மோடி காட்டிய கிரீன் சிக்னல்.. ஸ்டாலினுக்கு ரூட் கிளியர்.. சென்னை இனி அடியோடு மாறப்போகுது.. கவனம்
சென்னை: சென்னை மெட்ரோ பணிகள் தீவிரம் அடைந்து வருகின்றன. இந்த மெட்ரோவிற்கு நிதி ரீதியாக நிலவிய பிரச்சனைகள் தீர்ந்து உள்ளதால்.. தமிழ்நாடு அரசு மற்ற பாலங்கள், சாலைகளை அமைக்கும் பணிகளில் கவனம் செலுத்தலாம்.
சென்னையில் அமைக்கும் மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்க முடிவு செய்துள்ளது. அதேபோல் 7425 கோடி ரூபாயை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது போக 33500 கோடி ரூபாய் கடனை மத்திய அரசு உலக வங்கிகளிடம் இருந்தும் பெற்று கொடுக்கும். இந்த கடனை சென்னை மெட்ரோ நிர்வாகமே அடைக்கும்.. அதாவது தமிழ்நாடு அரசு அடைக்கும்.

ஆனால் மத்திய அரசு வாங்கித்தருவதால் தமிழ்நாடு அரசின் நேரடி கடன் சுமை குறையும். எளிதாக கடனும் கிடைக்கும். இதன் காரணமாக.. தற்போது சென்னையில் மெட்ரோ பணிகள் தீவிரம் அடைந்து வருகின்றன. திருமங்கலம் உள்ளிட்ட மூன்று இடங்களில் மெட்ரோ கட்டம்-2 திட்டத்தின் கீழ் பல்வேறு மெட்ரோ நிலையங்களை CMRL கட்ட திட்டமிட்டுள்ளது. மெட்ரோ ரயிலோடு சில மாபெரும் கட்டுமானங்களையும் மேற்கொள்ள மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்த மெட்ரோவிற்கு நிதி ரீதியாக நிலவிய பிரச்சனைகள் தீர்ந்து உள்ளதால்.. தமிழ்நாடு அரசு மற்ற பாலங்கள், சாலைகளை அமைக்கும் பணிகளில் கவனம் செலுத்தலாம். முக்கியமாக போதிய நிதி இல்லாமல் முடங்கி இருந்த பின்வரும் பணிகளை தமிழ்நாடு அரசு விரைவில் மேற்கொள்ள முடியும்.
பணி 1: சென்னை அண்ணா சாலையில் உயர்மட்ட சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடக்க தொடங்கி உள்ளன. இதனால் அங்கே பேரிகேட் மொத்தமாக போடப்பட்டு சாலைகளில் பல இடங்களில் மூடப்பட்டு உள்ளன.
இதனால் வரும் நாட்களில் அங்கே பணிகள் முடியும் வரை போக்குவரத்து நெரிசல் நிலவும் வாய்ப்புகள் உள்ளன. தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர் மட்ட சாலைகள் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் சிறப்புகளை இங்கே பார்க்கலாம்.
3.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு 4 வழி சாலையாக உயர் மட்ட சாலை அமைக்கப்பட உள்ளது. கீழே மெட்ரோ சுரங்கம் உள்ள நிலையில் அதற்கு பாதிப்பு ஏற்படாமல் உயர்மட்ட சாலை அமைக்கப்படும். பொறியியல் அதிசயம் என்று சொல்லும் விதமாக, மெட்ரோ சுரங்கத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் இந்த சாலை அமைக்கப்பட உள்ளது.
இன்ஜினியரிங் அதிசயம்: இன்ஜினியரிங் அதிசயம் என்று அழைக்கப்படும் வகையில் பரபரப்பான அண்ணாசாலையில் 3.2 கிமீ நான்கு வழி உயர்மட்ட சாலை பணிகள் முடித்தவுடன், தேனாம்பேட்டை மற்றும் சைதாப்பேட்டை இடையே பயணிகள் 10 நிமிடங்களுக்குள் பயணிக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாலைகள் பாலங்கள் ஒன்று கூட இல்லாத நிலையில்தான் நீண்ட பாலம் அமைக்கப்பட உள்ளது.
இந்த மேம்பாலத்திற்கான அடித்தளம் சாலை மட்டத்திலிருந்து ஏழு மீட்டர் ஆழத்தில் அமைக்கப்படும், மேலும் இது சராசரியாக 20m-28m ஆழம் கொண்ட மெட்ரோ சுரங்கப்பாதைக்கு மேலே அமைக்கப்படும். மெட்ரோ சுரங்கத்தை இது பிடிக்காது. இந்தியாவிலேயே முதல்முறையாக, நிலத்தடி மெட்ரோ சுரங்க பாதை கொண்ட சாலையில் உயர்மட்ட தாழ்வாரம் கட்டப்படும்.
மேம்பாலம் பணிகள்: இந்த மேம்பாலம், வழியில் உள்ள முக்கிய சந்திப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ள பேருந்து வழித்தடச் சாலைகளில் நெரிசலைக் குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் CMRL இன் தலைமை பொது மேலாளர் பணிகளை மேற்கொள்வதற்கு பல விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை வகுத்துள்ளார். இதில் சுரங்கப்பாதையில் கட்டுமான கழிவுகள் வெளியேறாமல் இருப்பதை கண்காணிப்பதற்கான கருவி வேலைகளை நிறுவுவ வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
மேலும் சிஎம்ஆர்எல் மெட்ரோ நிலத்தடி கட்டமைப்புகள் மற்றும் மெட்ரோ பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ரூ. 500 கோடி காப்பீடு கோரி ஒப்பந்தம் செய்துள்ளது. ₹621 கோடி மதிப்பில் 3.5 கி.மீ தொலைவு புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை பாலம் இருப்பதால் இடையில் நந்தனத்தில் நீண்ட நேரம் நிற்க வேண்டியது இல்லை. நந்தனம் சிக்னல் தொல்லை இனி இல்லை.
பணி 2: மதுரவாயல் - துறைமுகம் பாலம் திட்டம் கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கிய நிலையில் தற்போது தீவிர வேகத்தில் பணிகள் நடக்கின்றன. இதற்கான இரண்டாம் கட்ட பணிகள்.. அதாவது பாலத்தை இடிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. 14 ஆண்டுகளாக முடங்கி இருந்த இந்த திட்டத்தில் உச்சபட்ச வேகத்தில் சென்று கொண்டு இருக்கின்றது.
இதற்கான டெண்டர் விடப்பட்ட நிலையில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்து பணிகள் தொடங்கி உள்ளன. சென்னையில் தற்போது பல்வேறு பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சாலைகள் சரி செய்யப்பட்டு வருகின்றன. புதிய சாலைகள் போடப்பட்டு வருகின்றன. சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை கூட பாலம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடக்க உள்ளன.
இந்த நிலையில்தான் இன்னொரு பக்கம் மதுரவாயல் பாலத்திற்கான கட்டுமானம் தொடங்கி உள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைத்து துறைமுகத்திற்கு கூடுதல் ஏற்றுமதி, இறக்குமதியை மேற்கொள்ள வைத்து, வருமானத்தை பெருக்கும் வகையில் திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் கருணாநிதி மூலம் 2009ல் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் என்பது திமுகவின் கனவு திட்டம் ஆகும். சரியாக சொல்ல வேண்டும் என்றால் கருணாநிதியின் கனவு திடமாக இது இருந்தது. ஆனால் 14 வருடங்களாக இந்த திட்டம் தொடங்கப்படாமல் முடக்கப்பட்டு இருந்தது,
ஜெயலலிதா அரசியல்: மதுரவாயல் - துறைமுகம் இடையே பாலம் அமைக்கும் திட்டம் பல காலமாக ஜெயலலிதா ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட திட்டம். மதுரவாயல் வழியாக சென்னை உள்ளே நுழையும் பலர் பாதி கட்டப்பட்டு நிற்கும் பாலங்களை பார்த்து இருப்பார்கள். வெறும் தூண்கள் மட்டும் போஸ்டர் ஓட்டும் இடங்களாக காட்சி அளிக்கும்.
கிடப்பில் போடப்பட்ட திட்டம்: அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா இந்த திட்டத்தை நிறுத்தினார். கூவத்தின் மீது பாலம் கட்டுவது சுற்றுசூழலை பாதிக்கும் என்று கூறி திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டார். தமிழ்நாட்டில் அப்போது அரசியல் ரீதியாக கடுமையாக ஈகோ மோதல் நிலவி வந்தது. முக்கியமாக புதிய சட்டசபை கூட மருத்துவமனையாக மாற்றப்பட்டது. அதனால் இந்த திட்டமும் கைவிடப்பட்டது , கட்டப்பட்ட பாலங்கள் அப்படியே நின்றன.
அந்த திட்டம் அதன்பின் மேம்படுத்தப்படாமலே இருந்தது. 2011ல் நிறுத்தப்பட்ட இந்த திட்டம் 2022 வரை தொடங்கப்படாமல் இருந்தது. 11 வருடமாக திட்டம் முடங்கி கிடந்தது. இங்கு வெறும் தூண்கள் மட்டும் போஸ்டர் ஒட்ட பயன்படுத்தப்பட்டு வந்தது. இது சென்னைக்கே அலங்கோலத்தை கொடுக்கும் விதமாக மாறியது குறிப்பிடத்தக்கது. தற்போது இதன் பணிகள் தொடங்கி உள்ளன.












Click it and Unblock the Notifications