லட்டு மாதிரி வாய்ப்பு.. இனி பெங்களூர் எல்லாம் நினைச்சு கூட பார்க்க முடியாது.. அடித்து தூக்கும் ஓசூர்
சென்னை: கர்நாடக அரசு எடுத்த முடிவு ஒன்று தமிழ்நாட்டிற்கு சாதகமாக மாறி உள்ளது. முக்கியமாக ஓசூருக்கு மிகப்பெரிய சாதகமாக மாறி உள்ளது.
கர்நாடகாவில் நிர்வாகப் பணிகளில்.. அதாவது மேனேஜர் பொறுப்புகளில் உள்ளூர் மக்களுக்கு 50% இடஒதுக்கீடு மற்றும் மேலாண்மை அல்லாத பதவிகளில் 75% இடஒதுக்கீடு கட்டாயப்படுத்தும் மசோதாவுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உள்ளூர் மக்களுக்கு நிறுவனங்களில் வேலை கிடைக்கவில்லை என்றால், தொழிற்சாலைகள் அல்லது நிறுவனங்கள் விதிகளில் தளர்வு கோரி அரசிடம் முறையிடலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜூலை 15 ஆம் தேதி முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், தொழில்கள், தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு வேலை தரும் கர்நாடக மாநில வேலைவாய்ப்பு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. நிறுவனங்கள் 50% நிர்வாக பதவிகளிலும் 75% நிர்வாகமற்ற பதவிகளிலும் உள்ளூர் மக்களை நியமிக்க வேண்டும் என்று இதில் கூறப்பட்டு உள்ளது.
அதன்படி கர்நாடக மாநிலத்தில் பிறந்தவர் மற்றும் 15 ஆண்டுகள் மாநிலத்தில் வசிக்கும் மற்றும் கன்னடத்தை தெளிவாகப் பேசவும், படிக்கவும் மற்றும் எழுதவும் திறன் கொண்டவர் மற்றும் நோடல் ஏஜென்சியால் நடத்தப்பட்ட தேவையான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படும். இவர்களுக்கு மட்டுமே நிறுவனங்கள் 50% நிர்வாக பதவிகளிலும் 75% நிர்வாகமற்ற பதவிகளிலும் வேலை கொடுக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
ஓசூர் வளர்ச்சி: கர்நாடக அரசு எடுத்த இந்த முடிவு தமிழ்நாட்டிற்கு சாதகமாக மாறி உள்ளது. முக்கியமாக ஓசூருக்கு மிகப்பெரிய சாதகமாக மாறி உள்ளது. இதன் மூலம் ஓசூருக்கு முதலீடுகள் அதிகம் ஆகலாம். ஓசூருக்கு முதலீடுகள் குவியலாம். ஓசூரை நோக்கி இனி பன்னாட்டு நிறுவனங்கள் அதிக அளவில் வரலாம்.
ஏற்கனவே ஓசூரில் முதலீடுகள் குவிந்து வருகின்றன. உதாரணமாக தமிழ்நாட்டில் மின்சார பேட்டரி வாகனங்கள் உற்பத்தி அதிகரித்து உள்ளது. இதற்காக ஓசூரில் கோடிக்கணக்கில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசுக்கும், ஓலா நிறுவனத்திற்கும் இடையே 7614 கோடி ரூபாய் மதிப்பிலான முக்கியமான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி தமிழ்நாடு நான்கு சக்கர மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்ய ஓலா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மேலும் 20 மெகாவாட் மின்கலன்கள் உற்பத்தி திறன் கொண்ட ஆலைகளை அமைக்கவும் ஓலா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த சிப்களை உற்பத்தி செய்யும் உலகிலேயே பெரிய ஆலையாக இது இருக்க போகிறது என்று ஓலா நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்த ஆலைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள சிப்காட் பூங்காவில் அமைக்கப்படும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டு உள்ளது. இதன் மூலம் 3,111 நபர்களுக்கு வேலை கிடைக்கும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது.
அடித்து தூக்கும் ஓசூர்: இந்த ஒப்பந்தத்தை பெற ஹைதராபாத், பெங்களூர் போன்ற நகரங்கள் முயன்றதாக கூறப்படுகிறது. ஏற்கனவே உலகிலேயே மிகப்பெரிய பைக் உற்பத்தி ஆலையை ஓலா நிறுவனம் கிருஷ்ணகிரியில் அமைத்தது. அங்கே ஓலா பைக் உற்பத்தியும் நடைபெற்று வருகிறது. உலகிலேயே மிகப்பெரிய இருசக்கர மின்சார வாகன உற்பத்தி மையம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 500 ஏக்கர் பரப்பளவில் இந்த இருசக்கர உற்பத்தி மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
ஓசூர் டாடா நிறுவனம்: டாடா குழுமம் ஓசூரில் உள்ள ஐபோன் கேசிங் யூனிட்டின் தற்போதைய ஆலையை விட இரண்டு மடங்கு அளவுக்கு விரிவுபடுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
5,000 கோடி ரூபாய் முதலீட்டில் கட்டப்பட்டு 500 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட ஓசூர் யூனிட்டில் 15,000 பேர் பணிபுரிகின்றனர், விரிவாக்கத்திற்குப் பிறகு 25,000-28,000 ஊழியர்கள் வரை பணியமர்த்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா எலெக்ட்ரானிக்ஸ், உயர்தர எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் ஆக்சஸெரீஸ் ஒப்பந்த தயாரிப்பில் அதன் திறனை கணிசமாக விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்த நிறுவனம் சமீபத்திதான் ல் விஸ்ட்ரானின் ஐபோன் அசெம்பிளி ஆலையை வாங்கியது. இந்த புதிய ஆலை =முற்றிலும் ஆப்பிள் போன் உதிரிபாகங்களுக்கானதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது,.
டாடா எலெக்ட்ரானிக்ஸ், உயர்தர எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் ஆக்சஸெரீஸ் ஒப்பந்த தயாரிப்பில் அதன் திறனை கணிசமாக விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்த நிறுவனம் சமீபத்தில்தான் விஸ்ட்ரானின் ஐபோன் அசெம்பிளி ஆலையை வாங்கியது. இந்த புதிய ஆலை முற்றிலும் ஆப்பிள் போன் உதிரிபாகங்களுக்கானதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது,.
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில்தான் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை அதன் விற்பனையாளராக தேர்வு செய்தது, சீனாவிலிருந்து வெளியேறி அதன் உற்பத்தியை வேறு நாடுகளில் செய்ய ஆப்பிள் முயன்று வருகிறது. அதன் ஒரு கட்டமாக ஓசூரில் டாடா உடன் ஆப்பிள் நேரடியாக ஒப்பந்தம் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications