தமிழ்நாடு நாள்: தாய்நிலத்துக்கு தமிழ்நாடு என தலைமகன் அண்ணா பெயர் சூட்டிய நாள் ஜூலை 18
சென்னை: சென்னை மாகாணம், மதராஸ் மாகாணம், மெட்ராஸ் மாகாணம் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்ட நமது தாய்நிலத்துக்கு தமிழ்நாடு என தமிழினத்தின் தலைமகனாக கொண்டாடப்படும் மறைந்த முதல்வர் பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு என பெயர் சூட்டிய நாள் ஜூலை 18.
Recommended Video
மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1-ந் தேதியை பல்வேறு மாநிலங்கள் தங்களது மாநில நாளாக கொண்டாடி வருகின்றன. ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நவம்பர் 1 என்பது போராட்ட நாள்.. ஆம் பிற மாநிலங்கள் உருவாக்கப்பட்ட போது தாய்நிலமான தமிழ்நாடு பல பகுதிகளைப் பறிகொடுத்தது. அதனை மீட்டெடுக்க தமிழாய்ந்த தமிழர்கள் போராடினார்கள். ஆகையால் நவம்பர் 1-ந் தேதி நமக்குப் போராட்ட நாள்.. தமிழ்நாடு என நமது மாநிலத்துக்கு பேரறிஞர் அண்ணா பெயரிட்ட ஜூலை 18-ந் தேதி தான் தமிழ்நாடு நாள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரகடனம் செய்தார். தமிழ்நாடு நாள் இன்று பேரெழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் ஏன்?
- நாடு விடுதலைக்குப் பின்னர் 1956-ல் மக்கள் பேசும் மொழிகளின் அடிப்படையில் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன
- மொழிகள் அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது சென்னை மாகாணப் பகுதிகள் சில
- ஹைதராபாத், திருவிதாங்கூர், மைசூர் மாகாணங்களின் பல பகுதிகளுடன் இணைக்கப்பட்டு
- ஆந்திரா, கேரளா, கர்நாடகா என புதிய மாநிலங்கள் உருவாகின
- எஞ்சிய நிலப் பகுதிகளைக் கொண்ட நமது மாநிலம் சென்னை மாகாணம், மெட்ராஸ் மாகாணம், மதராஸ் மாகாணம் என அழைக்கப்பட்டது.
- 1967-ம் ஆண்டு ஜூலை 18-ம் நாள் நமது சென்னை மாகாணம் என்ற மாநிலத்துக்கு தமிழ்நாடு என பெயர் சூட்டினார் மறைந்த முதல்வர் பேரறிஞர் அண்ணா
- நமது மாநிலத்துக்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18 ஆண்டுதோறும் தமிழ்நாடு நாள் என கொண்டாடப்படும் என பிரகடனம் செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட வரலாறு
- 1956-ல் சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்ட கோரி சங்கரலிங்கனார் 73 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி உயிர் நீத்தார்
- 1960, 1961-ல் சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டக் கோரி போராட்டங்கள் நடைபெற்றன
- 1962-ல் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் பூபேஷ் குப்தா எம்.பி, சென்னை மாகாணத்துக்கு
- தமிழ்நாடு என மாற்றம் செய்ய மசோதா தாக்கல் செய்தார். இம்மசோதா தோற்கடிக்கப்பட்டது
- 1964-ல் சென்னை மாகாண சட்டசபையில் திமுகவின் ராம.அரங்கண்ணல் எம்.எல்.ஏ. தமிழ்நாடு பெயர் சூட்டும் தீர்மானம் கொண்டுவந்தார். இத்தீர்மானமும் நிராகரிக்கப்பட்டது
- 1967-ல் திமுக ஆட்சி அமைந்ததும் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களால் ஜூலை 18-ல் தமிழ்நாடு என சென்னை மாகாணத்தின் பெயர் மாற்றி அமைக்கப்பட்டது.
- ஆகையால் ஜூலை 18 தமிழ்நாடு நாள் என முதல்வர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications