வாக்குமூலத்தில் பற்றவைத்த "கிரிஜா".. எடப்பாடி காலை சுற்றி "302" பாம்பு! ஸ்டாலின் நினைத்தால் கதை ஓவர்
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கில் போலீசார் சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ள நிலையில் மேலே இருந்த தலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதைப்பற்றி கோட்டை வட்டாரத்தில் விசாரித்ததில் சில பரபரப்பு தகவல்களை வெளியிட்டனர்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதை அரசு பயங்கரவாதம் என்று பொதுமக்களும், ஊடகங்களும், பல்வேறு அரசியல் கட்சிகளும் கடுமையாக விமர்சனம் செய்தன.
அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதல்வர் ஸ்டாலின்.. இந்த விவகாரத்தை மிக கடுமையாக எதிர்த்து இருந்தார். எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்துதான் அனைத்து குற்றங்களும் நடைபெற்றதாக விமர்சனம் வைத்தார்.

அறிக்கை
இந்த நிலையில்தான் தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான குழு இந்த அறிக்கையை வெளியிட்டு உள்ளது. 2018ம் ஆண்டு இந்த தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றது. போராட்டம் செய்து கொண்டு இருந்த மக்கள் மீது போலீசார் நடத்திய கண் மூடித்தனமான தாக்குதலில் 13 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். மக்கள் கலவரம் செய்யாமலே போலீசார் வேண்டுமென்றே துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர் என்று தற்போது வெளியாகி உள்ள அறிக்கையிலும் அம்பலம் ஆகி உள்ளது.

என்ன சொல்கிறது
இது தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கையில் ஓடிக்கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. துப்பாக்கிச்சூடுக்கு முன் எவ்வித எச்சரிக்கையும் விடப்படவில்லை. துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ₹50 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ₹ 10 லட்சமும் வழங்க வேண்டும். துப்பாக்கிச் சூடு நடத்திய 17 காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பற்ற வைத்தார்
இந்த விசாரணையில்தான் அப்போதைய தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் முக்கியமான தகவல் ஒன்றை தெரிவித்தார். அவர் தனது வாக்குமூலத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றிய மினிட் பை மினிட் அப்டேட்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார். அப்போது இந்த விஷயத்தையே டிவி பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறி இருந்தார். ஆனால் அவர் சொன்னது பொய் என்று இந்த அறிக்கை மூலம் நிரூபணம் ஆகி உள்ளது.

என்ன கோரிக்கை
இந்த நிலையில்தான் எடப்பாடி மீது இதில் 302 சட்ட பிரிவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் இந்த கோரிக்கையை வைத்து வருகின்றனர். 302 என்பது கொலை வழக்கு சட்ட பிரிவு ஆகும். இந்த பிரிவின் கீழ் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்கு தெரிந்துதான் எல்லாம் நடந்து இருக்கிறது.

போலீஸ் எல்லாம் கண்ட்ரோல்
போலீஸ் அவரின் கட்டுப்பாட்டில் இருந்தது. தமிழ்நாடு உள்துறை அவரின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதெல்லாம் போக அவர்தான் முதல்வர். இதனால் அவர் மீது 302 போட வேண்டும். அப்போதுதான் இதில் கொலை செய்யப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும். அதோடு இதில் தனக்கு எதுவுமே தெரியாது என்றும் எடப்பாடி பொய் சொல்லி இருக்கிறார். அதனால் அவர் மீது நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

கிரிமினல் நடவடிக்கை இல்லை
முதல்வர் ஸ்டாலின் மனது வைத்தால் 302 மூலம் மொத்தமாக எடப்பாடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் இதில் அவர் அப்படிப்பட்ட நடவடிக்கையை எடுக்க வாய்ப்பே இல்லை என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் இதில் போலீஸ் அதிகாரிகள் சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். உயர் அதிகாரிகள் சிலருக்கு மெமோ மட்டுமே கொடுக்கப்பட்டு உள்ளது. யாரும் டிஸ்மிஸ் செய்யப்படவில்லை.

வாய்ப்பு இல்லை
ஏன் யார் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாறாக இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு மட்டுமே உத்தரவிடப்பட்டு உள்ளது. அதிகாரிகள் மீதே துறை ரீதியான நடவடிக்கைதான் எடுக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கை சிபிஐ வேறு தனியாக விசாரித்து வருகிறது. அதனால், இதில் எடப்பாடிக்கு எதிராக 302 போடப்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தினர்.
-
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications