கிள்ளுக்கீரை நடிகர்.. அதிமுக, பாஜகவுடன் விஜயும் இணைந்தால் திமுகவுக்கு பெரிய சிக்கலாயிரும்: பிரபலம்
சென்னை: "ஏதோ ஒரு ரூபத்தில் பாஜகவின் குரலாக விஜய் இனி மாறுவார்.. திமுக அரசிடமிருந்து தப்பித்து கொள்வதற்கு பாஜகவிடம் விஜய் சரணடைவதை தவிர வேறு வழியில்லை.. அப்படி பாஜக, அதிமுக விஜய்யை கையில் எடுத்து கொண்டால், அது திமுகவுக்கு பெரும் சிக்கலை தந்துவிடும்" என்று மூத்த பத்திரிகையாளர் மணி தன்னுடைய கருத்தை பேட்டியொன்றில் கூறியிருக்கிறார்.
Tamil Thadam என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் மணி,"விஜய் வீடியோ பேச்சில் சின்ன வருத்தம்கூட இல்லை.. விஜய்யிடமிருந்து தமிழகம் எதிர்பார்ப்பது, "நடந்த துயர சம்பவத்துக்கு தார்மீக முறையில் பொறுப்பேற்கிறேன், என்னை மன்னியுங்கள்" என்ற வார்த்தையைதான்..

விஜய்யிடம் நேர்மை
அப்படியொரு வார்த்தையை சொல்லியிருந்தால், விஜய்யிடம் நேர்மை உள்ளது என்று அர்த்தம்.. ஆனால் அப்படி சொல்லவில்லை.. கரூரில் மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? என்கிறார் விஜய்.. அப்படியானால் அதற்குரிய ஆதாரத்தை வீடியோவில் சொல்ல வேண்டியதுதானே?
பாஜக தரப்பில் நிர்வாகிகள் கரூருக்கு வந்ததுமே, விஜய் வீடியோ போடுகிறார்.. ஹேமமாலினி சொன்னதையே விஜய்யும் சொல்கிறார்.. இதற்கு என்ன அர்த்தம்? விஜய் வீடியோவில் பேசியது பாஜகவின் ஸ்டேட்மெண்ட்டைதான்.. கரூர் சம்பவத்துக்கு ஒரு சதவீதம்கூட விஜய்யிடம் வருத்தம் இல்லை..
மக்களை கிள்ளுக்கீரையாக இந்த 3 வாரங்களில் நடத்தியிருக்கிறார் விஜய்.. லைட்டை ஆன் செய்து நிறுத்திவிட்டு, மக்கள் தனக்காக காத்திருப்பதை ரசிக்கிறார் விஜய்.. எனவே பாவம் செய்திருக்கிறார்.. பாவமன்னிப்பு எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம்.. ஆனால் நேற்று வெளியிட்ட வீடியோ பித்தலாட்டமானது.
தார்மீக பொறுப்பு
கரூருக்கு வந்திருந்தது தவெக கூட்டம்.. அவர்களை அழைத்தது விஜய்தான்.. அப்படியிருக்கும்போது, இறந்தவர்களுக்கு யார் பொறுப்பு? தன் மக்கள் இறந்ததற்குகூட, தார்மீக பொறுப்பேற்கவில்லை என்றால் எப்படி?
முதலில் கரூர் நிகழ்ச்சிக்கு அரசு ஏன் அனுமதி தந்தது? விக்கிரவாண்டி, மதுரை போல தவெக கூட்டத்தை நடத்த சொல்லியிருக்கலாமே? ரோடு ஷோ என்றாலே அங்கு நின்று மக்களிடம் பேசக்கூடாது.. கடந்த வருடம் பாண்டி பஜார் பகுதியில் நடந்த ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு, பொதுமக்களிடம் பேசாமல் பிரதமர் மோடி, கைகளை மட்டுமே காட்டிவிட்டு சென்றார்.
பாஜக, அதிமுக இதை பேச மாட்டாங்களா
கரூரில் அன்று கடைகள் எல்லாம் சேதப்படுத்தியிருக்கிறார்கள்.. கூரைமீது ஏறி நின்று கீழே விழுந்து, வீடுகளுக்கும் சேதாரம் நடந்துள்ளது.. விமான நிலைய சொத்துக்களும் சேதமடைந்துள்ளன.. இதையெல்லாம் விஜய் ரசிகர்கள் பேசுவது கிடையாது.. பாஜக, அதிமுக இதை பற்றி பேச மாட்டாங்களா?
சம்பவத்தன்றும், மறுநாளும், அனைத்து கட்சிக்காரர்களும் கரூர் மருத்துவமனையில் இருக்கிறார்கள்.. ஆனால், தவெகவை காணவில்லை.. காரணம், அந்த கட்சிக்கு எந்த கட்டமைப்பும் கிடையாது. முதல்ல அது ஒரு கட்சியே கிடையாது.
இந்த துயர சம்பவத்துக்கு பிறகுகூட விஜய்க்கான மவுசு ரசிகர்களிடம் குறையவில்லை.. எனவே, விஜய்யின் ஆதரவை அதிமுக, பாஜக தங்கள் பக்கம் இழுக்க பார்க்கிறார்கள்.
பாஜகவின் குரல்
மொத்தத்தில் ஏதோ ஒரு ரூபத்தில் பாஜகவின் குரலாக விஜய் மாறுவார்.. திமுக அரசிடமிருந்து தப்பித்து கொள்வதற்கு பாஜகவிடம் விஜய் சரணடைவதை தவிர வேறு வழியில்லை.. அப்படி பாஜக, அதிமுக விஜய்யை கையில் எடுத்து கொண்டால், அது திமுகவுக்கு பெரும் சிக்கலை தந்துவிடும்.
இனி அடுத்து என்ன நடக்கும்? கரூரில் தவறு செய்தது திமுகதான், தவறு செய்தது செந்தில் பாலாஜிதான் என்று ரிப்போர்ட் ஒன்றை இவர்களாகவே தயாரித்து வெளியிடுவார்கள்.. உடனே தமிழக அரசும், அருணா ஜெகதீசன் தாக்கல் செய்த அறிக்கையை பதிலாக வெளியிடும் கடைசியில் இது அரசியல் சண்டையாக மாறும்.. மற்றபடி சட்டரீதியாக இரு தரப்புக்குமே பாதிப்பு ஏற்படாது.
எப்போதுமே கூட்ட நெரிசல் பலி வழக்குகளில், கோர்ட்டில் நிரூபிப்பது கடினமான ஒன்று.. அதிலும் இந்த வழக்கு சிபிஐக்கு போனால் குறைந்தபட்சம் 5 வருடங்களாகிவிடும்.
எனவே பாஜகவின் நோக்கம் திமுகவை தொந்தரவு செய்வதுதான்.. இதற்கு விஜய் போன்ற நபர்கள் கிடைத்தால், அவரை பயன்படுத்தி கொள்ளத்தான் பாஜக பார்க்கும்.. இந்த உறவு இணக்கமாக இருந்தால், பாஜக, அதிமுகவுடன் விஜய் கூட்டணியும் வைக்க வாய்ப்புண்டு" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications