நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகலா? அழைப்பிதழில் வெளிவந்த சீக்ரெட்.. காளியம்மாள் பரபர விளக்கம்!
சென்னை: நாதகவில் இருந்து விலகும் முடிவு குறித்து விரைவில் அறிவிப்பேன் என்று அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கவுள்ள காளியம்மாள், அந்த நிகழ்ச்சியின் அழைப்பிதழில் நாதக பொறுப்புகளை போடவில்லை. சமூக செயற்பாட்டாளர் என்று குறிப்பிடப்பட்டிருப்பதால், ஏற்கனவே விலகிவிட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் தவெகவில் இணைவார்கள் என்று கூறப்பட்டு வந்தது. இதனிடையே நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான அதிருப்தி காரணமாக அக்கட்சியில் இருந்து ஏராளமானோர் விலகுவதாக அறிவித்தனர்.

கடந்த 6 மாதங்களில் நாதகவில் இருந்து விலகுவோரின் தொடர்பான செய்திகள் ஒவ்வொரு நாளும் வெளியாகி வருகிறது. இதனிடையே நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான காளியம்மாளை கடுமையாக பேசும் ஆடியோ ஒன்று வெளியாகியது. இந்த ஆடியோ வெளியாகும் முன்பே காளியம்மாள் நாதக கட்சி நிகழ்ச்சிகளில் தீவிரமாக பங்கேற்பதை தவிர்த்து வந்தார்.
இதனால் நாதகவில் இருந்து காளியம்மாள் விலகுவதாக தகவல் வெளியாகியது. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வடசென்னை தொகுதியில் போட்டியிட்டு பலரின் கவனத்தையும் ஈர்த்தவர் காளியம்மாள். அந்த தேர்தலில் காளியம்மாளின் அதிரடி பேச்சும், பிரச்சாரமும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அந்த தேர்தலில் தோல்வியடைந்தாலும், காளியம்மாள் செயல்பாடுகள் தொடர்ந்து கவனம் பெற்றது.
தற்போது காளியம்மாள் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார். சீமான் உடனான கருத்து வேறுபாடு காரணமாக நாதகவில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியது. அதேபோல் தவெகவில் விரைவில் இணையவுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு அருகே நடக்கும் நிகழ்ச்சியின் அழைப்பிதழில் காளியம்மாள் பெயர் இடம்பெற்றுள்ளது.
காளியம்மாள் பெயருக்கு கீழ் நாதக பொறுப்பு இடம்பெறாமல், சமூக செயற்பாட்டாளர் என்ற அடைமொழி இடம்பெற்றுள்ளது. இதே நிகழ்ச்சியில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளும் பங்கேற்கவுள்ளனர். இதனால் காளியம்மாள் நாதகவில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த அழைப்பிதழ் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
இதுகுறித்து காளியம்மாள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் முடிவு குறித்து விரைவில் அறிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார். இதனால் நாதகவில் இருந்து விலகிய பின் எந்த கட்சிக்கு காளியம்மாள் சென்று இணைவார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications