சூப்பர்.. தமிழகத்தில் திடீர்னு "முளைத்த" விதை.. பாஜகவுக்கு விஜய் ஆதரவு? மிரண்ட "திராவிட கட்சி".. அடடே
சென்னை: நடிகர் விஜய்யின் அரசியல் இன்னமும் உறுதிசெய்யப்படாத நிலையில், பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவுகள் குவிந்து வருகின்றன.. இதை திராவிட கட்சிகளும் உற்றுகவனித்தபடியே வருகின்றன.
சமீப காலமாகவே, நடிகர் விஜய்யின் செயல்பாடுகளிலும், பேச்சுக்களிலும், வழக்கத்துக்கு மாறான அரசியல் வாடை தெறித்து விழுந்து கொண்டிருக்கிறது.

நடிகர் விஜய்: அந்தவகையில், சமூகத்தில் சமநிலை வேண்டும் என்று உரக்க குரலெழுப்பிய அம்பேத்கரும், பெரியாரும், காமராஜரும் மாறி மாறி விஜய்யின் பேச்சில் நினைவுகூரப்பட்டு வருகிறார்கள்.
எனினும், பெரியாரை முன்னிலைப்படுத்தியிருந்த விஜய், மறைந்த முதல்வர்கள் அண்ணாவின் பெயரையோ, கலைஞர் பெயரையோ சொல்லவில்லை.. மாறாக, பெரியார், அம்பேத்கர், காமராஜர் பெயரை மட்டுமே முன்னிலைப்படுத்தியதால், இந்துத்துவாவுக்கு எதிரான அரசியலை கையில் எடுக்க போகிறாரா? என்ற சந்தேகத்தையும் அதிகமாகவே கிளப்பிவிட்டுள்ளார்.
ஈடுபாடுகள்: அதேசமயம், தமிழ்த் தேசிய சிந்தனைகளிலும் அவரது ஈடுபாடு இருப்பதாக தெரியவில்லை.அப்படியானால், விளிம்பு நிலை மக்களுக்கான அரசியலை மட்டுமே விஜய் முன்னெடுக்கக்கூடும் என்றும் அனுமானங்கள் சொல்கின்றன.. சுருக்கமாக சொல்லப்போனால், அது மாதிரியும் இல்லாமல், இது மாதிரியும் இல்லாமல், ஒருபுது மாதிரியான அரசியலாக இருக்கும் என்றே தெரிகிறது.
அதுமட்டுமல்ல, எம்பி தேர்தலைவிட, தமிழக சட்டப்பேரவை தேர்தலை மையப்படுத்தியே விஜய்யின் அரசியல் இருக்கலாம் என்றும், வேண்டுமானால், இந்த எம்பி தேர்தலை 'வெள்ளோட்டமாக' விஜய்யின் மக்கள் இயக்கம் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் அனுமானங்கள் கூறுகின்றன..
பஞ்சாயத்து தேர்தல்: கடந்த உள்ளாட்சி இடைத்தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், பஞ்சாயத்து கவுன்சிலர் பதவி உட்பட 77 இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றிருந்தது. அதாவது, நாம் தமிழர், தேமுதிக போன்ற சீனியர் அரசியல் கட்சிகளைவிட, ஜூனியர் அமைப்பான 'விஜய் மக்கள் இயக்கம்" சிறப்பாக செயல்பட்டு மக்களின் கவனத்தை திருப்பியிருந்தது.
பல தலைவர்கள் பேசி பேசி வாங்கிய வாக்குகளைவிட, பேசாமலேயே சாதித்து காட்டியிருந்தார் விஜய். இப்போதுகூட தேர்தல் குறித்து, விஜய், வாய் திறக்கவேயில்லை.. கட்சி குறித்தோ, அரசியல் நிலைப்பாடுகள் குறித்தோ எதுவுமே வெளிப்படையாக அறிவிக்கவில்லை.. அதிகாரப்பூர்வமான தகவலையும் தரவில்லை.. ஆனாலும், தொடர்ந்து லைம்லைட்டில் இருந்து வருகிறார்.
விஜய் கவனம்: அதிலும் நேற்றைய தினம் லியோ படத்தின் கொண்டாட்டத்தில், "நான் எப்போதுமே தளபதி... மக்களே மன்னர்கள். அவர்களின் பணி செய்யும் தளபதி" என்று விஜய் சூசகமாக பேசியிருப்பது, மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது..
விஜய் அரசியலுக்கு வந்தால் ஒன்றும் தப்பில்லையே என்று திரைப்பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அதிலும் முதல் நபராக விஜய்க்கு ஆதரவை சொன்னது, அதிமுக செல்லூர் ராஜூதான்.. "விஷால் வரும்போது விஜய் அரசியலுக்கு வரக்கூடாதா என்று கேள்வியையும் கேட்டிருந்தார். இதையடுத்து, கடம்பூர் ராஜூ உள்ளிட்டவர்கள் தொடர் ஆதரவை தந்துள்ளனர்.
புதுச்சேரி ரங்கசாமி: அவ்வளவு ஏன்? தேமுதிக முதல் புதுச்சேரி ரங்கசாமி வரை விஜய்க்கான ஆதரவை தந்து வருகிறார்கள். விஜய் போன்றவர்கள் கட்டாயம் அரசியலுக்கு வரவேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலையும் பச்சைக்கொடி காட்டிவிட்டார்.
இன்றுகூட, நாம் தமிழர் கட்சி சீமான் பேசும்போது, "பாஜகவை ஆதரிக்கும் முடிவை விஜய் நிச்சயம் எடுக்கமாட்டார். விஜய் நீங்கள் நினைப்பது போலவெல்லாம் கிடையாது.. அவர் வரும்போது சரியான முடிவை எடுப்பார்" என்ற தன்னுடைய பெருத்த நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறார் சீமான்.
அதுபோலவே, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியும் விஜய்யின் அரசியல் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்புகூட, விஜய் அரசியலுக்கு வருவது பற்றி கிருஷ்ணசாமியிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டார்கள்.
வாக்காளர்கள்: அதற்கு அவர், "நடிகர் விஜய் அரசியலுக்கு வரலாம் அல்லது வராமல் போகலாம். அதைப்பற்றி ஒன்றும் கவலை இல்லை. ஆனால், ஒரு நல்ல விஷயத்தை கூறியுள்ளார் என்றால் அது, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கக் கூடாது என்பதுதான். அந்த கருத்தை வரவேற்கிறேன்" என்று கூறியிருந்தார்.
இப்போது மீண்டும் கிருஷ்ணசாமி, விஜய் அரசியல் குறித்து பேசியிருப்பதுடன், அட்வைஸ் ஒன்றையும் கூறியிருக்கிறார்.,,"நடிகர் விஜய் முதலில் ரசிகர்களை நல்வழிப்படுத்துங்கள்.. அரசியலுக்கு வருவதற்கு பதில், மது ஒழிப்பிற்காக வந்து போராட வேண்டும்" என்று கூறியிருக்கிறார் கிருஷ்ணசாமி.
அரசியல் வருகை: ஆக மொத்தத்தில், விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பேயே ஆதரவுக்கரம் நாலாபக்கமிருந்து நீட்டப்பட்டு வருகின்றன.. அதற்கேற்றவாறு, திரையுலகில் தன்னை தூக்கிவளர்த்த விஜயகாந்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்தை சொல்லாமல், திருமாவளவன், அன்புமணி ராமதாஸ் போன்ற தலைவர்களுக்கு திடீரென பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லி, தன்னுடைய அரசியல் வருகையையும் நிரூபித்து கொண்டிருக்கிறார் நடிகர் விஜய்... பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
புஸ்சி ஆனந்த் ஒழிக.. கோஷமிட்ட தவெக நிர்வாகிகள்.. புதுவையில் போட்டியிட சீட் வழங்காததால் ஆதங்கம் -
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான் -
TVK Vs AVK.. விஜய்க்கு எதிராக புதிய கட்சி தொடங்கிய பவர் ஸ்டார்.. ஆரம்பத்திலேயே தடாலடி சவால் -
புதுவையில் தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. மாஜி பாஜக அமைச்சருக்கு சீட் கொடுத்த விஜய்.. முழு லிஸ்ட் -
சினிமாவை விடுங்க.. அரசியலிலும் ரஜினியை காப்பி அடிக்கும் விஜய்? கட்சி நிர்வாகிகளுடன் நடக்கும் மீட்டிங் -
"எம்ஜிஆர் போல இன்னொருவர் வர வாய்ப்பில்லை.." சிவகுமார் திட்டவட்டம்.. பாய்ந்து வரும் விஜய் ரசிகர்கள் -
“உண்மை வெளியானால் விஜய் ஆட்டம் முடியும்”! ரசிகர்களே வெறுப்பார்கள்.. கொளுத்தி போட்ட மோகன் ஜி -
மும்பை பயணம் முடிந்த கையோடு விஜய் எடுத்த முடிவு! புதுவை தவெக வேட்பாளர்கள் பட்டியல் நாளை ரிலீஸ் -
25 டூ 15.. சர்ரென சரிந்த சப்போர்ட்.. விஜய் கோட்டையில் விரிசல்? தவெக சர்வே சொல்லும் ‘ஷாக்’ ரிப்போர்ட் -
பச்சை துண்டு போட்டு விஜய் கத்துனா விவசாயி ஆயிடுவாரா? சூட்டிங் வைத்து 50 பேரை கொன்னுட்டாரு! ஜூலி வீடியோ -
நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. மும்பைக்கு பறந்த விஜய்! பைனான்ஸ் செய்யும் அரசியல் புள்ளியின் வாரிசு -
Election Exclusive: பரபர பனையூர்..சைலண்டாய் லிஸ்டை ரெடி செய்த விஜய்! பாதித் தொகுதி வேட்பாளர்கள் ரெடி? யார் யருக்கு சீட்?












Click it and Unblock the Notifications