் அரசுப் பள்ளிக்குள் வந்து பேசவில்லை. அது மிக முக்கியமான விசயம். அவரை முறைப்படி அழைத்திருக்கிறார்கள். அவருக்கு என்சிசி அணிவகுப்பு கொடுக்கப்பட்டு அவர் மரியாதையாக மேடைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அவர் அந்தப் பள்ளி தனக்குப் பிடித்துபோய் விட்டது என்றும் பேச்சின் இடையே குறிப்பிடுகிறார். நன்கொடையும் அளித்துள்ளார். இனி நிறைய நன்கொடை அளிப்பேன் என்கிறார்.
மகாவிஷ்ணுவை யார் பள்ளிக்குப்பேச அழைத்தார்கள் என்பதற்கு இதுவரை விளக்கம் தரப்படவில்லை. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர்தான் பொறுப்பு. பள்ளியில் காரசார விவாதத்தில் ஈடுபட்ட ஆசிரியர் சங்கருக்கு ஆதரவாக தலைமையாசிரியர் நின்றிருக்க வேண்டும். அதற்கு மாறாக அவர் மகாவிஷ்ணு பக்கம் நிற்கிறார். எனவே அவரை பணி இடமாற்றம் செய்தது சரிதான். அதேபோல் அவருக்கு மேல் உள்ள யாரோதான் மகாவிஷ்ணுவை அழைத்திருப்பார்கள். அவர் யார் என்பது வெளி உலகிற்கு தெரியவேண்டும்.
யாரோ ஒரு உயரதிகாரியை காப்பாற்றுவதற்கான முயற்சி நடக்கிறது. யாரோ ஒரு முன்னாள் மாணவி சொன்னதால் அழைத்தோம் என இப்போது விளக்கம் அளித்துள்ளார்கள். இந்த மாதிரி விசயம் இந்த ஒரு பள்ளியில் மட்டும் நடக்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் நடக்கிறது. அதை தடுக்க வேண்டும். அரசு மட்டுமே அதை தடுக்க முடியாது. சங்கர் போல உள்ள ஆசிரியர்கள்தான் எதிர்த்து கேள்வி கேட்கவேண்டும்.
இதை கண்காணிக்க தனியாக குழுப்போட்டு ஒரு மாற்றத்தைக்கூட கொண்டுவர முடியாது. பள்ளியில் ஒரு தவறு நடந்தால், அதை தட்டிக்கேட்க சங்கர் போன்ற ஆசிரியர்கள் வேண்டும். சமீபத்தில் பியூஷ் மனுஷ் ஒரு வீடியோ போட்டிருந்தார். அதில் பள்ளியில் ஒருவர் ஜாதக வகுப்பு நடத்திக் கொண்டிருக்கிறார். அதைப் பற்றி எந்த ஆசிரியராவது கேள்வி கேட்டார்களா? புகார் சொன்னார்களா? இல்லையே? இப்போது மகாவிஷ்ணு விவகாரம் வெளியே வந்த பிறகு அந்த வீடியோ வருகிறது.
பள்ளிகளில் நீதி வகுப்புகள், ஒழுக்கநெறி வகுப்புகள் நடத்தப்பட்ட வேண்டும். ஆன்மிக வகுப்புகள்கூட நடக்கவேண்டும். அதற்கு மகாவிஷ்ணுவைக் கூப்பிடக் கூடாது. குன்றக்குடி அடிகளாரைக் கூப்பிட்டு ஆன்மிக வகுப்பு எடுக்க சொல்லுங்கள். பொன்னம்பல அடிகளாரைகூட எடுக்க சொல்லுங்கள். ஏன் இவர்களை அழைப்பது இல்லை? மகாவிஷ்ணு 1 லட்சம் கொடுத்தார் என அழைத்தார்களா? நான் மகாவிஷ்ணு அப்படிப் பேசக்கூடாது என சொல்லவில்லை. ஜனநாயக நாடு அவர் பேசட்டும். ஆனால், அவரைப் பள்ளிக்குள் அழைத்து பேச வைத்ததுதான் தவறு. அவர் 8 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு வகுப்பு எடுக்கிறார். அங்கேயும் இதேதான் பேசுகிறார். நாம் கேள்வி கேட்டோமா? அவரை ஏற்றுக் கொண்டு போகின்ற மக்கள் மத்தியில் அவர் என்னவேண்டுமானாலும் பேசலாம். ஒரு பள்ளிக்குள் ஜனநாயக கருத்தைத்தான் அவர் பேச வேண்டும். அதனால்தான் கண்டிக்கிறோம்.
கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் பள்ளிகள் காவிமயமாகிவிட்டன. தமிழ்நாட்டில் இப்போதுதான் அந்த முயற்சி நடக்கிறது. வடநாட்டில் எப்போதோ நடந்துவிட்டது. உபி பள்ளிப் பாடத் திட்டத்தில் மசூதி ஒலிபெருக்கி படத்தைப் போட்டு அதற்கு ஒலிமாசு என எழுதி இருக்கிறார்கள். ஒலிபெருக்கி மசூதியில் மட்டும்தான் உள்ளதா? அதன் தொடர்ச்சிதான் இங்கே நடக்கிறது. ஆசிரியர்கள் காவிமயமாகிவிட்டனர். அதை மாற்ற வேண்டும்.
உடனே மகாவிஷ்ணு அப்படி என்ன பேசிவிட்டார்? இதற்குப் போய் கைது நடவடிக்கையா? என்கிறார்கள். அவரைக் கைது செய்தது சரிதான். அவர் அப்படிப் பேசக்கூடாதுதான். அவர் அவருடைய ஆசரமத்தில் உட்கார்ந்து பேசி இருந்தால் ஒரு தப்பு இல்லை. அவர் மாணவர்கள் மத்தியில் அரசுப் பள்ளிக்குள் உட்கார்ந்து பேசுகிறார். அதனால்தான் கைது. வளரும் குழந்தைகள் மனதில் மாற்றுத்திறனாளிகள் பிறப்பை பற்றி தவறான நம்பிக்கையை விதைக்கிறார். அதை உடனடியாக அழிக்க முடியுமா? மாணவர்களுக்கு எது சரி? தவறு என்பது தெரியுமா? அவர் இனிமேல் இப்படிப் பேசக் கூடாது என்பதை எச்சரிக்கத்தான் இந்தக் கைது" என்கிறார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications