கண்ணசைத்த அமித்ஷா.. திமுகவின் "பெரிய புள்ளி"யை கட்டம் கட்டும் டெல்லி?.. சீக்ரெட் ரிப்போர்ட்
எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் வியூகம் திமுகவுக்கு சறுக்கலை தருமா என தெரியவில்லை
சென்னை: திமுகவுக்கு செக் வைக்கும் வகையில், அதிமுக - பாஜக இரு கட்சிகள் ரகசிய மூவ்களை எடுத்து வருவதாக சொல்லப்பட்ட நிலையில், அது குறித்த தகவல் ஒன்றுதான் கசிந்து வருகிறது.
திமுக ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி அதன்மூலம் தங்களை நிலைநாட்டிக் கொள்ளவே ஆர்வம் அதிகமாக காட்டி கொண்டு வருகிறது தமிழக பாஜக..
இதற்கு சமீபகால மாநில தலைவர் அண்ணாமலையின் நடவடிக்கைகளே சாட்சியாக விளங்கி கொண்டிருக்கின்றன.. போராட்டம் அறிவிப்பது, ஆர்ப்பாட்டம் செய்வது, மிரட்டுவது, சவால் விடுவது, என பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறார்.

திரைமறைவு
வழக்கமாக, இதையெல்லாம் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகதான் செய்ய வேண்டும் என்றாலும், ஒருசில "திரைமறைவு" சூழல்களால், திமுகவை நேரடியாகவே எதிர்க்க முடியாத இக்கட்டில் உள்ளதாக சொல்லப்படுகிறது.. அதனால்தான், மறைமுகமான வேலைகளை கனகச்சிதமாக திமுகவுக்கு எதிராக காய் நகர்த்தியும் வருவதாக தெரிகிறது.. அந்த வகையில், சென்னை வந்த பிரதமர் மோடியிடம், திமுக மீதான ஊழல் புகார்களையும், குறைகளையும் லிஸ்ட் போட்டு தந்ததாக ஏற்கனவே செய்திகள் வந்தன..

3 பக்க ரகசிய அறிக்கை
அதை பெற்றுக் கொண்டுவிட்டு எந்த பதிலும் சொல்லாமல் பிரதமர் கிளம்பிவிட்டதாகவும், அந்த 3 பக்க ரகசிய அறிக்கை, அமித்ஷா டேபிளுக்கும் சென்றுவிட்டதாகவும் சொல்லப்பட்டன. முன்னதாக, அந்த ரகசிய புகார் அறிக்கையில், என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள திமுகவின் புலனாய்வு டீம் முயன்றுள்ளது.. ஆனால், கடைசிவரை அது தெரியவில்லையாம்.. எனினும், முதல்வர் குடும்பத்துக்கு நெருக்கமான உறவுக்குரியவர் பற்றிதான் பெரும்பாலும் புகார்கள் வாசிக்கப்பட்டிருந்ததாம்..

ரகசிய ரிப்போர்ட்
தேர்தல் - கூட்டணி சமயங்களில் மட்டுமே அவரது பெயர் பலமாக அடிபட்டாலும், டெல்லியை அவர் கவனித்து கொண்டு வருவதால், முதலில் அவருக்கு செக் வைக்க வேண்டும் என்ற அஸ்திரத்தைதான், அதிமுக கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது... இப்போது விஷயம் என்னவென்றால், தனக்கு தரப்பட்ட, திமுகவின் மீதான ரகசிய ரிப்போர்ட் குறித்து நடவடிக்கை எடுக்க தயாராகி கொண்டிருக்கிறதாம் உள்துறை.. இதற்கு நடுவில் திமுகவின் இந்த ஒரு வருட புகார்களை புத்தகமாக ஆளுநரிடம் தரப்போவதாக பாஜக அண்ணாமலை சொல்லி உள்ள நிலையில், ஆளுநர் அந்த புத்தகத்தை வைத்து கொண்டு என்ன முடிவு எடுக்க போகிறார் என்று தெரியவில்லை..

அமித்ஷா
அவர் அமித்ஷாவிடம் அந்த புத்தகத்தை தந்துவிடுவாரா? அல்லது அவரது அதிகாரத்துக்குட்பட்டும், சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டும் நடவடிக்கை எடுப்பாரா? தெரியவில்லை.. இப்படி உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தினமும் கசிந்து கொண்டிருந்தாலும், எல்லாவற்றிற்கும் மேலாக, இவர்கள் இரு தரப்பும் தந்துள்ள புகார்களில் "உண்மைதன்மை" எந்த அளவுக்கு இருக்கிறது என்பதுதான் முக்கியம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. எனினும் இது எதை பற்றியும் கவலைப்படாத திமுகவோ, "மடியில் கனமில்லை" என்றும், பாஜக, அதிமுகவின் சூழ்ச்சிகள் ஒருபோதும் பலிக்காது என்று தெம்பாகவும், நம்பிக்கையுடன் சொல்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications