ரேஷனில் இனி 2 கிலோ பாமாயில்? குடும்ப அட்டைதாரர்களுக்கு மளிகை பொருள்?.. முதல்வருக்கு ராமதாஸ் கோரிக்கை
சென்னை: ரேஷனில் வழங்கப்படும் துவரம் பருப்பு மற்றும் பாமாயிலின் அளவை 2 கிலோவாக உயர்த்த வேண்டும், நியாயவிலைக்கடைகள் மூலம் மீண்டும் மலிவு விலையில் உளுந்து வழங்க வேண்டும், மளிகைப் பொருட்களையும் ரேஷன் கடைகளின் மூலம் மானிய விலையில் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார்.
தமிழகத்தின் மூத்த தலைவரும், பாமக நிறுவனருமான டாக்டர் ராமதாஸ் தமிழக மக்களுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை இதுதான்:

டாக்டர் ராமதாஸ்: தமிழ்நாட்டில் எண்ணெய் மற்றும் மளிகைப்பொருட்களின் விலைகள் கடந்த ஒரு மாதத்தில் பெருமளவில் உயர்ந்திருக்கின்றன. பருப்பு வகைகள், மஞ்சள், மிளகாய்த்தூள் ஆகியவற்றின் விலைகள் கிலோவுக்கு ரூ.15 வரை உயர்ந்துள்ளன.
மிளகு, சீரகம், மிளகாய், மல்லி உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலைகள் கிலோவுக்கு ரூ.50 வரை உயர்ந்திருக்கின்றன. எண்ணெய் விலைகள் லிட்டருக்கு ரூ.30 வரை உயர்ந்திருக்கின்றன. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
மளிகை பொருட்கள்: எண்ணெய், மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் மாதாந்திர செலவு ரூ.2000 வரை உயர்ந்திருக்கிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு அவற்றின் தட்டுப்பாடு ஒரு காரணம் என்றால், அப்பொருட்களின் பதுக்கலை தடுக்கத்தவறிய தமிழக அரசின் அலட்சியம் இன்னொரு காரணமாகும். அந்த வகையில் விலைவாசி உயர்வுக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
கடந்த சில மாதங்களில் அரிசி விலை கிலோவுக்கு ரூ.15 வரை உயர்ந்ததால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். இப்போது மற்ற பொருட்களின் விலைகளும் உயர்ந்திருப்பதால் மக்களால் சமாளிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
தமிழக அரசு: விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை. இதற்காகத் தான் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சரின் தலைமையில் விலைக் கண்காணிப்புக் குழு செயல்பட்டு வருகிறது.
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் எண்னெய், பருப்பு மற்றும் மளிகைப் பொருட்களின் விலைகள் அதிகரித்திருப்பது விலை கண்காணிப்புக் குழுவுக்கு தெரியுமா? விலைகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வசதியாக இது குறித்த அறிக்கைகளை விலைக் கண்காணிப்புக் குழு அரசிடம் தாக்கல் செய்ததா? என்பது தெரியவில்லை.
விலைவாசி உயர்வு: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். எண்ணெய், பருப்பு விலையை கட்டுப்படுத்தும் நோக்குடன் நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படும் துவரம் பருப்பு மற்றும் பாமாயிலின் அளவை 2 கிலோவாக உயர்த்த வேண்டும்.
தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தவாறு நியாயவிலைக்கடைகள் மூலம் மீண்டும் மலிவு விலையில் உளுந்து வழங்க வேண்டும். மளிகைப் பொருட்களையும் நியாயவிலைக்கடைகள் மூலம் மானிய விலையில் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
தேங்காய் எண்ணெய்: ஆட்சிக்கு வந்தால், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் மானிய விலையில் விற்பனை செய்யப்படும் என்று திமுக ஏற்கனவே, அறிவித்திருந்தது. இதை வலியுறுத்திதான், தென்னை விவசாயிகள் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருவதுடன், அதனை ஏன் இன்னும் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை? என்றும் கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.
இப்போது பாமாயிலை உயர்த்தி தரும்படியான கோரிக்கையை டாக்டர் ராமாஸ் வைத்துள்ளார். அப்படியானால் தேங்காய் எண்ணெய் வழங்கப்படுமா? பாமாயில் வழங்கப்படுமா? அல்லது இரண்டுமே வழங்கப்படுமா? என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications