நாளை தீர்ப்பு நாள்.. அரசியல் அதிகாரத்தால் எதையும் மாற்றலாம்.. ஒரு விரல் புரட்சிக்கு ரெடியா?
சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை (வெள்ளிக்கிழமை) ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற போகிறது. இந்த தேர்தலில் 10 லட்சம் பேருக்கு ஒரு பிரதிநிதி என மக்களாகிய நீங்கள் தேர்வு செய்யும் எம்பிக்கள் தான் இந்த நாட்டினை யார் ஆள வேண்டும் என்பதை தீர்மானிக்க போகிறார்கள்.. நீங்கள் ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை பார்ப்போம்.
இந்தியாவின் தலை எழுத்தை தீர்மானிக்கும் லோக்சபா தேர்தல் நாளை தொடங்கி 7 கட்டங்களாக ஜூன் 1 வரை நடைபெற போகிறது. ஜூன் 4ம் தேதி இந்தியாவை யார் ஆளப் போகிறார்கள் என்பது தெரிந்துவிடும். நாளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக 40 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற போகிறது.

கடந்த 25 நாட்களுக்கு மேலாக வாக்காளர்களாகிய உங்களிடம் வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்திருப்பார்கள், கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் அளித்திருப்பார்கள்.. நீங்கள் எந்த கட்சியாக வேண்டுமானாலும் இருக்கலாம், உங்கள் குடும்பத்தினர்கள் இவர்களுக்குத்தான் ஓட்டுப்போட வேண்டும் என்று கூட கூறுவார்கள். உங்கள் நண்பர்கள், ஊரின் பெரிய அரசியல் தலைவர்கள் என யார் பேச்சையும் இந்த விஷயத்தில் கேட்காதீர்கள்..
அதேபோல் நடிகர்கள், நடிகைகள், உங்களுக்கு பிடித்த நடிகர்களே சொன்னாலும், உங்களுக்கு பிடித்த தலைவர்களே சொன்னாலும் கேட்காதீர்கள்.. அதேபோல் சமூக வலைதளங்கள் தான் உலகத்தின் கண்ணாடி என்று ஒரு போதும் நம்பாதீர்கள்.. சமூக ஊடகங்களில் என்ன பார்க்க வேண்டும்.. எதை கேட்க வேண்டும் என்று எப்போதோ மாற்றிவிட்டார்கள். சமூக வலைதளங்களில் வரும் கருத்துக்கள் மக்களின் கருத்துக்களே அல்ல.. எனவே சமூக ஊடகப் பிரசாரங்கள் மற்றும் சமூக வலைதள விளம்பரங்கள் மற்றும் சின்னம், கட்சி பார்த்து நீங்கள் யாருக்கும் ஓட்டு போடாதீர்கள்.
உங்கள் தொகுதி வேட்பாளர்கள் குறித்த kyc என்ற தேர்தல் ஆணையத்தின் ஆப்பை டவுன்லோடு செய்யுங்கள். அதில் உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய முழு விவரங்களை பாருங்கள்.. அதில் உள்ள நல்ல மற்றும் கெட்ட விஷயங்களை ஆராயுங்கள்.உங்களுக்கு எந்த கட்சிக்கு அல்லது யாருக்கு ஓட்டுப்போட்டால் வேண்டிய நல்ல விஷயங்கள் நடக்கும்...உங்களுக்காக களம் இறங்கி போராடக்கூடியவர்கள், உங்கள் பிரச்சனைகளை காது கொடுத்து கேட்பவர்களுக்கு வாக்களியுங்கள்.
வாக்காளிக்காவிட்டால் என்ன பிரச்சனை ஏற்படும்.. ஒரு வேளை நீங்கள் வாக்களிக்காமல் போனீர்கள் என்றால், அது அரசியல் அதிகாரம் வாயிலாக உங்களையே பாதிக்கும். 100 சதவீதம் மக்கள் வாக்களித்தால் அரசியல் அதிகாரம் எப்படி வேண்டுமானாலும் மாறும். தற்போதைய நிலையில் வெறும் 60 சதவீதம் மக்கள் மட்டுமே வாக்களித்து அதில் 31 சதவீதம் வாக்கு பெற்றவர்கள் வெற்றியாளர்கள் என்று அறிவிக்கப்படுவார்கள்.. அப்படி அறிவித்ததால் வாக்களிக்காமல் போகும் 40 சதவீதம் மக்கள் ஜெயித்தவர்களுக்காக ஓட்டு போட்டதாகவே அர்த்தமாகிவிடும்.. அதாவது 69 சதவீதம் மக்களுக்கு பிடிக்காத ஒருவர் கூட வெற்றி பெற்று நாட்டை ஆளும் நிலை ஏற்படும்.
யார் ஜெயிக்க வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.. நீங்கள் ஓட்டு போடாத காரணத்தால் ஒருவர் வெற்றி பெறவும், அவர்களை போன்றவர்களால் இந்த நாட்டில் அரசு உருவாகவும் காரணமாகி விடாதீர்கள்.. ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்க வேண்டிய அரசாங்கத்தை ஓட்டுப்போடமால் தேர்வு செய்வதற்கு துணை போக வேண்டாம்..
ஒரு விரல் புரட்சி நடந்தால் வேண்டிய அரசியல் மாற்றங்களை உங்களால் உருவாக்க முடியும்.. அரசியல் அதிகாரத்தை கைப்பற்றாமல் எந்த மாற்றத்தையும் யாராலும் ஏற்படுத்திவிட வேண்டும்.. அதிகாரத்திற்கு வராமல் எந்த பெரிய நல்லதையும் மக்களுக்கு செய்துவிட முடியாது.. மக்களே மறந்தும் வாக்களிக்க மறந்துவிடாதீர்கள்.. நீங்கள் வெறும் வாக்களிக்கும் நாள் அல்ல.. நீங்கள் இந்த நாட்டின் அரசியல்வாதிகளுக்கு தீர்ப்பு அளிக்க போகும் நாள். ஒரு விரல் புரட்சிக்கு தயாராக இருங்கள்.
முடிந்தவரை காலையிலேயே வாக்களிக்க தேவையான ஆவணங்களுடன் வாக்குச்சாவடிக்குச் செல்லுங்கள். வாக்கு செலுத்தும்போது, வேட்பாளரின் பெயர். புகைப்படம், சின்னம் ஆகியவற்றை நன்கு தெளிவாக பாருங்கள். பெயரை மட்டும் பார்க்காமல் சின்னம், புகைப்படம் எல்லாவற்றையும் பாருங்கள். நீங்கள் வாக்களிக்கும் சின்னம்தான் 'விவிபேட்' இயந்திரத்திலும் காட்டுகிறதா என்பதை உறுதிசெய்துவிட்டு வாக்களியுங்கள். கடைசியாக முக்கியமானது.. நீங்கள் அளிக்க போகும் வாக்குதான்.. அடுத்த ஐந்து ஆண்டுகள் இந்தியாவின் தலை எழுத்தையே தீர்மானிக்கும்.. எனவே அதை மனதில் வைத்துக்கொண்டு வாக்களியுங்கள்..
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications