என்னாது பாஜகவில் இணைகிறாரா ராதிகா சரத்குமார்? மார்ச் 8 ஞாபகம் இருக்கா? அப்போ அந்த சந்திப்பு என்ன?
சென்னை: நடிகை ராதிகா சரத்குமார், தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் பாஜகவில் இணைகிறாரா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
சினிமா திரைத்துறையில் மட்டுமல்ல நிஜத்திலும் தைரியமானவர் ராதிகா சரத்குமார். ஆணாதிக்கத்திற்கு மத்தியில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் சீரியல்களை எடுத்து ஹிட் கொடுத்தவர். இவர் முன்னாள் முதல்வர் கருணாநிதியை அப்பா என்றே அழைத்து வந்தவர்.

திமுகவில் இருந்த இவர் நிறைய தேர்தல்களுக்கு பிரச்சார பீரங்கியாக இருந்திருக்கிறார். இதன் பின்னர் திமுகவில் ஏற்பட்ட மன கசப்பு காரணமாக அவர் 2006 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பாக கணவர் சரத்குமாருடன் அதிமுகவில் இணைந்தார். இதையடுத்து சில மாதங்களிலேயே அவர் கட்சி விரோத நடவடிக்கைக்காக அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.
பின்னர் சரத்குமார் அகில இந்திய சமத்துவ கட்சி என்ற ஒரு அமைப்பை தொடங்கினார். அந்த அமைப்பின் துணை பொதுச் செயலாளராக 2007 ஆம் ஆண்டு முதல் ராதிகா இருந்து வருகிறார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகின.
இதற்கேற்ப ராதிகா சித்தி 2 சீரியல் இருந்தும் விலகினார். இதனால் அவர் நிச்சயம் தேர்தலில் போட்டியிடுகிறார் என சொல்லப்பட்டது. ஆனால் நானோ ராதிகாவோ தேர்தலில் போட்டியிடவில்லை என சரத்குமார் அறிவித்தார். தற்போது விஜய் டிவிக்காக கிழக்கு வாசல் என்ற ஒரு சீரியலையும் தயாரித்துள்ளார். இடையிடையே தனது கணவருக்கும் அரசியலில் ஆலோசனைகளை ராதிகா வழங்கி வருகிறார்.
இந்த நிலையில் ராதிகா பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல் முருகனின் இல்லத்தில் நடந்த தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட விழாவில் ராதிகா கலந்து கொண்டுள்ளார். அந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டார்.
அங்கு வந்த பிரபலங்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்து வந்த போது ராதிகாவை சந்தித்தார். இருவரும் சிரித்துக் கொண்டனர். ராதிகா வணக்கம் வைத்து பொன்னாடையை பிரதமருக்கு வழங்கினார். எனவே ராதிகா பாஜகவில் இணைகிறார் என ஊகங்கள் தற்போது வெளியாக தொடங்கிவிட்டன. ஆனால் இந்த நிகழ்வில் ராதிகாவை போல் ஏராளமான சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
கணவரின் சமத்துவ மக்கள் கட்சிக்கு ஆலோசனைகளை வழங்கி வரும் ராதிகா, பாஜகவில் எப்படி இணைவார் என்ற கேள்வி எழுகிறது. அண்மையில் கூட மகளிர் தினத்திற்காக திமுக சார்பில் நடத்தப்பட்ட மகளிர் தின விழாவில் ராதிகா கலந்து கொண்டார். இதை பார்த்துவிட்டு கூட ராதிகா திமுகவில் மீண்டும் இணைகிறாரா என்ற கேள்விகள் எழுந்தன. இந்த விழாவில் ஒரு சாதனை பெண்ணாக, சக அரசியல்வாதியாகவே கலந்து கொண்டார் என்கிறார்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் சமக கூட்டணியா என்றெல்லாம் கேள்வி எழுந்தது.
அது போல் ராதிகா வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க முயற்சிக்கலாமே தவிர அவர் பாஜகவில் இணைய வாய்ப்பில்லை என்கிறார்கள். அண்மைக்காலங்களில் பிரபலங்கள் திடீரென அரசியல்வாதிகளை சந்திப்பதும் முதலில் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறுவதும் பிறகு அந்த அரசியல்வாதியின் கட்சியில் இணைவதும் வாடிக்கையாக உள்ளதால் பிரதமருடனான ராதிகாவின் இந்த சந்திப்பு அரசியலாக பார்க்கப்படுகிறது. மரியாதை நிமித்தமாக நடக்கும் சந்திப்புகளை எல்லாமே அரசியலாக பார்க்கக் கூடாது என்றும் கூறுகிறார்கள். எதுவாக இருந்தாலும் இந்த ஊகங்கள் குறித்து ராதிகா பதில் அளித்தால் மட்டுமே தெளிவான கருத்து இருக்கும். அது வரை இப்படியான அனுமானங்கள் ரெக்கை கட்டி பறக்கத்தான் செய்யும்.
-
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications