திசை மாறிய புயல்! பாப் கார்னோடு வேடிக்கை பார்க்கும் திமுக! விஜய் - சீமான் சண்டையால் இப்படி ஒரு லக்கா

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் - தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இடையே நிலவும் சண்டை காரணமாக திமுகவிற்கு சாதகமான சூழல் ஏற்பட்டு உள்ளது.

தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதும்.. முதல் மாநாட்டிலேயே பாஜக, திமுகவை விமர்சனம் செய்து இருந்தார். பாஜகவை மறைமுகமாக விமர்சனம் செய்தாலும்.. திமுகவை நேரடியாக திராவிட மாடல் அரசு என்று விமர்சனம் செய்தார்.

seeman naam tamilar katchi vijay

ஆனால் மற்ற கட்சிகளை பெரிதாக நேரடியாக விஜய் விமர்சனம் செய்யவில்லை. மறைமுகமாக சிலரை விமர்சனம் செய்தார். உதாரணமாக நான் கத்தி கத்தி பேச மாட்டேன் என்று பொதுவாக அரசியல்வாதிகள் பற்றி பேசினார். ஆனால் அவரின் பேச்சை கேட்டு நாம் தமிழர் சீமான் மற்றும் ஆதரவாளர்கள் தங்களை பற்றித்தான் விஜய் பேசியதாக.. கூறி விஜயை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

விமர்சனம்: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜயை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மிக கடுமையாக விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளார். தம்பி என்று விஜயை கூறி வந்த சீமான் இப்போது வெளிப்படையாக எதிரி என்று கூற தொடங்கி உள்ளார். அதன்படி, விஜய் கூறியது கொள்கையல்ல, கூமுட்டை! அதுவும் அழுகிய கூமுட்டை!.. ஒன்னு சாலையின் அந்த ஓரத்தில் நில்லு, இல்லை இந்த ஓரத்தில் நில்லு, நடுவுல நின்னா லாரி அடிச்சு செத்துப்போயிடுவே.. பாஜக மதவாதம் என்றால் காங்கிரஸ் மிதவாதமா? இந்தியை வலுக்கட்டாயமாக மாற்றியது காங்கிரஸ்; காங்கிரஸ், பாஜகவை விஜய் விமர்சிக்காதது ஏன்?" ரைமிங்கா வருகிறது என்பதற்காக எதையும் விஜய் பேசக் கூடாது.

திராவிடம் என்பது மக்களை பிளவுப்படுத்தி பார்ப்பதாகும். தமிழ் தேசியம் என்பது அனைத்து இன மக்களையும் அரவணைத்து செல்வது. விஷமும் விஷத்தை முறிக்கும் மருந்தும் ஒன்றா? சாதி, மதம், இனம், மொழி என்று பிரிக்கிறார்கள் என்று விஜய் பேசுகிறார். சாதி மதத்தோடு இனத்தையும் மொழியையும் ஒப்பிடுவது சரியா? ஒவ்வொரு தேசிய இனத்தின் முகம் மொழி. மதமும் சாதியும் நமது அடையாளம் அல்ல மொழிதான் நமது அடையாளம்.

சேலத்தில் விவசாயிகள் போராட்டத்துக்கு 40 பேர் வந்தார்கள். கடை திறக்க வந்த நயன்தாராவை பார்க்க 4 லட்சம் பேர் வந்தார்கள். விமானப்படை சாகசத்தைப் பார்க்க 15 லட்சம் பேர் வந்தார்கள். எங்கள் தலைவன் எங்களுக்கு கற்பித்தது.. 5 பேர் கூடினால் சாதிக்கலாம்.. 50 பேர் கூடினால் விவாதிக்கலாம். எனக்கு 36 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். எனது கூட்டம் 36 லட்சம் பேர். இப்போ எது பெரிய கூட்டம். இன்னொரு நடிகர் அழைத்தாலும் கூட்டம் வரும். விஜயகாந்துக்கு மதுரையில் கூடாத கூட்டம் இப்போது கூடிவிட்டதா?" எனக் கேள்வி எழுப்பினார்.

திமுகவிற்கு சாதகம்: இதனால் தற்போது மோதல் நாம் தமிழர் - விஜய் இடையே மாறி உள்ளது. அதாவது திமுகவிற்கு எதிரான வாக்குகள் பிரியும் சூழல் ஏற்பட்டு உள்ளது. திமுக வாக்குகள் பிரியாமல்.. திமுகவிற்கு எதிராக இருக்கும் எதிர் தரப்பு வாக்குகள் பிரியும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

விஜய் வருகையால் எதிர்க்கட்சிகள் மீது நம்பிக்கை இழந்தவர்கள்.. விஜய் பக்கம் செல்ல வாய்ப்புகள் உள்ளன. அதாவது அதிமுக வாக்குகள் சிதறலாம்.. நாம் தமிழர் வாக்குகளும் சிதறலாம். ஏன் பாஜக வாக்குகள் கூட சிதறலாம். இப்படி சிதறும் வாக்குகளால் எதிர்க்கட்சிகள் வலிமை இழக்கும் வாய்ப்புகள் உள்ளன.

இது ஒரு வகையில் வலிமையான கூட்டணி அமைத்து உள்ளன திமுகவிற்கு சாதகமாக மாறும் சூழல்கள் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+