"சங்கராச்சாரியா"ன்னு நினைப்பா.. தபேலா எடுத்து அடித்தால் இசைஞானியா"..ஈவிகேஎஸ் இப்படியெல்லாம் பேசலாமா
இளையராஜாவை தரக்குறைவாக விமர்சித்திருக்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
சென்னை: "தபேலா எடுத்து அடிப்பவன் எல்லாம் இசைஞானி ஆகிவிட முடியாது.. அவர் மனசுக்குள் மனதிற்குள் இளையராஜாவுக்கு சங்கராச்சாரியார் என்ற நினைப்பா?" என்று சர்ச்சையாக ஈவிகேஎஸ் விமர்சித்துள்ளார்.. சாதியை வைத்து விமர்சித்ததால், இளங்கோவன் பேச்சு சர்ச்சையாகி உள்ளதுடன், சட்ட நடவடிக்கை பாயுமா என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.
Recommended Video
அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு இளையராஜா பேசியிருந்த நிலையில், பெரும்பாலான மக்கள் தங்கள் கொந்தளிப்பை வெளிப்படுத்தினார்கள்.. கண்டனங்களை பதிவிட்டுள்ளனர்.
மொத்தத்தில் இளையராஜா, தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சொல்லி வருகிறார்கள்..

இளங்கோவன்
இப்படிப்பட்ட சூழலில், முன்னாள் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இளையராஜாவை சரமாரி விமர்சித்துள்ளார். ஈரோட்டில் நடந்த கூட்டத்தில் ஈவிகேஎஸ் பேசியதாவது: "பணம் வந்துவிட்டால் நீ உயர்சாதி ஆகிவிட முடியாது. தமிழ்நாட்டில் சில அகராதிகள் இருக்கிறாங்க.. கேட்டால் உண்மையிலேயே நான் இசை மன்னன் என்று சொல்லி கொள்கிறார்கள், இசை மன்னன் யார் என்று எல்லோருக்கும் தெரியும். தபேலா எடுத்து அடிக்கிறவர்கள் எல்லாம் இசைஞானி ஆகிவிட முடியாது.

இளையராஜாவாம்?
வறுமையில் சாப்பாட்டுக்கே வழி இல்லாத போது கம்யூனிச சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்வதும், பணமும் புகழும் வந்தபிறகு தன்னை உயர் சாதி என நினைத்துக் கொள்வதும் என்ன நியாயம். நான் யாரை சொல்றேன்னு உங்களுக்கே தெரியும்.. இளையராஜா வா? வயது 80க்கு மேல் ஆகப்போகிறது கேட்டால் இளையராஜாவாம்.. ஆரம்பத்தில், தொழிலாளர்களின் நலன் குறித்து பாடிய நீ, பணமும் புகழும் வந்தவுடன் மேலும் பணக்காரன் ஆக வேண்டுமென்ற ஆசையில் நீ திடீரென பக்திமான் ஆகிவிட்டாய்... பக்திமான் ஆகலாம் அதனால் தவறு என்று சொல்ல மாட்டேன்...

ஒப்பீடு நியாயமா?
அது உங்கள் விருப்பம். உங்கள் விருப்பத்தில் நான் எப்படி தலையிட முடியும்? அது போல எங்கள் விருப்பத்திற்கு நீ மரியாதை கொடு. அதைவிடுத்து அம்பேத்கர் போன்றவர்களுடன் மோடியை ஒப்பிடுவது என்ன நியாயம்? ஓர் அரசிடம் உதவிப் பெற்று படித்த அம்பேத்கர், அப்படியே மேல்நோக்கிப் போயிருக்கலாம்.. ஆனால் வெளிநாடுகளில் சென்று படித்துவிட்டு, இழிநிலையில் இருக்கின்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உழைக்கவேண்டும் என்று கடைசி வரை உழைத்தவர், இந்த நாட்டிற்கு அரசியலமைப்பு வகுத்துக் கொடுத்தவர் அவர்..

கேடித்தனம்
அவருடன் மோடியுடன் ஒப்பிட்டு கேடி தானம் செய்யலாமா? இன்னும் சொல்லப்போனால் மோடியை பெரியாருடன் ஒப்பிடகூட தயங்கமாட்டார்கள். மோடியும், பெரியாரும் ஒன்று; இரண்டு பேரும் தாடி வைத்துக் கொண்டிருந்தார்கள் என்று சொன்னால், என்ன நியாயம்? உனக்கு ஒப்பிடவேண்டும் என்று ஆசையிருந்தால், ஹிட்லரோடு மோடியை ஒப்பிடு. முசோலினியோடு மோடியை ஒப்பிடு.. இந்த நாட்டில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக உழைத்தவரை ஏன் இப்படி அசிங்கம் செய்கிறீர்கள்?

சங்கராச்சாரியார்
ஆனால், இந்த நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக உழைத்தவர்களை நீங்கள் அசிங்கம் செய்யவேண்டும் என்று நினைத்தால், அதில் என்ன நியாயம் இருக்கிறது? இளையராஜாவிற்கு ஒருமுறை அடிபட்டால் போதாது என்று நினைக்கின்றேன்.பெரியார் திரைப்படத்திற்கு இசையமைக்க மாட்டேன் என்று சொன்னவர்தான் இந்த இளையராஜா, அவர் மனதிற்குள் சங்கராச்சாரியார் என்று நினைப்பு. சங்கராச்சாரியாரையே ஜெயிலுக்குள் தள்ளிய காலம், இந்தக் காலம்" என்று பேசியுள்ளார்.

இளங்கோவன்
இந்த பேச்சுதான் சர்ச்சையை கிளப்பி விட்டு வருகிறது.. சாதியை குறிப்பிட்டு பேசியதால், கண்டனங்கள் குவிகிறது.. இவர் மீது பிசிஆர் சட்டம் பாயுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.. ஈவிகேஎஸ் இளங்கோவனை பொறுத்தவரை, யாராக இருந்தாலும் வெளிப்படையாக பேசி பல முறை சர்ச்சையில் சிக்கியவர்.. ஒருமுறை மறைந்த ஜெயலலிதா பற்றியும், பிரதமர் மோடி குறித்தும் மிகவும் அருவருக்கதக்க வார்த்தைகளால் பேசியதை இந்த தமிழகமே கேட்டது.. சில சமயம் முகம் சுளிக்கும் அளவுக்கும் இவரது விமர்சனங்கள் எல்லை மீறிவிடுவதும் உண்டு.

சங்கராச்சாரியார்
சொல்ல வரும் கருத்தும், பேச்சும், நிலைப்பாடும், சரியே என்றாலும், தடித்த வார்த்தைகள் காரணமாக பல சமயங்களில் இளங்கோவன் சிக்கி கொண்டுள்ளார்.. இளையராஜா விஷயத்தில், பெரும்பாலானோருக்கு எதிர்ப்பு கருத்துக்கள் இருந்தாலும், அரசியல் நாகரீகம் மிகவும் அவசியம் என்பதை, பாரம்பரியமான திராவிட குடும்பத்தை சேர்ந்த இளங்கோவனுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இருப்பதாகவே தெரிகிறது..!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications