ஆ! அதிர்ந்த ஆல் ரவுண்டர்.. குழம்பிய ரோஹித்! அணியிலிருந்து வெளியேறும் வீரர்! தமிழருக்கு அடிக்கும் லக்
சென்னை: 2023 உலகக் கோப்பை தொடரில் மீதம் உள்ள போட்டிகளில் இந்திய அணியில் முக்கியமான சில மாற்றங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா வங்கதேசம் மேட்சில் நடந்த சம்பவம் ஒன்று விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆட்டம் தொடக்கத்தில் இருந்து நிதானமாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த போட்டியில் 43 ஓவருக்கு 201-6 ரன்கள் எடுத்து வங்கதேசம் அணி ஆடி வருகிறது.
தொடக்கத்தில் அதிரடியாக ஆடிய வங்கதேசம் அணி தற்போது விக்கெட்டுகளை இழந்து திணற தொடங்கி உள்ளது. இந்த போட்டியில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா காயம் அடைந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹர்திக் பாண்டியா: ஹர்திக் பாண்டியா பவுலிங் செய்த போது அவர் காலால் பந்தை தடுக்க முயன்றார். அப்போது தடுக்கி விழுந்த ஹர்திக் பாண்டியா இன்னொரு கால் மேல் மடங்கி அமர்ந்தார். இதில் அவரின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
கீழே விழுந்து துடித்த ஹர்திக் பாண்டியா ஆ.. ஆ என்று கத்தினார். அதன்பின் மைதானத்திற்குள் வேகமாக பிசியோ ஓடி வந்தார். அவருக்கு உடனே சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கேயே அவருக்கு காலில் கட்டு போடப்பட்டது. கட்டு மேல் கட்டு போடப்பட்டது .
கடைசியில் அவர் கட்டு போட்டு மீண்டும் பவுலிங் போட வந்தார். அதன்பின் ஓடி போய் பவுலிங் போட ஹர்திக் முயன்றார். ஆனால் அவரால் ஓட முடியவில்லை. இதனால் மீதம் இருந்த பந்துகளை கோலி போட்டார். அதோடு ஹர்திக் பாண்டியா உடனே மைதானத்தை விட்டு வெளியே சென்றார்.
ஹர்திக் பாண்டியா காயம்: இதை அனைத்தையும் அதிர்ச்சியோடு ரோஹித் பார்த்துக்கொண்டு இருந்தார். இதையடுத்து ஹர்திக் பாண்டியா தற்போது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரின் காலில் சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது.
( ஸ்க்ரீனில் தோன்றிய 3 சிவப்பு.. அப்படியே மாறிய ரோஹித் முகம்.. இந்தியா - வங்கதேசம் மேட்சில் அதிர்ச்சி)
அவருக்கு உடனே ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. அவரின் ஸ்கேன் முடிவுகள் வந்த பின் முடிவு எடுக்கப்படும். அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் அணியில் இருந்து சில போட்டிகளுக்கு ஹர்திக் பாண்டியா வெளியேற வாய்ப்புகள் உள்ளன.
உள்ளே வரும் தமிழர்: இதையடுத்து அடுத்த போட்டிகளில் ஸ்பின் பவுலிங் ஆல் ரவுண்டர் அஸ்வின் அணிக்குள் வர வாய்ப்புகள் உள்ளன. அஸ்வின் முதலில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மட்டுமே ஆடினார். அதன்பின் ஆடவில்லை. இந்திய பிட்ச் ஸ்பின் பவுலிங்கிற்கு ஏற்றது என்றாலும் அஸ்வின் எடுக்கப்படவில்லை.

இப்போது ஹர்திக் காயம் காரணமாக அஸ்வின் மீண்டும் அணிக்குள் வரும் வாய்ப்புகள் உள்ளன. இந்த தொடரில் இந்தியா அடுத்தடுத்து 3 போட்டிகளில் வென்றுள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா என்று வரிசையாக இந்தியா வென்றுள்ளது. இன்று வங்கதேசம் இந்தியா மேட்ச் நடக்கிறது. இதில் வெங்கடெஸ்மா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதில் முதலில் பேட்டிங் இறங்கிய வங்கதேசம் நிதானமாக ஆடிக்கொண்டு இருக்கிறது. விக்கெட்டை இழக்க கூடாது என்பதற்காக நிதானமாக வங்கதேசம் அணி ஆடிக்கொண்டு இருக்கிறது.
இந்திய அணி: இன்று ஆடும் இந்திய அணியில், ரோஹித் சர்மா (கேப்டன் ), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வி.கே), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இன்றும் அணியில் அஸ்வின் எடுக்கப்படவில்லை. வங்கதேச அணியில், லிட்டன் தாஸ், டான்சித் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேட்ச்), மெஹிதி ஹசன் மிராஸ், தவ்ஹித் ஹ்ரிடோய், முஷ்பிகுர் ரஹீம் (வாரம்), மஹ்முதுல்லா, நசும் அகமது, ஹசன் மஹ்மூத், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம் ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications