திருத்தணி தலைமை காவலரின் மனைவி பாக்கியலட்சுமிக்கு தலைவலி.. பிரபல மருத்துவமனையில் நடந்த பெரிய ட்விஸ்ட்
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே நல்லாத்தூர் ஆர்.கே.பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் மப்பேடு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவி பாக்கியலட்சுமி. இவருக்கு அடிக்கடி தலைவலி வந்துள்ளது. அண்மையில் ஶ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்போது அவருக்கு என்ன நடந்தது? உறவினர்கள் சொல்வது என்ன.. மருத்துவர்கள் சொல்வது என்ன என்பதை பார்ப்போம்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே நல்லாத்தூர் ஆர்.கே.பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் மப்பேடு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவி பாக்கியலட்சுமி, மகள் மற்றும் மகன் உள்ளனர். இந்த நிலையில் பாக்கியலட்சுமிக்கு அடிக்கடி தலை வலி வருவது வழக்கம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் 8ஆம் தேதி அன்று தலைவலி காரணமாக பாக்கியலட்சுமி மயங்கி வீட்டிலேயே கீழே விழுந்துள்ளார். உடனே பாக்கியலட்சுமியை ஶ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி பாக்கியலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் பாக்கியலட்சுமி உறவினர்கள் முறையிட்டதற்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் முறையான விளக்கம் அளிக்கவில்லை என கூறப்படுகிறது மேலும் பாக்கியலட்சுமி உடலை பிரேத பரிசோதனை செய்து உறவினரிடம் மருத்துவமனை நிர்வாகம் ஒப்படைத்தது. உடலை பார்க்க பாக்கியலட்சுமி மகன் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது மருத்துவமனை வளாகத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
இறந்த பாக்கியலட்சுமி என் சகோதரர் தேவேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், " தலைவலி என மயக்கம் அடைந்து கீழே விழுந்த எனது அக்காவை இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தோம். எம்ஆர்ஐ ஸ்கேன், சிடி ஸ்கேன் எடுக்க வேண்டும் என்றும் தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
ஆனால் ஸ்கேன் ரிப்போர்ட் தாமதமாக வழங்கினார்கள். மேலும் மருத்துவர்கள் முறையாக சிகிச்சை அளிக்க இல்லாததாலும் எனது சகோதரி உயிரிழந்தார். நாங்கள் உண்மையை சொல்லுங்கள் ஏன் தாமதிக்கிறீர்கள் நாங்கள் வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறோம் என்று கேட்டதற்கு வேண்டாம் இங்கேயே சிகிச்சை அளிக்கலாம் அவர்கள் ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள் என்று பயமுறுத்தினார்கள். ஆனால் இரண்டு நாட்களாக சிகிச்சை அளிப்பதாக கூறிவிட்டு எனது சகோதரியை சாகடித்துக் கொடுத்துள்ளனர். ஆகவே தனியார் மருத்துவமனை நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேதனை தெரிவித்தார்.
இது குறித்து தனியார் மருத்துவமனை மருத்துவரிடம் கேட்டபோது; நேற்று முன்தினம் ( 8ஆம் தேதி) காலையில் பாக்கியலட்சுமி மயங்கி விழுந்தவுடன் திருத்தணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.. அங்கு எடுக்கப்பட்ட ஸ்கேன் ரிப்போர்ட் வைத்து பார்த்தபோது மூளையில் கட்டி உள்ளது தெரியவந்தது. முறைப்படி அனைத்து தகவல்களும் கணவரிடம் தெரிவித்தோம். பாக்கியலட்சுமி உடல்நிலை மோசமாக இருந்ததாக அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications