அமித்ஷாவை சந்தித்தது ஏன்? என்ன கோரிக்கை வைக்கப்பட்டது.. அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபர
சென்னை: தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. அமித்ஷாவை சந்தித்து தமிழ்நாட்டில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து சொல்லியிருக்கிறோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக அங்கம் வகிக்கிறது. தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக அங்கம் வகிக்கிறது. மரியாதை நிமித்தமாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். அமித்ஷாவை சந்தித்து தமிழ்நாட்டில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து சொல்லியிருக்கிறோம். தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. எங்கும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதையெல்லாம் சொன்னோம்.
திமுகவின் 15 அமைச்சர்கள் இந்த இரண்டு வருடத்தில் தங்கள் துறைகள் மூலமாக எப்படியெல்லாம் ஊழல் செய்து இருக்கிறார்கள்.. எப்படி முறைகேடு செய்து இருக்கிறார்கள் என்று தொகுத்து கொடுத்து இருக்கிறோம். உரிய நடவடிக்கை எடுப்போம் என்று மத்திய அரசு உறுதி கொடுத்துள்ளது.

கர்நாடகாவில் அண்ணாமலை பங்கேற்ற கூட்டத்தில் தமிழ்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், இந்தியா என்பது எல்லா மொழிகளுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். ஒரு மொழிக்கு மட்டும் இல்லை. தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டியதுதானே... எனவே இது மிகவும் தவறானது.
அண்ணாமலைக்காக சொல்லவில்லை. எந்த ஒரு கூட்டமாக இருந்தாலும் சரி.. தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கிறது என்றால் அதை முழுக்க பாடிய பிறகு அதன்பிறகு அவர்கள் மொழிப்பாடலை பாடலாம். ஆனால் பாடும் போது பாதியில் நிறுத்துவது என்பதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அதிமுக நிர்வாகிகளை ஓபிஎஸ் தொடர்ந்து விமர்சித்து வருவது பற்றி கேட்கிறீர்கள்.. அரசியலில் நாகரீகம் வேண்டும். பண்பாடு வேண்டும். யாராவது எங்கள் மீது கல் வீசினால்தான் எதிர்வினை ஆற்றுகிறோம். யார் விமர்சனம் வைக்கிறார்களோ.. அவர்கள் மீதுதான் நாங்கள் விமர்சனங்கள் வைப்போம்.
விமர்சனத்திற்கு தகுந்த மாதிரிதான் வைப்போம் அதைத்தாண்டி போக மாட்டோம். முதல்வராக இருந்தவர். பல பொறுப்புகளை வகித்த ஓபிஎஸ் நாகரீகம் அறிந்து பேச வேண்டும். ஓபிஎஸ் நடத்தியது மநாடு கிடையாது. பொதுக்கூட்டம். இவ்வாறு அவர் கூறினார்.
அதிமுகவிற்கு வசீகரமும் சரியான தலைமையும் தற்போது இல்லை என்று பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர் சேகர் பேசியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், "அவுங்க (பாஜக) ஒரு வினையாற்றினால் ஒரு எதிர்வினையாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம். அதில் மாறுபட்ட கருத்து இல்லை. இதை அண்ணாமலை கண்டிக்க வேண்டும்.
அண்ணாமலை கண்டிக்கவில்லையென்றால் இது குறித்து நாங்கள் அடுத்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். கூட்டணி என்ற அடிப்படையில் நாங்கள் போய் பார்த்து இருக்கிறோம். அதன்பிறகு எப்படி இந்த விமர்சனங்களை முன்வைக்க முடியும். ஆகவே விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அண்ணாமலை" என்று கூறினார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications