உதயநிதி கையில் என்ன அது? அடடே பக்கத்தில் தயாநிதியும் வச்சு இருக்காரே.. எடப்பாடி பிளான்.. இதை பாருங்க
சென்னை: நேற்று திமுக சார்பாக நடத்தப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் நீட் எதிர்ப்பு மீண்டும் தீவிரம் அடைந்து உள்ளது. சமீபத்தில் நீட் தேர்வில் அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காத சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் (19) என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்த எதிர்ப்பை தீவிரம் ஆக்கி உள்ளது.

இதை எதிர்த்து நேற்று திமுக சார்பாக மாபெரும் கண்டன உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.
இந்த உண்ணாவிரதத்தில் தண்ணீர் கூட குடிக்காமல் நாள் முழுக்க கொடும் பட்டினி இருந்து இவர்கள் விரதம் இருந்து உள்ளனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கவனத்தை திசை திருப்புவதற்காக இவர்கள் நாளிதழ்களை படித்துக்கொண்டு இருந்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
அதன்படி உதயநிதி, தயாநிதி உள்ளிட்ட தலைவர்கள் படித்த நாளிதழில் முன் பக்கம் எடப்பாடி புகைப்படம் இருந்தது. மதுரையில் நடந்த அதிமுக கூட்டத்திற்காக எடப்பாடி புகைப்படம் விளம்பரம் கொடுக்கப்பட்டு இருந்தது. நேற்று பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் அதிமுகவின் மதுரை பொதுக்கூட்டம் நடந்து முடிந்துள்ளது. கிட்டத்தட்ட அதிமுகவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் பொதுக்கூட்டமாக இது அமைந்துள்ளது. 3 லட்சம் பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒன்று முதல் ஒன்றரை லட்சம் பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பின் அதிமுகவில் நடக்கும் மிகப்பெரிய மாநாடு இது. எடப்பாடி பழனிசாமிக்கு கீழ் நடக்கும் முதல் மிகப்பெரிய மாநில மாநாடு இது. இந்த மாநாட்டில் கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இதற்கான விளம்பரம்தான் நேற்று நாளிதழ்களில் கொடுக்கப்பட்டு இருந்தது.
திமுகவின் தலைவர்கள் எடப்பாடி புகைப்படம் உள்ள பத்திரிகையை வைத்து இருந்தது இணையத்தில் பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
உதயநிதி ஸ்டாலின் பேச்சு: நேற்று கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கல்வி என்பது உரிமை, அந்த உரிமையை பாதுகாப்போம். மாணவ மாணவியரின் கல்வி உரிமையை நாங்கள் பாதுகாப்போம். தமிழ்நாடு முழுக்க உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர்களுக்கு நன்றி.
தண்ணீர் கூட குடிக்காமல் கொலபட்டினி உண்ணாவிரதம் இருந்துள்ளனர் திமுகவினர். இந்த வலி பெரிய வலி இல்லை, 21 உயிர்கள் போய்விட்டது, அதை விட பெரிய வலி இல்லை. அனிதா தொடங்கி 21 பேர் பலியாகி விட்டனர். தமிழ்நாட்டிற்கு பாஜக என்ற கட்சியே தேவைற்றது நீட் மரணம் எல்லாம் தற்கொலை இல்லை. 21 பேரும் தற்கொலை செய்யவில்லை .
நீட் மரணம் எல்லாமே கொலை: இதை செய்தது ஒன்றிய பாஜக அரசு. அதற்கு உறுதுணையாக இருந்தது அடிமை அதிமுக எடப்பாடி அரசு. நீட் தேர்வுக்கு எதிராக முடிந்த வரை எங்கள் போராட்டம் தொடரும். காலை முதல் நாம் போராடி வருகிறோம். நீட் தேர்வை அகற்றாமல் நாம் விட மாட்டோம்.
போராடினால் அமைச்சர் பதவி பறிக்கப்படும், தகுதி நீக்கம் செய்வார்கள் என்று அதிமுகவினர் சொன்னார்கள்.எங்களுக்கு எதிராக அதிமுகவினர் புகார் கூட கொடுத்தனர். அமைச்சர் பதவி போனால் கூட பரவாயில்லை , நீட்டை எதிர்த்து நான் போராடுவேன். ஆளுநர் யார்? நீட் மசோதாவை அனுமதிக்க மாட்டேன் என்று சொல்ல நீங்கள் யார்?
ஆளுநர் அவர்களே Who are you? நீங்கள் வெறும் போஸ்ட்மேன் ஆளுநரே. ஆளுநர் ரவிக்கு ஒரு சவால் விடுகிறேன்.. அரசியல் பேச வேண்டும் என்றால் அரசியலில் நில்லுங்கள். தமிழ்நாட்டில் தேர்தலில் நில்லுங்கள், நான் சவால் விடுகிறேன். உங்களுக்கு எதிராக நாங்கள் கடைக்கோடி தொண்டரை நிறுத்தி வெற்றிபெற வைப்போம்.
உங்களை மக்கள் செருப்பை கழற்றி அடிப்பார்கள். அந்த தேர்தலில் வென்றால் உங்களுடன் சேர்ந்து நானும் நீட் தேர்வை ஆதரிக்கிறேன். தயாரா? ஆளுநரை கேள்வி கேட்ட அம்மாசியப்பனுக்கு மிரட்டல் விடுக்கிறார்கள். ஆளுநரை கேள்வி கேட்டால் மிரட்டுவார்களா?. அம்மாசியப்பனுக்கு நாங்கள் பாதுகாப்பு கொடுப்போம்.. என்ன பண்ணுவீங்க?












Click it and Unblock the Notifications