Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லாட்ஜ்ஜில் நண்பருடன் ரூம் போட்ட அகிலா.. அடுத்த நொடியே ஷாக்.. கேஷூவலாக வீடியோ காலில்.. இதென்ன கொடுமை

Subscribe to Oneindia Tamil

சென்னை: குடும்ப வன்முறைகள் அதிகரித்து உறவுகள் சிதைந்து கொண்டிருக்கின்றன.. வரதட்சணை பிரச்சனையால், இளம்பெண்கள் அதிலும் படித்த பெண்களே தற்கொலைகளை செய்து வருகிறார்கள்.. இதற்கு நடுவில் கள்ளக்காதல் தொடர்பான குற்றங்களும் அதிகரித்து, பல உயிர்கள் காவு வாங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், கேரளா மாநிலத்தில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது.. இது தொடர்பான விசாரணையை போலீசார் நடத்தி வருகிறார்கள் என்றாலும், சம்பவ அதிர்ச்சி இன்னமும் விலகவில்லை.

கேரளா மாநிலத்தில் ஏற்கனவே வரதட்சணை கொடுமை நிலவி கொண்டிருக்கிறது.. கடந்த ஒரு வாரத்தில் 2 பெண்கள் தற்கொலை செய்துள்ளனர்.. திருமணமாகி 8 வருடமான அதுல்யா என்ற பெண்ணுக்கு 43 சவரன் நகை போட்டு திருமணம் செய்துதரப்பட்டது.

Lodge room Akhila video call

ஆனாலும், கூடுதல் வரதட்சணை கேட்டு, அதுல்யாவை கணவர் சதீஷ் கொடுமைப்படுத்தியிருக்கிறார்.. வயிற்றில் எட்டி உதைத்தும், கழுத்து நெரித்தும், தலையில் தட்டால் தாக்கியும் கொடுமைப்படுத்தி வந்த நிலையில், அதுல்யா தற்கொலையே செய்து கொண்டார்..

நீளும் வரதட்சணை கொடுமைகள்

அதேபோல, விபன்சிகா என்ற 32 வயது பெண்ணுக்கும், பல சவரன் நகைகளாக போட்டு திருமணம் செய்தும் வரதட்சணை வெடித்துள்ளது.. கணவர் நிதீஷ், தன்னுடைய அப்பா, தங்கையுடன் சேர்ந்து விபன்சிகாவை கொடுமைப்படுத்தியிருக்கிறார்.. பட்டினி போட்டும், தலைக்கு மொட்டை அடித்தும், மனைவி முன்னிலையிலேயே பெண்களை வீட்டுக்கு அழைத்து வந்து உறவு வைத்தும், சித்ரவதை தந்துள்ளார்.. இறுதியில் விபன்சிகாவும் தற்கொலை செய்து கொண்டார்.

2 பெண்களுமே கொல்லத்தை சேர்ந்தவர்கள்.. 2 பெண்களுமே ஷார்ஜாவில் கணவருடன் தங்கியிருந்து, இந்த சித்ரவதையை அனுபவித்துள்ளனர்.. 2 பெண்களுமே தங்களுக்கு நேர்ந்த கொடுமையை வீடியோவாக வெளியிட்டு தற்கொலை செய்துள்ளனர்.. இதுகுறித்த விசாரணைகள் நடந்து வரும்நிலையில், கள்ளக்காதல் அட்டகாசங்களும், அது தொடர்பான வன்முறைகளும் பெருகி வருகின்றன. நேற்றுகூட ஒரு பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அகிலாவின் கள்ளக்காதல்

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் குண்டறா பகுதியை சேர்ந்த அகிலாக்கு 35 வயதாகிறது.. ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகளும் இருக்கிறார்கள்... தம்பதி இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், திடீரென அகிலாவின் குணம் மாற துவங்கியிருக்கிறது..

எர்ணாக்குளம் அருகிலுள்ள நேரியமங்கலம் பகுதியை சேர்ந்த பினு என்ற 38 வயது நபருடன் அகிலாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.. ஒருகட்டத்தில் அகிலாவை திருமணம் செய்து கொள்வதாக பினு கூறியிருக்கிறார்.. பினு தந்த நம்பிக்கையானது, தகாத உறவிலும் வந்து முடிந்துள்ளது..

இதனால் 2 பேரும் அடிக்கடி எர்ணாகுளம் ஆலுவாவில் உள்ள ஒரு லாட்ஜில் அடிக்கடி ரூம் எடுத்து தங்கி மகிழ்ந்து வந்துள்ளனர்.. சம்பவத்தன்றும் அதே குறிப்பிட்ட லாட்ஜூக்குதான் இருவரும் சென்றிருக்கிறார்கள்..

கூலாக வீடியோ கால்

அப்போது அகிலா, லாட்ஜில் வந்து இப்படி அடிக்கடி உல்லாசமாக இருப்பதற்கு பதில், திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்.. ஆனால், இதற்கு பினு மறுப்பு தெரிவித்துள்ளார்.. இப்போதே நாம் மகிழ்ச்சியாகத்தானே இருக்கிறோம்? எதற்கு திருமணம் செய்ய வேண்டும்? என்று கேட்டுள்ளர்.. இது அகிலாவுக்கு அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது.. இதனால், பினுவை ஆவேசத்தில் திட்டித்தீர்க்கவும், இருவருக்குள்ளும் வாக்குவாதம் வலுத்தது. ..

ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த பினு, அகிலா அணிந்திருந்த துப்பட்டாவை பிடுங்கி, அதே துப்பட்டாவில் அகிலாவின் கழுத்தை இறுக்கினார்.. இதனால் அடுத்த சில நொடிகளிலேயே அகிலா துடிதுடித்து இறந்துவிட்டார்.. இதைக்கண்டு கொஞ்சமும் டென்ஷன் ஆகாத பினு, தன்னுடைய நண்பர்களுக்கு போனை போட்டு, அகிலாவை கொன்றுவிட்டேன், இதோ அவளது உடலை பாருங்கள் என்று வீடியோ காலில் கூலாக காட்டினாராம்..

பரபர விசாரணை

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள், உடனடியாக போலீசுக்கு விஷயத்தை சொல்லி உள்ளனர்.. இதையடுத்து, போலீசார் சம்பந்தப்பட்ட லாட்ஜூக்கு விரைந்து சென்று அகிலாவின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.. பினுவையும் கைது செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்..

கள்ளக்காதலியை கொன்றதுடன், அவரது உடலையும் வீடியோ காலில் நண்பர்களுக்கு காட்டிய சம்பவம் கேரளாவில் பரபரப்பை உண்டுபண்ணி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+