சிஏஏவை கைவிட கோரி மத்திய அரசை வலியுறுத்துவோம்.. அதிமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி!
சென்னை: குடியுரிமை சட்ட திருத்தத்தை கைவிட கோரி மத்திய அரசுக்கு வழியறுத்துவோம் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக தேர்தல் அறிக்கை தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு வெளியாகி உள்ளது. திமுக தேர்தல் அறிக்கை வெளியான நிலையில் முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அதிமுக அறிக்கையை நேற்று வெளியிட்டனர்.

இந்த அறிக்கையில் இலவச வாஷிங் மெஷின், இலவச மின் அடுப்பு போன்ற பல்வேறு இலவச திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்களர்களை கவரும் வகையில் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்றும் அதிமுக வாக்குறுதி அளித்துள்ளது. அதேபோல் அதிமுக முன்பு ஆதரித்து வந்த திட்டங்களுக்கு எதிராகவும் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த வரிசையில் குடியுரிமை சட்ட திருத்தமான சிஏஏவை கைவிட கோரி மத்திய அரசுக்கு வலியுறுத்துவோம் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்தில் திருத்தத்திற்கு அதிமுக தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தது. இதனால் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் இல்லை, தேசிய பாதுகாப்பிற்கு இது முக்கியம் என்று அதிமுக கூறி வந்தது.
அதோடு ராஜ்யசபாவில் அதிமுக எம்பிக்கள் இந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்து வெற்றிபெற வைத்தனர். இந்த நிலையில் குடியுரிமை சட்டத்தில் திருத்த மசோதாவை திரும்ப பெற வைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று அதிமுக கூறியுள்ளது. மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் இந்த திட்டத்திற்கு எதிராக குரல் கொடுப்போம் என்று அதிமுக தனது வாக்குறுதியில் குறிப்பிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications