10 ஆண்டுகளுக்கு பிறகு எதிர்க்கட்சியாகும் அஇஅதிமுக.. திமுகவை போல் ஆக்கப்பூர்வமாக செயல்படுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் வலுவான எதிர்க்கட்சியாக அதிமுக அமரவுள்ள நிலையில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக விளங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பொதுவாக சட்டசபையானாலும் சரி நாடாளுமன்றமானாலும் சரி ஆளும் கட்சி எத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததோ அந்த அளவுக்கு எதிர்க்கட்சியும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

ஆளும் கட்சி செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டவும் ஆளும் கட்சியின் மக்கள் நலத்திட்டங்களை பாராட்டவும் முக்கிய மசோதாக்களை மக்கள் மீது திணிக்க முடியாத அளவுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பதும்தான் எதிர்க்கட்சி.

தேமுதிக

தேமுதிக

தங்களை மக்கள் ஆட்சி அமைக்க தேர்வு செய்யாவிட்டாலும் எதிர்க்கட்சிகள் சட்டசபை மாண்பை காத்திடும் வகையிலும் மக்களின் நம்பிக்கையை காத்திடும் வகையில் நடந்து கொள்வது முக்கியமாகும். அந்த வகையில் இத்தனை நாட்களாக தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக, திமுக, தேமுதிக ஆகியவை சிறப்பாக செயல்பட்டு வந்தன.

சட்டசபை

சட்டசபை

கடந்த 2016 ஆம் ஆண்டு திமுக எதிர்க்கட்சியாக அமர்ந்தது. அன்றிலிருந்து தேர்தலுக்கு முன்பு வரை மக்களுக்கான திட்டங்களுக்கு பாராட்டுவதையும் எதிரான திட்டங்களுக்கு தங்கள் எதிர்ப்பை காட்டியும் வந்தது. எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்கள் குறைகளை கேட்டு அது குறித்து சட்டசபையில் குரல் கொடுத்து சிறப்பாக திகழ்ந்தது திமுக.

திமுக

திமுக

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை அமோகமாக உள்ளதை சுட்டிக் காட்ட சட்டசபைக்கு குட்கா பொருட்களுடன் திமுக எம்எல்ஏ வந்ததை யாராலும் மறக்க முடியாது. அது போல் 7 தமிழர்கள் விடுதலையில் தாமதம், நீட் தேர்வு, எட்டு வழிச்சாலை திட்டம் உள்ளிட்டவற்றில் திமுக தனது எதிர்ப்பை காட்டியது.

திமுகவை விட அதிகரிக்கும்

திமுகவை விட அதிகரிக்கும்

இந்த நிலையில் கடந்த மாதம் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு இடையே முன்னிலை தொகுதிகளில் வித்தியாசம் அதிகம் இருப்பதால் அதிமுகவின் முன்னிலை எண்ணிக்கை திமுகவை விட அதிகரிக்கும் என்பதை சொல்ல முடியாது.

திமுக

திமுக

எனவே அதிமுக எதிர்க்கட்சியாக செயல்படும் என்றே தெள்ளதெளிவாகிறது. அந்த சமயத்தில் திமுகவின் தவறுகளை அதிமுக சுட்டிக்காட்டுமா, திமுகவை போல் சிறந்த எதிர்க்கட்சியாக திகழுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+