பல்லாவரம் அருகே கோபித்துக் கொண்டு போன ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் மனைவி.. இப்படியா ஆகணும்
சென்னை: சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக ஜோசப் என்பவர் பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி டெய்சி ராணி கடந்த 21-ந் தேதி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினாராம். போகும் போது செல்போனை எடுத்து செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மாயமான பொழிச்சலூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவரின் மனைவி, பெசன்ட் நகர் கடற்கரையில் இருந்த கோலம் உறவினர்களை ஆடிப்போக வைத்துள்ளது.
சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக ஜோசப் என்பவர் பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி டெய்சி ராணிக்கு 41 வயது ஆகிறது. ஜோசப் மற்றும் டெய்சி ராணி தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 21-ந் தேதி வீட்டில் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டதாம். இந்த சண்டையில் டெய்சி ராணி, கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினாராம். மேலும் டெய்சி ராணி செல்போனையும் வீட்டிலேயே வைத்து விட்டு வெளியே சென்றுவிட்டாராம். அதன்பிறகு அவர் வீடு திரும்பி வரவில்லை. அக்கம் பக்கம், உறவினர்கள் வீடு என எங்கு தேடியும் அவரை காணாததால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், சங்கர்நகர் காவல் நகர் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான டெய்சிராணியை தேடி வந்தனர். அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, பொழிச்சலூரில் இருந்து பல்லாவரம் வரை ஆட்டோவில் ஏறிச்சென்ற டெய்சி ராணி, பல்லாவரம் பஸ் நிலையத்தில் இருந்து மற்றொரு ஆட்டோவில் ஏறி சென்றதும், அந்த ஆட்டோ, கிண்டி வழியாக பெசன்ட் நகர் சென்றதையும் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அந்த ஆட்டோ பதிவு எண் மூலம் ஆட்டோ டிரைவரை கண்டுபிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர், பெசன்ட் நகர் தேவாலயம் அருகே டெய்சிராணியை இறக்கி விட்டதாக கூறினார். இதையடுத்து பெசன்ட் நகர் தேவாலய பகுதி, கடற்கரை, மெரினா கடற்கரை பகுதியில் சங்கர் நகர் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தார்கள்.
இந்தநிலையில் பெசன்ட் நகர் கடற்கரையில் பெண் உடல் கரை ஒதுங்கி இருந்தது.இதுபற்றி அந்த பகுதி மக்கள் பெசன்ட் நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் பிணமாக கரை ஒதுங்கியது மாயமான டெய்சிராணி என்பது தெரியவந்தது. அவரது உறவினர்களும், அந்த உடலை பார்த்து அது டெய்சி ராணிதான் என அடையாளம் காட்டினர்.
பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வீட்டில் கோபித்துக்கொண்டு ஆட்டோவில் பெசன்ட்நகர் சென்ற டெய்சிராணி, கடலில் குதித்து உயிரை விட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். மேலும் இதுபற்றி சங்கர்நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர். வீட்டில் இருந்து மாயமான ஊராட்சி மன்ற துணைத்தலைவரின் மனைவி, பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பொழிச்சலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications